online@kalkiweekly.com

அன்பு வட்டம்

– அனுஷா நடராஜன்

மங்கையர் மலர் புதிய வடிவில் உருவாகி உள்ளதால் வாசகியரின் வரவேற்பு எப்படி உள்ளது?
– சரஸ்வதி, நெசப்பாக்கம்
வாரா வாரம் ஆரவாரம்! நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்போ சிறப்பு! எனக்கும் ரொம்ப சந்தோஷம், சரஸ்வதி மேடம். இந்த மாற்றம் எப்பவோ நடக்க வேண்டியது. இப்போது சாத்தியமாகியுள்ளது. ‘மூவ் வித் தி வேவ்’ என்பார்களே, அது நடந்துள்ளது. நாமெல்லாம் புதிய மின் அலை மேலே!

காரணம் 5.

*டிஜிட்டல் பத்திரிகைகள் இகோ – ஃப்ரென்ட்லி! காகிதம் செலவில்லை; மரங்கள் வெட்டப்படுவது மிச்சம்! சுற்றுச் சூழலுக்கு நன்மை.

* ‘இன்ஃபர்மேஷன் ஈக்வாலிட்டி’ நடந்தேறுகிறது. ஒரு பத்திரிகையை அச்சிடப்படும் மாநகரங்களில் இருப்பவர்கள் உடனே படிக்க முடியும். ஆனால். வேறு மாநிலங்களிலோ, கிராமப்புறங்களிலோ விநியோகிக்கப்பட மூன்று நாட்களாவது ஆகும். ‘இ’ – பத்திரிகையை உலகம் முழுக்க இருப்பவர்கள் ஒரே சமயத்தில் படித்து விடலாம், சுடச்சுட! இதனால வாசகர் வட்டம் ஜம்முன்னு விரியும். மேட்டரும் பழசாகாது!

* புத்தகம் என்றால் கடைக்குப் போய் வாங்கணும். கையோடு கொண்டு போகணும். ஆனா, டிஜிட்டல் வடிவத்தை எப்ப வேணும்னாலும், எங்க வேணும்னாலும் படிக்கலாம். என்ன, கையில செல்ஃபோனோ, லேப்-டாப்போ இருக்கணும். சிம்பிள்! நோ அலைச்சல்; ஒன்லி அப்டேஷன்!

* விளம்பரதாரர்களுக்கும் படு குஷிதான்! புதிய சலுகை, தள்ளுபடி, புது வரவு, சீசன் விற்பனை, ‘ஆர்டர் நெள’ என எல்லா வர்த்தகமும் விரல் நுனியில் முடிந்து போகிறது.

* நிறுவனத்துக்கும் லாபம். காகிதம், மை, அச்சு, விநியோகம் என செலவு குறைகிறது. மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்பிலும் வலம் வருவதால் பத்திரிகை ஃபேஸ் வேல்யூ அதிகமாகிறது.

இது போதாதா புதிய வடிவத்தை ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து வரவேற்க? தட்டு கொண்டாங்க! உம் சுத்துங்க!

‘விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்பட்டு விட்டதே?
– மாலா மணிசுந்தரம், கோவை

மகனை எப்படியாவது சி.எம். ஆக்கி அழகு பார்க்கணும்னு அப்பாவுக்கு ஆசை!
ஆனால் மகனுக்கோ, கமல், ரஜினி, சிரஞ்சீவி போன்றோரைப் பார்த்து திகில் பிகில்!
விஜய்ண்ணா! நீங்க முன் ஜாக்கிரதை முத்தண்ணா!
ஓகேங்கண்ணா! சஞ்ஜய்ய ரெடி பண்லாம்ணா!

அந்தக் காலத்தில் பலர் தபால் தலைகளைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தோம். நீங்க சின்ன வயசுல என்ன சேகரிச்சீங்க?
– வாசுதேவன், பெங்களூரு
ஆடு, மாடு, கோழி, நாய், முயல், ஆமை, காண்டாமிருகம், சிங்கம், புலின்னு வெயிட்… வெயிட்… பதறாதீங்க… குட்டிக்குட்டியா ‘பினாகா’ டாய்ஸ் சேகரித்துள்ளேன். ‘பினாகா’ பற்பசையுடன் கலர் கலராக பிளாஸ்டிக் பொம்மைகள் வரும். அதை கலெக்ட் செய்யணும்னே அதிகப்படியா பற்பசையைப் பிதுக்கி எடுத்துச் செலவழிப்போம்!

அப்புறம் ஹை-ஸ்கூல் டயத்துல, தீப்பெட்டி அட்டைகளைச் சேர்க்குற பித்து பிடிச்சது. ‘வெட்டுப்புலி, இரட்டைக் கிளி’ தவிர, ஏகப்பட்ட ஓவியங்கள்… யாருப்பா வரைஞ்சது? பெயர் அறியா அந்த ஆர்ட்டிஸ்கள் எல்லாம் இப்ப எங்க?

விவேகானந்தர், சூலம் ஏந்திய பாரத மாதா, ஒரே முட்டை ஓட்டில் இரட்டைக் குஞ்சுகள், இந்தி நடிகை நூர்ஜஹான், சுகன்யா, கன்னட நடிகர் ராஜ்குமார்… அட, நம்ப பழனியாண்டி முருகன்? இப்படி கட்டுக்கட்டா சேர்த்து வைப்போம்! சிலது உங்க பார்வைக்கு…

ஆனா இப்ப, ஸ்டாம்ப், பினாகா டாய்ஸ், தீப்பெட்டி அட்டை எல்லாமே அமேஸானில் அப்படியே செட்டாகக் கிடைக்கிறது.

தெருத் தெருவாகச் சுற்றி, தோழிகளுடன் எக்ஸ்சேஞ்ச் பேரம் பேசி, புதுசா ஒண்ணு கிடைச்சுட்டா, அதைப் பொக்கிஷமா ரசிச்சு, அலம்பல் செய்தோமே… அந்தத் த்ரில் இதுல கிடைக்குமா?

ஒ.டி.டியில் நீங்கள் படம் பார்ப்பது உண்டா?
– ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
வந்த புதுசுல, நானும் ஆத்திரம் ஆத்திரமா செம ஆர்வத்துடன் பார்த்தேன். ஆனா இப்ப, ஓடாத மொக்கைத் திரைப்படங்களை எல்லாம் சல்லிசா ரேட் பேசி, நம்பப் பையில திணிக்கிறாங்கன்னு புரிஞ்சுடுச்சுல்ல? சுதாரிச்சுக்கிட்டேன்!

ஆனா போன வாரம், எனக்குத் தெற்குல சூலம், மோசமான சந்திராஷ்டமம் போல! மறுபடி மாட்டிக்கிட்டேன். ‘துக்ளக் தர்பார்’, ‘லாபம்’, ‘அனபெல்லா’ன்னு மூணு விஜய் சேதுபதி படங்களைப் பார்த்து, ‘காதல்’ பரத் மாதிரி, ‘ஙே ஙே…’ன்னு திரிஞ்சேன்! ட்ரிப்ஸ் ஏறுது!

நீட் தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்க என்ன வழி?
– எஸ்.கெஜலட்சுமி, லால்குடி
நீட் தேர்வே மன அழுத்தம் தருதுன்னா, அப்புறம் எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ். தேர்வெல்லாம் எப்படி எழுதுவீங்க? எப்படி மருத்துவம் பார்ப்பீங்க? அதனால கல்வித் தரத்தை உயர்த்தறதும், ‘கான்செப்ட்’ புரிஞ்சுக்கிட்டு படிக்கிறதும்தான் ஒரே வழி. நோ குறுக்கு வழி! பணம் புரட்டவும், பிரகாசிக்கவும் எத்தனையோ துறைகள் இருக்க, ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’னு பெற்றோர்களும் அடம் பிடிக்காமல் இருப்பதும் ரொம்ப ரொம்ப நல்ல வழி! ஓகே டியர்?

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

அன்பு வட்டம்!

நீங்க ஒ.டி.டி.ல வீட்டுல உட்கார்ந்து நிம்மதியா குடும்பத்தாரோட செலவில்லாமல் படம் பார்க்க விரும்புகிறீர்களா? இல்ல, தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக்கிட்டே நண்பர்களோட சந்தோஷமா படம் பார்க்க விரும்புகிறீர்களா? - தி.வள்ளி, திருநெல்வேலி நான், தியேட்டர்ல கைமுறுக்கு, தட்டுவடை...

அன்பு வட்டம்!

ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் பெண் குழந்தையின் ஸ்டைல் நடையை ரசித்தீர்களா அனுஷா மேம்? - ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில் நடையை விடுங்க... 'ஹார்லிக்ஸ்?'னு அம்மா ஆச்சரியத்துடன் கேட்டதும், ‘நயி... பாலக் பனீர்’ (தமிழ்ல கீரைப் பொரியல்)னு...

சுண்டல் சுவை கூட..

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க - ஆர்.ஜெயலெட்சுமி * சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊறவைத்த பின்பு, வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும். * பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும்போது...

எந்தையும் தாயும்!

0
கதை : ரேவதி பாலு, ஓவியம் : ரமணன் "சுந்தரி! பேசாம இந்த சைக்கிளை மணிக்குக் கொடுத்துடலாமா? பாவம்! மாமிக்கு உபகாரமா இருக்குமே?" சுந்தரி திகைத்துப்போனாள். அவள் உள்மனதில் தன் பிள்ளை அம்பி பெரியவனானதும் அவனுக்கு...

ஒரு வார்த்தை!

0
- அனுஷா நடராஜன்
spot_img

To Advertise Contact :