0,00 INR

No products in the cart.

அன்பு வட்டம்

வேகமாக வளர்ந்து வரும், ‘பொன்னியின் செல்வன்’ ஆவலை அதிகரித்துள்ளதே!
அனுஷா நடராஜன்

வேகமாக வளர்ந்து வரும், ‘பொன்னியின் செல்வன்’ஆவலை அதிகரித்துள்ளதே! – வாசுதேவன், பெங்களூரு

காதல், நட்பு, வீரம், மர்மம், சூழ்ச்சி என ரசவாத வித்தை புரியும் அற்புதப் படைப்பு, அமரர் ‘கல்கி’யின் ‘பொன்னியின் செல்வன்.’எம்.ஜி.ஆர்., கமல் என யார் யாரோ முயற்சித்து கடைசியில் மணிரத்னம் கையில் வந்திருக்கிறது.

என்னுடைய கவலையெல்லாம்…

* கடந்த பல வருடங்களாக மணிரத்னத்தின் படங்கள் எல்லோமே படு ஃப்ளாப்! இந்தப்படம் பிழைக்குமா?

* அவரது ஸ்டைலே, இருட்டான பின்னணியில், ‘ஆமா?’,‘என்ன?’,‘இல்ல’ என ஒற்றை வரி வசனங்கள்தான். இதெல்லாம், ‘பொன்னியின் செல்வன்’ல் எடுபடுமா?

* சோழ சாம்ராஜ்யத்தில் அமரர் கல்கி உலாவவிட்ட கதாபாத்திரங்களும் வசனங்களும் உயிர்ப்போடும், உவகை தருவதாகவும் இருக்கவேண்டும். இருக்குமா?

* த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகையரின் முகத்தில் குந்தவை, நந்தினி கதாபாத்திரங்களின் கவர்ச்சி தோன்றுமா? இல்லை முதிர்ச்சிதான் பிரதிபலிக்குமா?

* பல மொழிகளில் வெளியாவதாலோ என்னவோ, `Son of Cauvery` என்று முதலில் வைத்துவிட்டு, `PS1`என தலைப்பை மாற்றிவிட்டார்கள். எனக்கு அப்பவே ஆர்வம், ‘புஸ்!’

‘பொன்னியின் செல்வன்’அதே தலைப்பில், தமிழ்ப்படமாகவே வந்து உலகத்தரத்தில் பேசப்படணும் என்றுதான் எனக்கும் ஆசை! ‘ஒரிஜினல் நாவலுக்கு ஜஸ்டிஃபை பண்றது எல்லாம் ரொம்பவே கஷ்டம்! ஒரு வேளை, அப்படி எடுத்து அது அதிரிபுதிரி ஹிட் அடித்துவிட்டால், அதிசயமே அசந்துபோகும் அதிசயம்தான்! நிறைய பணம், பல வருட உழைப்பு, தேர்ந்த கலைஞர்கள், கூடவே தமிழர்களின் புகழ் பாட நல்லதொரு வாய்ப்பு…! மணி ஸார் சூரியனுக்கே டார்ச் அடிக்கிறீங்க! ப்ளீஸ்… ஏமாத்திடாதீங்க!

ஆடித் தள்ளுபடி ஸ்பெஷல்ல நீங்க என்ன வாங்குனீங்க அனுஷா? – என்.மணிமேகலை, புவனகிரி

ஏம்மா, மணி… அந்தத் தள்ளுமுள்ளுல போய் கொரோனா வாங்கிட்டு வராம இருந்தா போதாதாம்மா? என்னம்மா… இப்படிப் பண்றீங்களேம்மா!

அன்பு அனுஷா, ஆகஸ்ட் 24 அன்று சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நீங்க உணர்ந்தீங்களா? – பானு சுரேஷ், அமெரிக்கா

ஆஹா! கேட்டீங்களே ஒரு கேள்வி, அமெரிக்காவுல உட்கார்ந்துக்கிட்டு! ஏதோ பிளேட்டாம்! அது அப்படிக்கா, இப்படிக்கா சும்மா நகர்ந்துடுச்சாம்! பூகோள அமைப்புப்படி, நம்ப சென்னை இருக்குற ஜாதகக் கட்டத்துல நிலநடுக்கம் வர்ற அம்சம் எதுவும் இல்லியாம்! ஆனா, நில நடுக்கம் வந்ததைக் கேள்விப்பட்ட எங்க வீட்டுக்காரர், ‘நீ ஏதும் ஸ்கிப்பிங் கிப்பிங் ஆடுனியா?’ன்னு என்னை சீரியஸா கேட்டாரு பாருங்க! அப்பதான் ஒரு பூகம்பம் நிஜமாவே வந்தது! ரிக்டர் அளவு எக்கச்சக்கம்!

அனு சமீபத்தில் பார்த்து வியந்த நபர்? – மீ.யூசுப் ஜாகீர், வந்தவாசி

நடிகர் விவேக்! எங்க பார்த்தீங்கன்னுதானே கேக்கறீங்க? ‘எங்க சிரி பார்ப்போம்’னு ஒரு புது சீரிஸ், ‘அமே ஸான் ப்ரைம்’ல பார்த்தேன். அது ஒரு காமெடி ரியாலிடி ஷோ! அதுல ஆங்கராவும் ஜட்ஜாவும் வந்து டீசன்டா காமெடி பண்ணிட்டுப் போனார்! ஒரு சின்ன ஃபிளாஷ் அடிப் போமா? விவேக் கீ போர்ட்ல வாசிக்கிற மாதிரி கைய வெச்சு துழாவிக்கிட்டு பந்தாவா இருப்பார். அந்தப் பக்கமா வர்ற நம்ப மிர்ச்சி சிவா, ‘ஸார்… கீரவாணி சூப்பர்!’னு பாராட்டுவார்.

அதிர்ச்சியாகிற விவேக், ‘இல் லப்பா… நான் வாசிக்கலை; கீ போர்ட்ல தூசியா இருந்துச்சு; அதான் துடைச்சேன்!” என்பார்.அடுத்த சில விநாடிகளில் நிஜ மாகவே ஒரு ட்யூனை கீ போர்டில் லயித்தபடி முகபாவமெல்லாம் காட்டி இசைப்பார். ‘சார், கீ போர்ட் துடைச்சது போதும்! எழுந்துவாங்க!’ன்னு சிவா கலாய்ப்பார்! அப்போது விவேக் தரும் ஷாக் ரியாக்ஷன், ரியல்லி ஹியூமரஸ்லி இன்னொஸன்ட்!

அது மட்டுமல்ல, எல்லா ஜூனியர் போட்டியாளர்களிடமும் ஏகப்பட்ட கவுன்டர்களை தந்தும், பெற்றும் கொண்ட பெருந்தன்மை, தட்டிக்கொடுத்த விதம், சிரித்த முகம்… எல்லாமே வியக்க வைத்தது! குறிப்பாக, சிவாவை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் மாட்டிவிட்டு நழுவும்போது, ‘60 வயசுலயும் இப்படி ஜாலியா இருக்காரே! ஐமீன் இருந் தாரே!’ன்னு தோன்றியது. வி மிஸ் யூ விவேக்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...