online@kalkiweekly.com

அருள்வாக்கு

பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம்
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும். ‘சந்தன’, ‘க்ஷீர’ என்ற வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிவதால், அவற்றோடு ‘அபிஷேகம்’ என்று ‘அ’காரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில் ‘அ’காரங்கள் சேர்ந்து ஒரு நெடில் ‘ஆ’காரமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்’ என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன. ‘பால்’ என்கிற வார்த்தை ‘அ’காரத்தில் முடியாமல் ‘ல்’ என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது. அதோடு ‘அபிஷேகம்’ சேரும்போது, ல்+அ என்பது (குறிலான) ‘ல’ ஆகத்தான் வருமாதலால் ‘பாலபிஷேகம்’ என்றுதான் ஆகும்.

தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்’ ஆகுமே தவிர ‘தேனாபிஷேகம்’ இல்லை. இதே மாதிரிதான் ‘ஷடாக்ஷரம்’ என்பதும் தப்பு. ஷடக்ஷரம்தான் சரி. பஞ்ச + அக்ஷரம் – பஞ்சாக்ஷரம்; அஷ்ட + அக்ஷரம் – அஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட்+அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்.

கோவின் மலமும் பவித்ரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். சாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ சமதையான மகான்களிடம் பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள் கிறோம். கோதூளியும் அப்படியே. சாயங்காலத்தில் கோக்கள் மந்தை யாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ணிய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது.

புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ணியஸ்நானமாக இருக்கிறது! பாலகிருஷ் ணனே அப்படிப் புழுதியில் திளைத்தாடினான் – ’கோதூளி தூஸரித’னாக இருந்தான் என்று வர்ணித்திருக்கிறது. எப்பொழுதும் அப்படிப் புழுதி படிந்திருப்பதே அவனுக்கு ஒரு ஸௌபாக்ய சோபையை உண்டாக்கிற்று. ‘சச்வத் கோகுர நிர்தூதோத்தத-தூளீ-தூஸர ஸௌபாக்யம்’ –(கோவிந்தாஷ்டகம்-5) என்று ஆசார்யாளே பாடியிருக்கிறார். அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக்கொண்டு கொட்டில் திரும்புகிற சாயங்காலத் தையே ‘கோதூளி லக்னம்’ என்று விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.

கோமாதா, பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதி யையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்

0
அருள்வாக்கு சிவ – விஷ்ணு அபேதத்தைக் காட்டும் ஸ்தலங்கள் பல உள்ளன. திருநெல்வேலிச் சீமையில் சங்கர நாராயணன் கோயிலும், (‘சங்கர நயினார் கோயில்’ என்று தப்பாகச் சொல்கிறார்கள்.) மேற்கே ஹரிஹர க்ஷேத்திரத்திலும் இவ்விரண்டு மூர்த்திகளும்...

அம்மா

1
அருள்வாக்கு தாயன்பைப்போலக் கலப்படமே இல்லாத பூரணமான அன்பை இந்த லோகத்தில் வேறெங்குமே காண முடியவில்லை. பிள்ளை எப்படி இருந்தாலும், தன் அன்பைப் பிரதிபலிக்காவிட்டாலும்கூட, தாயாராகப் பட்டவள் அதைப் பொருட்படுத்தாமல் பூரணமான அன்பைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறாள்....

அருள்வாக்கு

1
நவராத்திரி நாயகியர் நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகா லக்ஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா...

அந்தரங்க சுத்தம் அவசியம்

0
அருள்வாக்கு காஞ்சி மகா சுவாமிகள் ‘அனைத்து அறன்’, அதாவது சர்வ தர்மமும் என்னவென்றால் அவரவரும் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’, அதாவது, தங்கள் மனசைத் தாங்களே துளிகூட அழுக்கில்லாமல் நிர்மலமாகச் சுத்தம் செய்துகொள்வதுதான் என்கிறார் திருவள்ளுவர். கர்மானுஷ்டானத்தால்...

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...
spot_img

To Advertise Contact :