அறிவோம் டென்னிஸ் – க்ராண்ட்ஸ்லாம்!

அறிவோம் டென்னிஸ் – க்ராண்ட்ஸ்லாம்!
Published on

-மீனலதா

12–13ஆம் நூற்றாண்டில் கைகளினால் பந்தை அடித்து விளையாடியதை 'Game of Palm' என்று குறிப்பிட்டனர். இது French Hand ball ஆகும்.
16ஆம் நூற்றாண்டில் பந்தை அடித்து விளையாட Racket (மட்டை) அறிமுக மானது. ஃப்ரெஞ்ச் வார்த்தை `TENZI'யிலிருந்து உருவானது, 'டென்னிஸ்.'
டென்னிஸ் பந்து :
மஞ்சள், லைட் பச்சை, வெள்ளை நிறத்தில் இருந்தாலும், வெள்ளை அல்லது மஞ்சள் நிறமே அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் சுற்றளவு 2.50''விலிருந்து 2.70'' வரையிலும், எடை 1.975லிருந்து 2.095 ounces வரை யிலும் இருக்க வேண்டும்.
நான்கு விதம் :
நான்கு விதங்களாக Racketல் பந்தை அடித்து விளையாடலாம். அவை : Flat; Kic; slice; under handed ஆகும்.
க்ராண்ட்ஸ்லாம் :
எத்தனையோ டென்னிஸ் போட்டிகள் வருடம் முழுவதிலும் நடந்தாலும், க்ராண்ட்ஸ்லாம் போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலம். வருடத்தில் நான்கு க்ராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
'ஆஸ்திரேலியன்' ஜனவரியிலும், 'ஃப்ரெஞ்ச் ஓப்பன்' மே-ஜூனிலும், 'விம்பிள்டன்' ஜூன்-ஜூலையிலும், 'யு.எஸ்.ஓபன்; ஆகஸ்ட்-செப்டம்பரிலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு க்ராண்ட்ஸ்லாமும் இரண்டு வாரங்களுக்கு மேல் நடைபெறும்.
இதன் பரிசு விபரம் : (ஒற்றையர் பிரிவு ஆடவர் / பெண்டிர்)
முதல் பரிசு – $ 2,500,000 ($ 2.5 மில்லியன்)
இரண்டாவது பரிசு – $ 1,25,000 மற்றும் கோப்பை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com