
– எம். வசந்தா, சென்னை
தேவை:
துருவிய கேரட் – 1 கப்,
நெய்யில் வறுத்துப் பொடித்த அவல் – 1/4 கப்,
சர்க்கரை – 3 கப்,
பால் – 1 கப்,
நெய் – 1/4 கப்
ஊற வைத்து அரைத்த முந்திரி விழுது – 4 ஸ்பூன்,
ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன்,
முந்திரி – 5
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கேரட் விழுதை ஈரம் போக வதக்கவும். குக்கரில் வதக்கிய கேரட் துருவலுடன் பால் சேர்த்து ஒரு விசில் வேக விடவும். வேக வைத்த கேரட்டுடன் அவல் சேர்த்து கிளறவும்.
பால் வற்றியவுடன் சர்க்கரை, முந்திரி விழுது, வறுத்த முந்திரி, நெய், ஏலப்பொடி சேர்த்து கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கவும். சூப்பரான அவல் கேரட் அல்வா ரெடி.
…………………………………..
கேரட் கோலா :
தேவை:
கேரட் துருவல் – 1 க்ப்,
தேங்காய் துருவல் – 1 கப்,
பொட்டுக்கடலை – அரை கப்,
சின்ன வெங்காயம் – 10,
பூண்டு – 5,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிட்டிகை,
கசகசா, சோம்பு – தலா 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிது,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
பொட்டுக்கடலையை தூளாக அரைக்கவும். கேரட் துருவல், தேங்காய் துருவலுடன் கசகசா, சோம்பு, மிளகாயத் தூள், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், பூண்டு சேர்த்து அரைக்கவும்.
இந்தக் கலவையுடன் அரைத்த பொட்டுக்கடலை மாவு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சுவையுடன் சூப்பரான கேரட் கோலா ரெடி.