online@kalkiweekly.com

ஆசிரியப் பணி… ஆச்சர்யப் பின்னணி!

சந்திப்பு : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

றந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், செட்டிக்காடு கிராமம். அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை லீமா ரோஸ்லிண்ட். ஆசிரியப் பணியில் அவர் சேர்ந்து முப்பது ஆண்டுகள் ஆகப்போகிறது. குறிப்பிட்ட பள்ளியின் தலைமையாசிரியையாகப் பொறுப்பேற்று பதினான்கு ஆண்டுகள் ஆகின்றன. அவரது கணவர் அருள்நாதன், செட்டிக்காடு கிராமக் கல்விக் குழுவினை உருவாக்கி, அவ்வப்போது தன்னார்வல ஆசிரியராகவும் சேவை செய்து வருகிறார். லீமாவிடம் ஒரு நேர்காணல்.

உங்கள் குடும்பத்தை, `ஆச்சர்ய ஆசிரியக் குடும்பம்`னு சொல்லலாமா?
நான், என் அம்மா, என் அத்தை என நங்கள் மூன்று பேரும் வேறு வேறு ஆண்டுகளில் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளோம். என் அப்பாவும் ஆசிரியர். சர்வீசில் இருந்தபோதே அவர் இறந்து விட்டார். அதன் கருணை அடிப்படையில் எனக்கு ஆசிரியப் பணி அமைந்தது. என் அப்பா, தான் இந்த ஆசிரியப் பணியில் எங்கள் குடும்பத்துக்கே குருநாதர். 1974ல் என் அம்மா ஆரோக்கியமேரி, டெல்லியில் குடியரசுத் தலைவர் அவர்களிடம் சிறந்த ஆசிரியை விருது வாங்கினார். அப்போது அதற்கு, `தேசிய நல்லாசிரியர்’ என்கிற அடைமொழி ஏதும் இல்லை. அப்போது தேசிய அளவில் அந்த விருது பெறுவதெல்லாம் அபூர்வம். அடுத்து, என் அத்தை 1997ல் மாநில நல்லாசிரியை விருது பெற்றுள்ளார். இப்போது 2021ல் மாநில நல்லாசிரியை விருதை நான் பெற்றுள்ளேன்.

ஒரு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அப்படி என்னதான் மாற்றங்கள் செய்து விட்டீர்கள்?
கிராமப் பள்ளிகளில் பிள்ளைகளின் இடைநிற்றலை கவனமுடன் கண்காணித்து வர வேண்டும். பிள்ளைகளை மட்டுமல்ல; அவர்களின் தாய், தந்தையாரிடமும் படிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, பள்ளிக்கு வந்து செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறையாது கவனித்துக்கொள்ள வேண்டும். இங்கு அவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடைகள் தைத்து, கட்டணமின்றி வழங்கினோம். பிள்ளைகளின் விருப்பம் அறிந்து அவரவர்க்குப் பிடித்தமான கலை மற்றும் அறிவியல் பாடங்களில் அவர்களை ஈடுபடுத்தினோம்.

பிள்ளைகளை நடிக்க வைத்து, “நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?” என்கிற குறும்படம் தயாரித்தோம். அதனைத் தேர்தலின்போது, செட்டிக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொது மக்கள் மத்தியில் போட்டுக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். சென்ற ஆண்டு எங்கள் பள்ளிப் பிள்ளைகளை வைத்தே, `கொரோனா விழிப்புணர்வு’ குறும்படம் தயாரித்து வெளியிட்டோம். பள்ளியில் ஆண்டுதோறும் பிள்ளைகள் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சி நடத்தி வருகிறோம். அறந்தாங்கி வட்டார அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துவதில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக, செட்டிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியானது, சிறந்த பள்ளி என்கிற நிலையில் இருந்து வருகிறது.

கிராமக் கல்விக் குழுவின் பங்களிப்பு என்ன?
பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து விடாமல் பார்த்துக்கொள்வதில் கிராமக் கல்விக் குழுவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பெற்றோர்களிடம் பேசுவது, பிள்ளைகளைக் கண்காணிப்பது போன்றவைகளில் அந்தக் கல்விக் குழுவின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் சிறந்த கிராமக் கல்விக் குழு விருது பெற்றுள்ளது அந்தக் குழு. இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் முன்பு இல்லாதிருந்தது. இந்தக் கொரோனா சமயத்தில், என் சொந்தப் பணம் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித் தரப்பட்டுள்ளது. பள்ளியின் கல்வி, இதர வளர்ச்சிகளில் என்னுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளின் ஒத்துழைப்பு முக்கியமானது. இடைநிலை ஆசிரியர் பாலச்சந்திரனின் வழிகாட்டுதலும் செயல்பாடுகளும் மிக்க உறுதுணையாக இருந்து வருகிறது. இவர்கள் அத்தனை பேரின் உற்சாகம், ஒத்துழைப்பு போன்றவைகளால்தான் என்னாலும் சிறப்பாகப் பணியாற்ற முடிகிறது. இப்போது நான் பெற்றிருக்கும் மாநில நல்லாசிரியை விருதுக்கு அவர்கள் அனைவருமே காரணம் என்றால் அது மிகையல்ல.

விருது தொகையினை என்ன செய்தீர்கள்?
மாநில நல்லாசிரியர் விருது தொகை பத்தாயிரம் ரூபாய் ஆகும். விருதுத தொகையை பெற்று செட்டிக்காடு கிராமத்துக்கு வந்தேன். அப்போது அந்தக் கிராமத்தில் ஏழைக் குடும்பத்து மாணவிக்கு, கல்லூரிப் படிப்புக்கு பணம் கட்ட இயலாது தவித்ததாகக் கேள்விப்பட்டேன். அந்த மாணவியையும் அவளது அம்மாவையும் அழைத்து விருது தொகையினை அந்த மாணவிக்குத் தருவதாகக் கூறினேன். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். விருது தொகை ரூபாய் பத்தாயிரத்தினை அந்த மாணவியின் பெயரில் வங்கிக் கணக்கில் செலுத்தி, அந்த விபரங்களை அவர்களிடம் அளித்தேன். அது, எனக்கு ரொம்பவே திருப்தியாக இருந்தது.

வாழ்த்துக்கள்… ஆசிரியை லீமா ரோஸ்லிண்ட்! வளர்க ஆசிரியப் பணி.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஜோடிப் பொருத்தம் படு ஜோர்!

0
- உஷா ராம்கி பாரத் மேட்ரிமோனி நிறுவனம், இந்தியாவில் இணையதள வழி ஜோடித் தேடலில் முன்னோடி. 21 வருடங்களில் வெற்றிகரமாக பத்து லட்சத்துக்கும் மேலான ஜோடிகளை திருமணம் மூலம் இணைத்துள்ளது. இதில் என்ன ஹைலைட் என்றால்,...

‘வனத்துறைப் பணி செய்ய வாருங்கள்!’

1
பேட்டி : லதானந்த் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கு இணையானது, வனத்துறையின் உயர் பதவிகளுக்கு அளிக்கப்படும் ஐ.எஃப்.எஸ். அந்தஸ்து. அதற்கான பயிற்சிக் காலத்திலேயே சாதித்திருக்கிறார் சுதா ராமன் ஐ.எஃப்.எஸ்.! பயோ மெட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன் எஞ்சினீரிங் படித்துவிட்டு, தாம்...

30 நிமிடங்கள்; 134 வகை உணவுகள்! இல்லத்தரசியின் சமையல் சாதனை!

0
நேர்காணல் : சேலம் சுபா 'அடுப்படிப் பெண்களுக்குப் படிப்பெதற்கு' என்று கேட்டது அந்தக்காலம். 'அடுப்படியிலும் சாதிக்க முடியும்' என்று பெண்கள் நிரூபிப்பது இந்தக்காலம். காலங்கள் மாறினாலும் சமையல் என்பது இன்றும் இல்லத்தரசிகளின் சாம்ராஜ்யமாகத்தான் உள்ளது. 'சமையலிலும்...

புத்தகப் பதிப்பில் தடம் பதிக்கும் இளம்புயல்!

0
நேர்காணல் : சேலம் சுபா அந்தப் பெண்மணி இடது கை பழக்கம் உள்ளவர். துரதிர்ஷ்டவசமாக வலது கையினால் வற்புறுத்தி எழுத வைத்த காரணத்தினால் எழுத ஆசையிருந்தும் முடியாமல் வருந்தியவர். இவரிடம் இருந்த எழுத்துத் திறமையும்...

சுண்டல் சுவை கூட..

0
வாசகர் ஜமாய்க்கிறாங்க - ஆர்.ஜெயலெட்சுமி * சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊறவைத்த பின்பு, வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும். * பட்டாணி சுண்டலை வேகவைத்து இறக்கும்போது...
spot_img

To Advertise Contact :