online@kalkiweekly.com

spot_img

ஆலயமும் வித்தையும்

கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி சோழர்களுக்குப் புது எழுச்சி தந்த பிற்பாடு தான் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் முதலானோர் அவன் வம்சத்திலே வந்து சோழ சாம்ராஜ்யத்தைப் பரப்பினார்கள். சாம்ராஜ்யம் என்று நீள அகலங்களில் அது பெருகியதைவிட அதிலே கலாசாரம் அதி உன்னதமாகப் பரவியதுதான் அதிகப் பெருமை.

பல்லவர் காலத்தில் சிறிய அளவிலும், நடுத்தர அளவிலும் மட்டுமே கட்டப்பட்ட ஆலயங்கள் பெரிய அளவில் விஸ்தாரமாக் கப்பட்டது இந்தப் பீரியடில்தான். இதே சமயத்தில் கல்வி – கேள்வி, சாஹித்யம், சங்கீதம், நர்த்தனம் எல்லாமும் விருத்தியாயின. இதிலே அழகு என்னவென்றால், ஆலயம் பாட்டுக்கு ஒரு பக்கத்தில் விருத்தி யாச்சு, கலாசாரம் இன்னொரு பக்கத்தில் அதுபாட்டுக்கு விருத்தியாச்சு என்றில்லாமல் ஆண்டவனை மையமாக வைத்தே – ஸ்தூலமாக ஆலயத்தைக் கேந்திரமாக வைத்தே – கல்வி, கலாசாரங்களும் வளர்ந்தன.

நேராகக் கோயிலுக்குள்ளேயே கல்விக்கூடம் அமைப்பது என்று இப்போது ஏற்பட்டது. ‘வியாகரணதான மண்டபம்’ என்று அநேக சிவாலயங்களில் இருப்பவை இலக்கண வகுப்பு நடத்துவதற்காக ஏற்பட்டவைதான். இப்போது கோயில் பெரிய பரப்பளவில் கட்டப்பட்டதால் அதற்குள்ளேயே காலேஜ் ஸ்தானத்திலிருந்த உயர்கல்வி நிலையங்களை அமைக்க வசதி ஏற்பட்டது. சிதம்பரம், தஞ்சாவூர் முதலான கோயில்களில் இப்போது பார்த்தாலும் தெரியும் – அவற்றை வெளிமதிலை ஒட்டினாற்போல கோயிலுக்கு உட்புற மாகவே இரட்டை மாடிக் கட்டுமானங்கள் நிறைய இருக்கும்.

இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பண்ணிரண்டாம் நூற்
றாண்டுவரையில் சோழ ராஜாக்கள் ‘திருச்சுற்று மாளிகை’ என்ற பெயரில் நிர்மாணித்தவை. இதிலேதான் வித்யாசாலைகள் நடந்தன. அதோடு லைப்ரரி மாதிரியான ‘சரஸ்வதி பாண்டாரம்’ என்பவையும் திருச்சுற்று மாளிகையில் இடம் பெற்றன. அவற்றில் நூல் சுவடிகளை எல்லாம் சேகரித்து, பிரதிகள் எடுத்து, பத்திரமாகப் பாதுகாத்து, வித்தியார்த்திகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொடுத்து உபகரித்து வந்தார்கள். பாண்டாரம் என்றால் ‘ஸ்டோர்’ என்பதுபோல் பண்டங் களைச் சேர்த்து வைக்கிற இடம். தன பாண்டாரம், தானிய பாண்டாரம் என்றே அக்கால ராஜாங்கத்தில் பதவிகள் உண்டு. கஜானாவுக்குப் பொறுப்பானவர் தன பாண்டாரம். உணவுப் பண்டசப்ளைக்கு (இக்காலம் மாதிரி தினம் ஒரு புகார் கொடுக்க வேண்டியில்லாமல் நடந்த சப்ளை) பொறுப்பேற்றவர் தானிய பாண்டாரம். சாக்ஷாத் வித்யைக்கு அதிதேவதையான சரஸ்வதிக்கு உரிய பண்டங்கள் நிறைந்த ஸ்டோர் ஒன்று உண்டு என்றால், அது நூல் நிலையமாக இன்றி வேறென்னவாக இருக்கமுடியும்? அதனால்தான் ‘சரஸ்வதி பாண்டாரம்’ என்ற அழகான, தெய்வ சம்பந்தமுள்ள பெயர்!

கோயிலுக்குள் நடந்த வித்தியாசாலைகள் என்பதால் அவற்றில் சமயக் கல்வி மட்டும்தான் போதிக்கப்பட்டதாக நினைக்கவேண்டாம். ‘க்ராமரு’க்கு என்றே தனி மண்டபம் கோயிலில் இருந்தது என்று சற்றுமுன் சொன்னேனே!

ஸெக்யுலர் (உலகியல் சாஸ்திரங்கள் குறித்த) படிப்பு என்றாலும் அதையும்கூட ஈஸ்வரனையும் சமயாசாரங்களையும் மறந்து பிரயோ ஜனப்படுத்துவதற்கில்லையல்லவா? இந்த பிரக்ஞையை நன்றாக உண்டாக்குகிற ரீதியில்தான் ‘ஜெனரல் எஜுகேஷ’னுக்கு (பொதுக் கல்விக்கு) ஏற்பட்ட கலாசாலைகள் ஆலய எல்லைக்குள்ளேயே நடத்தப்பட்டன. அவற்றில் ஆயுர்வேதம் முதலானவையும் கற்பிக்கப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன – அக்கால மெடிகல் காலேஜ்!

 

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....

 தலைவி விமர்சனம்

1
- ராகவ்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் பயணத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகத் தந்திருக்கிறார் டைரக்டர் விஜய். படத்தில் எந்த ஒரு ரியல் கேரக்டர் பெயரையும் மாற்றாமல், அப்படியே தந்திருப்பதும், ஒரு...

காதலுக்கு மரியாதை

0
 டாக்டர் ஜெயஸ்ரீ சர்மா 2016 மார்கழி மாதம்.  காலை 11 மணி. நான் போட்ட கோலத்தை நானே பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். பள்ளி ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் பொறுமையாகக் கோலம் போட முடிகிறது. என்...
spot_img

To Advertise Contact :