0,00 INR

No products in the cart.

இங்கிதம்!

லதானந்த்
ஓவியம் : தமிழ்

கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக் கிட்டாங்க. பழ.சந்திரசேகரன், ‘பட்டாம்பூச்சி’ங்கிற தலைப்பில் கவிதை படிச்சாரு. இன்னும் சந்தனம், யானை, குறிஞ்சி இப்படி…

எனக்குக் கொடுத்த தலைப்பு: ஓடை. மரபின் மைந்தன் முத்தையா தலைமை வகிச்சாரு. “சங்கீதம் தெரியாதவன் சரிகம பாட வந்தேன்! அங்கீகாரம் தந்தவர்க்கு அடியேன் நன்றிகள்…’அப்படீன்னு ஆரம் பிச்சு, படிச்சு முடிச்சேன்.

முடிச்சதும் கவியரங்கத் தலைவர், “சங்கீதம் தெரியாமல் சரிகம பாடினாலும், இங்கிதமாய் இருந்தது. இயல்பாயும் இருந்தது”அப்படின்னார். எனக்கு அப்போதிலிருந்து, ‘இங்கிதம்’அப்படிங்கிற வார்த்தை மேல ரொம்ப இஷ்டமாயிருச்சு.

இங்கிதம்னா என்ன? சமய சந்தர்ப்பம் தெரிஞ்சு, யார் மனசும் புண்படாம பேசுறதுன்னு சொல்லலாமா? ஆனா, நெறைய சமயம் நாம பேசுறது இங்கிதக் குறைவாய் இருந் திடுது இல்லியா? சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஒரு தபா ஆஸ்பத்திரியில என் ஃபிரண்டு ஒருத்தர் படுத்திருந்தாரு. நானும் இன்னொருத்தரும் பாக்கப் போனோம். பேச்சு வாக்கில, படுத்திருந்தவர் சொல்றாரு…“என் சைக்கிள்ல இருந்து எவனோ ஒருத்தன் டைனமோவைத் திருடிட்டுப் போயிட்டான்!”

என்கூட வந்தவரு, “டைனமோவை திருடுனதுக்கே ஆஸ்பத்திரியில படுக்கிற அளவுக்கு ஆயிட்டிங்க. சைக் கிளையே திருடியிருந்தா என்னெல்லாம் ஆகி ருக்குமோ?” அப்படின்னாரு – ஜோக் அடிக்கிறதா நெனச்சுக் கிட்டு!

***

அப்பத்தான் கல்யாணம் பண்ணின புதுசு. கூடலூர்ல வேலை. என்னோட மச்சினன் சந்திரன், அப்ப பத்தாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்தான். அக்கா ஊட்டுக்கு ஒரம்பரையா மொதோ தடவை வந்திருந்தான்.

காலைல டைனிங் டேபிள்ல நானும் சந்திராவும் (அப்படித்தான் கூப்புடுவோம் அவனை) டிஃபன் சாப்பிட ஒக்காந்தோம். இட்லி, தோசை இதெல்லாம் வெக்கிறதுக்கு முன்னாடி லதா ஒரு தர்ப்பூசணி பழத்தை அறுத்து, ஒரு கீத்தை எனக்கும் இன்னொண்ணை சந்திராவுக்கும் குடுக்கிறா. எனக்கு அது அவ்வளவாப் புடிக்காது.

இருந்தாலும், கல்யாணம் ஆன புதுசில்லையா? உப்புக் கரிக்கிறது கூட, உவப்பா இருக்குனு நெனைக் கிற தருணம் இல்லியா? பேசாம தர்ப்பூசணிய திங்க ஆரம்பிச்சேன்! சந்திரா தொடவேயில்ல.

லதா கேக்குறா. “ஏண்டா சந்திரா! தர்ப்பூசணிய திங்கலையா?”“போக்கா! காலங்காத்தால இத மனுசன் திம்பானா?”

பாதி தர்ப்பூசணி வாயிலிருக்கு எனக்கு. மாமியார் வீட்டுப் பெண்டுகள் வாயப் பொத்திக்கிட்டுச் சிரிக்குறாங்க. லதா என்னைய பாத்து சிரிச்சுகிட்டே துள்ளி ஓடுறா!

***

கல்யாணமான புதுசுல லதாளுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்துச்சு.காலைல டிஃபன் சாப்பிட டைனிங் டேபிள்ல ஒக்காந்திருப்பேன்.

“மச்சா! இட்லி சுட்டுருக்கேன். வெக்கிட்டுமாங்?”“வெய் தாயி!” “நெய்ய உருக்கி வெச்சிருக்கேன் ஊத்தட்டுமாங்? “ஊத்து கண்ணு!”“தேங்கா சட்னி அரைச்சிருக்கேன். வெக்கிட்டுமாங்?” “வெய் சாமி!” தோசை ரெண்டு ஊத்தட்டு மாங்?”

“ஊத்துப்பா!”“காப்பி தருட்டுமாங்?” “தா கண்ணு!”சாப்பிட உக்காந்தா, இப்படி ஒவ்வொரு ஐட்டமா, “வெக்கிட்டுமா… சாப்பிடுவீங்களா?” அப்படின்னு கேட்டு, அப்புறமாத்தான் தருவா! ரெண்டு மூணு நாளா இத வாச் பண்ணிக்கிட்டே இருந்தேன்.ஒரு நாள் சாயங்காலம் ஆபிசிலேர்ந்து வந்தேன்.“உங்கிட்ட ஒண்ணு கேப்பேன்.

சொல்றியா?”“என்னங்?”“ஏன் சாப்பிடுறப்போ ஒவ்வொண்ணையும் வெக்கிட்டுமா வெக்கிட்டுமானு கேட்டு அப்புறமா வெக்கிறே?” லதாளுக்குக் கண்ணெல்லாங் கலங்கிருச்சு.“அது எங்க தோட்டத்து ஆத்தா சொல்லிக் குடுத்ததுங்…”“ஆரு சாமி அது? அது என்ன சொல்லிக் குடுத்துது?”

“என்ற அய்யனோட அம்மாதான் தோட்டத்து ஆத்தா. எப்பப்பாரு தோட்டத்திலயே இருக்கும். என் மேல ரொம்பப் பிரியம் அதுக்கு. கல்யாணம் நிச்சயம் பண்ணுனப்புறம் அதுங்கூடவேதான் இருப்பேன். பாவம், நெம்ப வயசான சீவனாச்சே அது? இப்பமோ, பொறகாண்டை யோனு இருக்கு. அதுங்கிட்டப் பேசிகிட்டு இருக்கிறப்போ அது சொல்லுச்சு, ‘புருசனூட்ல கட்டு செட்டா இருக்கோணும். திங்கற பண்டங்களத்தெறூப் பண்ணக்கூடாது…”

“இரு.. இரு… தெறூன்னா என்ன? “தெறூன்னா தெரிலையாங்? என்னமோ கதையெல்லாம் எழுதுறீங்கனு சொன்னாங்களேங்?”“அத விடு. தெறூன்னா என்ன?”“வீணாக்குறது. ஆத்தா சொல் லுச்சு, திங்கிற பண்டங்கள எப்பவுமே வீணாக்கக் கூடாது. சோறு போடறப்போ, ‘வேணுமா? திம்பீங்களானு கேட்டுக்கிட்டு அப்புறமா எலையில வெக்கோணும்’அப்படினு சொல்லிருக்குங்!”

“அது சரிதாஞ் சாமி! அதுக்குண்ணு ஒவ்வொரு பதார்த்தமா இப்படிக் கேக்குறது அவ்வளவு நல்லா இல்லியே! அதோட, ஒரம்பரை களுக்கு முன்னாடி இப்படிக் கேட்டா அவிங்களுக்குச் சங்கடமா இருக்காதா?”“செரிங்… உண்ணி மேல மாத்திக்கப் பாக்கிறனுங்…”“நல்லது சாமி!”

“மச்சா! ஆபீசிலிருந்து களைச்சுப் போய் வந்திருக்கீங்! உங்களுக்குப் புடிக்கும்னு பாதாமி, முந்திரிப் பருப்பு இதெல்லாம் அரச்சு அல்வா கௌறியிருக்கேன். வெக்கிட்டு மாங்?” “வெய் தாயி!”“ராய்ப் பக்கோடா சுட்டு வெச்சிருக்கேன். சாப்புடுவீங்களா?” “குடுப்பா!”“நெய் பணியாரமும் சுட்ருக்கேன். திம்பீங்களா?”“குடு…” “பில்ட்டர் காபியும் ரெடி. குடுக்கட்டுமாங்?” “குட்றீ” முதன் முதலாக மனைவிடம் கோபித்த முதல் தினம் அன்று!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

மழலை சொன்ன பாடம்!

0
சிறுகதை சுமதி ராணி ஓவியம் : தமிழ் சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன்,...

யாகாவாராயினும் நாகாக்க….

0
கட்டுரை: ஜி.எஸ்.எஸ் செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

யுபிமிஸ்ம்

0
-லதானந்த் ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த...

காலதேவி கோயில்

0
காலதேவி கோயில் மதுரை மாவட்டம், சிலார்பட்டி எனும் கிராமத்தில் உள்ளது காலதேவி கோயில். புராணங்களில் வரும் காலராத்ரியைத்தான் இங்கு கால தேவியாக வழிபடுகின்றனர். இந்தக் கோயில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடை திறக்கப்பட்டு, சூரிய...