இந்தியாவிலிருந்து வெளியேறும் ஃபோர்டு நிறுவனம்: அதன் ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!

இந்தியாவிலிருந்து வெளியேறும் ஃபோர்டு நிறுவனம்: அதன்  ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்திய தொழிற்சாலைகளில் தனது உற்பத்தியை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இதனால் அந்நிறூவனத்தில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஃபோர்டு இந்தியாவின் தலைவர் ஜிம் ஃபேர்லி கூறியதாவது:

இந்திய தொழிற்சாலையில் கார்கள் தயாரிக்கப் போதுமான கட்டமைப்பும், திட்டமும் இல்லாததுதான் உற்பத்தியை நிறுத்தியதற்குக் காரணம். இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்தும், எங்களுக்கு இந்த 10 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்டமாகி விட்டன. மேலும் புது வாகனங்களுக்கான எங்கள் வாடிக்கையாளர்களும் குறைந்து விட்டார்கள்.

இவ்வாறு ஜிம் ஃபேர்லி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஃபோர்டு நிறுவன ஊழியர்களீன் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்படி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தன் டிசிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக கோடிக்கணக்கானோர் வேலையிழந்திருக்கும் நிலையில், ஃபோர்டு நிறுவனம் தனது இந்தியத் தொழிற்சாலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

.1995-ல் ஃபோர்டு நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன.

1996-ல் 1,500 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தன் தயாரிப்பைத் துவங்கியது. முதற்கட்டமாக சுமார் 2,100 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்தது. இன்று நேரடியாக சுமார் 4,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக சுமார் 25,000 பேருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது ஃபோர்டு இந்தியா நிறுவனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com