
இந்த புகைப்படம் , நாங்கள் இமாச்சலப் பிரதேசம் சுற்றுலா சென்றிருந்த போது எடுத்தது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் விளங்குகிறது. எங்கெங்கு பார்த்தாலும், பனி படர்ந்த மலைகளும், பச்சைப் பசேலென இருக்கும் மரங்களும், அவற்றில் பழுத்துத் தொங்கும் ஆப்பிள் பழங்களும்…கண்ணுக்கு செம விருந்து தான்.
அங்குள்ள மக்கள் நடுக்கும் குளிரையும் பொருட்படுத்தாது ஆப்பிள் தோட்டத்தில் பணிபுரிகின்றனர்.தலைக்கு மேலே தவழும் மேகக் கூட்டங்கள், பனிக்குன்றுகள், கீழே சீறிப்பாயும் ஆறுகள், பசுமையான மரங்கள்,செக்கச் செவேலென்ற ஆப்பிள் பழங்கள், மின்சாரமே இல்லாத கிராமங்கள் ,கள்ளங்கபடமற்ற மக்கள்
இவை எல்லாம்தான் நாங்கள் அந்த மாநிலத்தில் பார்த்து வியந்தவை.
– ஜெயா சம்பத், சென்னை.