online@kalkiweekly.com

இருப்பது இன்று ஒன்றே இதையெ வாழு!

ஒரு கப் Zen -9
எழுத்து:லேzy

சிறு வயதில் பொம்மைகளுக்காக அழுதோம். வாலிப வயதில் பெண் ஆசை, நடுத்தர வயதில் பொன்னாசை, மண்ணாசை. வயது முதிர்ந்த பிறகு வாழ வேண்டும் என்ற ஆசை… இப்படி விடாமல் ஆசைப்பட்டுகொண்டே வாழ்நாள் முழுவதும் கழிக்கின்றோம். நேற்றும், நாளையும்தான் மனிதனை வாட்டி வதைக்கின்றன.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த @நற்றும், நாளையும் நம் கையில் இல்லை. நேற்று முடிந்து விட்டது. திரும்பி வரவே வராது. நாளை என்பது வெறும் நினைவுதான். வெற்று எண்ணம்தான். இன்னும் வரவில்லை. The Past is concrete, The Future is Fluid.நேற்று என்பது உடைக்க முடியாத கான்கிரீட்.

நாளை என்பது வெறும் கானல் நீர். நமக்கு இருப்பது, ‘இன்று’தான். அதிலும், இந்த நொடிதான். இதை வாழு. இந்த நொடியினை முழுமை யாக வாழு. இதைத்தான் ZEN உணர்த்துகிறது. ஆனால், என்ன செய்கின்றோம்? ‘நாளை நன்றாக வாழ வேண்டும், வசதியாக வாழ வேண்டும்’என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு கொண்டே வாழ்கின்றோம். இந்த முட்டாள்தனத்தை ZEN மாற்றிவிடும். நீ இன்று சந்தோஷமாய் இரு. இந்த நொடிப்பொழுதில் ஆழ்ந்து இரு. நீ எதை செய்துகொண்டிருந்தாலும், அதை உன் முழு மனதோடு ஆனந்தமாய் செய். அது எந்த வேலையாக இருந்தாலும். ‘இதைச் செய்தால் நாளை நன்றாக இருப்போம்’ என்ற எண்ணம் இல்லாமல், ‘இப்பொழுது இதைச் செய்யவேண்டும் என்பதற்காகச் செய்கின்றேன்’என்ற எண்ணத்தில் செய். Do a thing just for the sake of doing that thing.

உடற்பயிற்சி செய்கிறீர்களா? உடற்பயிற்சிக்காக மட்டும் செய்யுங்கள். ‘இன்று இதை செய்தால் உடல் பருமன் குறைந்து அழகாக இருப்போம். எல்லோரும் நம்மைப் பார்ப்பார்கள், விசாரிப்பார்கள்’ என்ற எண்ணம் எல்லாம் தேவையே இல்லை. Exercise just for the sake of exercising.

வேலையும், சம்பாதித்தலும் அப்படித்தான். ‘இன்று சம்பாதித்தால் நாளை சொகுசாக வாழலாம். கையில் பணம் இருக்கும்’என்று எந்த எண்ணமும் வேண்டாம். இன்று செய்யும் வேலையை சந்தோஷமாகச் செய்யுங்கள்… அதுவே போதும். ‘நாளை’ என்று ஒன்று வந்தால், அன்றும் உங்களை அறியாமல் இதே சந்தோஷத்தோடு இருப்பீர்கள். ஏன் என்றால், Tommorow is actually a futuristic today.

இந்த நொடி மட்டும்தான் நிரந்தரம். ஆதலால், ‘இந்தத் தருணத்தை ஆனந்தமாய் அனுபவித்து வாழ்ந்திடு’என்கிறது ZEN.Tommorow is promised to none.‘எங்கே ZEN ?’ என்றால், ‘எதிலும் உள்ளது ZEN ’என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

கூர்ந்து கவனிக்கும் காகத்தின் திறனில் உள்ளது ZEN …

தன் குஞ்சுகளுக்காக நாள் முழுவதும் பறந்து இறை தேடும் புறாவின் உழைப்பில் உள்ளது ZEN …

அன்பைத் தவிர, வேறு ஏதும் தரஇயலாத தெரு நாயின் மனதில் உள்ளது ZEN …

ஆறு டன் எடை இருந்தும், மனிதனுக்கு அடங்கி நடக்கும் கோயில் யானையின் பணிவில் உள்ளது ZEN …

குறுகிய காலம் வாழ்ந்தாலும், ஆனந்தமாய் மலர்விட்டு மலர் தாவும் வண்ணத்துப்பூச்சி வாழ்வின் அணுகுமுறையில் உள்ளது ZEN …

காணாமல் போய்விட்ட சிட்டு குருவியின் சுறுசுறுப்பில் இருப்பதும் ZEN …

இறந்ததை உண்டாலும், வானில் மிக உயரத்தில் பறக்கும் கழுகின் சுய மரியாதையில் உள்ளது ZEN …

‘பறித்து விடுவார்கள்’என்று தெரிந்தும், நித்தம் நித்தம் பூக்கும் மலர்களின் துணிவில் இருக்கிறது ZEN …

இறங்குவது யாராயினும், எதுவாகினும் அவை அனைத்தையும் நீராட்டிவிட்டு ஓடிக் கொண்டிருக்கும் காவிரியின் நல்லெண்ணத்தில் உள்ளது ZEN …

‘போதும்’என்ற மனமும் ZEN ,பொறாமைக்கு அர்த்தம் தெரியாத குணமும் ZEN …

இப்படி… எங்கும், எதிலும் ZEN.கண்ணை மூடி, கொஞ்ச நேரம் உட்காருவது மட்டும் தியானம் அல்ல. ZEN ஒரு வாழ்க்கை முறை. ZEN தெய்வீகத்தின் முகவரி. பிரபஞ்சத்தில் எல்லா அம்சங்களும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது என்று உணர வைக்கும் ஆயுதம்.

(தொடரும்)

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

மழலை சொன்ன பாடம்!

0
சிறுகதை சுமதி ராணி ஓவியம் : தமிழ் சூரியன், அதிகாலை ஆரஞ்சு வண்ண சேலையை வானம் முழுவதும் வாரி இறைக்க, சிக்னல் கிடைத்துவிட்ட சுறுசுறுப்பில் பறவைகள் சங்கீத மொழியில் விடியலைக் கொண்டாடின. இவற்றால் உறக்கம் கலைந்த சங்கரன்,...

யாகாவாராயினும் நாகாக்க….

0
கட்டுரை: ஜி.எஸ்.எஸ் செபாஸ்டியன் மைக்கேல் என்பவரின் சுவை அரும்புகளை பத்து லட்சம் டாலர் தொகைக்கு இன்ஷ்யூர் செய்திருக்கிறது அவரைப் பணிக்கு அமர்த்தி இருக்கும், ‘டெட்லி’என்ற பிரபல பிரிட்டிஷ் தேயிலை தயாரிப்பு நிறுவனம். எதற்காக அவ்வளவு...

நலந்தரும் நாஞ்சில் நாட்டு உணவு!

0
-ம.லெஷ்மி நீலகண்டன்,ஈத்தாமொழி பல நீண்ட நெடிய வரலாறு படைத்தது நாஞ்சில் நாட்டு உணவு வகைகள். அதுகுறித்து எனக்குத் தெரிந்த, பழக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றை இங்கே விவரிக்க முயல்கிறேன். காப்பி, தேனீர் : எனது அறிவுக்கு...

யுபிமிஸ்ம்

0
-லதானந்த் ஆங்கிலத்தில் ‘யுபிமிஸ்ம்’(Euphemism) என்று ஒன்று உண்டு. ஒரு விஷயத்தை இயன்ற அளவுக்கு உயர்வாக அழைப்பது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். உயர்வு நவிற்சி மாதிரி. ஒரு விதத்தில் இது நல்லதுதான். தாங்கள் மிகுந்த...

இங்கிதம்!

0
லதானந்த் ஓவியம் : தமிழ் கோவையில் ஒரு கவியரங்கம் -‘வனத்திலிருந்து வருகிறேன்’அப்படிங்கிற தலைப்பில், ‘உலக வன நாளை’ ஒட்டி நடந்துச்சு. இடம் : அவினாசி லிங்கம் ஹோம் சயின்ஸ் யூனிவர்சிடி. பல கவிஞர்கள் இதில் கலந்துக்...
spot_img

To Advertise Contact :