உக்ரைன் அதிபர் மனைவி எழுதிய கடிதம்: சர்வதேச அளவில் பரபரப்பு!

உக்ரைன் அதிபர் மனைவி எழுதிய கடிதம்: சர்வதேச அளவில் பரபரப்பு!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் மனையான ஒலேனா ஜெலன்ஸ்கி ரஷ்யப் படையெடுப்பு குறித்து உலக ஊடகங்களுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது:

அதில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று நான் கனவிலும் கருதவில்லை. கடந்த பிப்ரவரி 24 அன்று, முதன்முதலாக ரஷ்ய டாங்கிகள் உக்ரேனிய எல்லையைத் தாண்டின, விமானங்கள் எங்கள் வான்வெளியில் நுழைந்தன, ஏவுகணை ஏவுகணைகள் எங்கள் நகரங்களைச் சூழ்ந்தன. இந்த போர் தாக்குதலில் பல குழந்தைகள் உயிரிழந்தது மனதைக் கலங்கச் செய்கிறது. வெடிகுண்டில் சிக்கி தெரிவில் இறந்து கிடந்த 8 வயது ஆலிஸ் மற்றும் கியே என்ற ஊரில் பெற்றோருடன் சேர்ந்து வெடிகுண்டு தாக்குதலில் இறந்த பொலினா.. இவர்களையெல்லாம்  ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில்  அணுக முடியாததால் காப்பாற்ற முடியவில்லை. பொதுமக்களுக்கு எதிராக போர் நடத்தவில்லை என ரஷ்யா கூறுகிறது, அதனால் தான் கொல்லப்பட்டவர்களின் பெயர்களை கூறுகிறேன்.

இந்த சோர்வுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்களைப் பாருங்கள், அன்புக்குரியவர்களையும் வாழ்க்கையையும் விட்டுச்செல்லும் வலிமிக்க சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய மருத்துவ சிகிச்சை பெறுவதில் மக்கள் சந்திக்கும் சிக்கல்களை அவர் மேற்கோள் காட்டினார். அடித்தளத்தில் இன்சுலின் ஊசி போடுவது அவ்வளவு எளிதா அல்லது கடுமையான தீயில் ஆஸ்துமா மருந்துகளைப் பெறுவது அவ்வளவு எளிதா என மக்கள் படும் துன்பங்கள் பற்றி வேதனை தெரிவித்தார்.

புற்றுநோய் நோயாளிகளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைக்கள் அவர்களுக்கு அத்தியாவசியம் என்ற நிலையில் அது கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் அவதிப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

44 வயதான ஒலேனா ஜெலன்ஸ்கி.

-இக்கடிதம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பிக் கிள்ப்பியுள்ளது. ஜெலன்ஸ்கி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com