0,00 INR

No products in the cart.

உங்கள் குரல்

காந்திஜி அரையாடைக்கு மாறிய நிகழ்வின் நூற்றாண்டு செய்தியாக ஆசிரியர் ரமணன் எழுதிய, ‘அண்ணலின் பார்வை’ கட்டுரை நிறைவான திருப்தியை அளித்து நெஞ்சில் இனந்தெரியாத உற்சாகத்தையும் பரவசத்தையும் உண்டுபண்ணியது உண்மை.

தவி செய்பவருக்கும் பெறுபவருக்கும் இடையில் நல்ல புரிதல் உருவாகத் தன் உடை பெருந்தடையாக இருப்பதாக உணர்ந்த மகாத்மா காந்தி, மாபெரும் முடிவெடுத்து, அதை உறுதியாக செயல்படுத்தி வரலாறு படைத்ததை அற்புதமாக விளக்கி இருந்தார். இந்தாண்டின் ஆகச்சிறந்த கட்டுரைகள் பட்டியலில் நிச்சயம் இது இடம்பெறும்.
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

ழுத்தாளர் ‘நந்து சுந்து’ வழக்கம்போல் எளிய நடையில் நகைச்சுவை கலந்து தந்துள்ள ‘ஓரு தண்ணீர்க் கதை’ சிறுகதை படிக்க விறுவிறுப்பாக இருந்தது. கதை முடிவு இப்படித்தான் இருக்கும் என யூகிக்க முடியாதபடி ‘த்ரிலாக ‘ இருந்தது. ராமபத்திரன் சோகத்திலும் மருமகள் வர்ஷிணியின் நடவடிக்கைகளை காமெடியாக சொல்லும், எழுத்தாளரின் யுக்தி வேற லெவல். கதை எழுதியவருக்கு ‘வித் ப்ளஷர் …ஆப்பிள் ஜூஸ் ‘ வழங்கப்படுகிறது.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

“சுஜாதா தேசிகன்” அவர்களின் கடைசி பக்கத்தில் வந்த கொலுவில் “அப்பூச்சி” படிக்கப் படிக்க நான் பள்ளி பருவத்தில் எங்கள் வீட்டில் வைத்த கொலு  நினைவிற்கு வந்தது. ஆண் தேனீக்கள் பெண் தேனீக்கள் இருப்பது போல கொலுவில் கூட ஆண் கொலு பெண் கொலு இருக்கிறது; அதை கண்டுபிடிப்பது எப்படி என்று அழகாக டிப்ஸ் கொடுத்த சுஜாதா தேசிகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். ரசிக்க வைத்த பக்கம் கொலுவை நேரில் பார்த்தது போல ரசித்து படித்தேன்.
– உஷாமுத்துராமன், மதுரை

சித்த சுத்தி ஏற்படுத்தாத எந்த தொண்டும் குளிப்பதாக நினைத்துக்கொண்டு சேரை பூசிக் கொண்டதற்கு ஒப்பாகும் என மிக அருமையாக விளக்கம் அளித்துள்ள மஹாஸ்வாமிகளின் அறிவுரை போற்றுதற்குரியது.
– கே எஸ் கிருஷ்ணவேணி, ***

ஞ்சாயத்து ராஜ் சட்டம் நமக்கு அளித்திருக்கும் உரிமையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ளாமல், அதன் நோக்கத்தையே குழி தோண்டிப் புதைக்கும் வகையில் சாதிக்கும், பணத்துக்கும் இணங்கிப் போகும் ஏலமுறையினைப் பற்றி உண்மையான சமூக நல அக்கறையில், தெள்ளத்தெளிவாக விளக்கி இருந்த தலையங்கம் அற்புதம்…அற்புதம்…கல்கிக்கு தலை வணங்குகிறோம்.
– நெல்லை குரலோன்

நேரில் காண முடியவில்லை என்ற ஏக்கம் தவிர்க்கும் மிக நல்ல வர்ணனை கட்டுரை பாரதிக்கு.
– பால சாண்டில்யன், சென்னை

ட்டோக்காரிடம் மனிதம் இருக்கிறது என்பதைப் புரியவைத்த நல்ல பதிவு.
 சியாமளா ,சென்னை

ழைய செருப்பும் கடிக்கும்  சிறிய நிகழ்வை வைத்து அருமையாக எழுதப்பட்டுள்ளது மனப் போராட்டம், வார்த்தை பிரயோகம்களும் சூப்பர்.
– வி.கே.லக்ஷ்மிநாராயணன்***

கே ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு தகுதியை உயர்த்திக் கொள்ளாத தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களை கோட்டா மூலம் மருத்துவ படிப்பில் நீட் தேர்வு இல்லாமல் சேர்த்து விட்டால் விளைவு என்ன ஆகலாம் தெரியுமா? அந்த மாணவன் சப்ஜெக்ட் புரியாமல் ஒன்று தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லது அரியர்ஸ் ஏற்பட்டு குறுக்கு வழியில் பணம் கொடுத்து பாஸ் பண்ண முயற்சி எடுக்கலாம். இப்படி விளைவு ஏற்பட்டால் இந்த சொசைட்டியும் மருத்துவ துறையும் எப்படி உருப்படும்.
– ஜி ஶ்ரீகாந்த், ***

ப்படியானால் நீட் தேர்வு வருவதற்கு முன்னால் வந்த மருத்துவர்கள் எல்லாம் சோடைகளா?
– மைக்கேல் சுந்தராஜன்,****

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“ஆளுநருடன் அரசியல் பேசினேன்” – ரஜினிகாந்த்

1
? “உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் வரிச்சலுகை இருப்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல்  எதிர்க்கிறார்கள்” என்கின்றனரே பா.ஜ.க.வினர்? - ஜோஷ், அயன்புரம் ! அப்படியா. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்... அரிசி 25 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 1312-5.. அதே அரிசி...

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா எப்படி? - எம்.சண்முகம், எடப்பாடி ! ஒரு விளையாட்டுப் போட்டியின் உள்ளடக்கத்தை உள்வாங்கிப் பெரும் நிகழ்வாக்கிக் காட்டுவது எப்படி என்பதை  தொடக்க நிகழ்வுகள்...

ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும் ?

1
? ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும்? - மதி மாறன், சேலம் ! ஓர் எழுத்தாளன் தம் வாசகர்களுக்கு நெருக்கமான, தம்மைப் போன்ற ஒரு மனிதனாக, தாம் எளிதில் அணுகி உரையாடக்கூடிய ஒருவனாக,  தமக்குப் பிடிக்கக்கூடிய...

கண்ணியத்தை காக்காததற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? சென்னை செஸ் ஒலிம்பியாட்  பற்றி... -நெல்லை குரலோன், பொட்டல்புதூர் முன்னேற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டுக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், வெளியான விளம்பர படத்தில்  உலகம் அறிந்த விஸ்வநாத் ஆனந்தோ, அல்லது பிரஞ்யாவோ...

இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம் என்கிறாரே கமல்?

0
  “இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்” என்கிறாரே கமல்? - மாடக்கண்ணு, நெல்லை ! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது.  ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே...