0,00 INR

No products in the cart.

 உண்மைத்தன்மையிலிருந்து விலகாத பதில்

உங்கள் குரல்

இந்த முறை  ஒரு வாரம் இடைவெளிவிட்டு  கல்கி  சரியாக விநாயக சதுர்த்தியன்று  வெளியாகியிருக்கின்றது. இருந்தும் அட்டைப் படத்தில் பிள்ளையார் படம்  இல்லாமல்  சினிமாவைப் பற்றிய படம்  ஏன்?

 • பாமதி நாராயணன், பெங்களூரு

ஜெகதா வெங்கட் எழுதிய ‘நியாயமா அய்யா?’ என்ற சிறுகதை மிகவும் அருமை. மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் நாம் அவர்களை உற்சாகப்படுத்தி எழுத வைக்கலாமே தவிர நாம் எழுதிக் கொடுக்கக் கூடாது என்ற நல்ல கருத்தைத் தாங்கிய அருமையான சிறுகதை. பாராட்டுக்கள்.

 • ராதிகா, மதுரை

முகநூல் பக்கத்தில் வந்த ‘நீர் சூழ்ந்த சிவலிங்கம், நிகரில்லாத அர்ச்சக ரும்’ என்ற படத்தைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்து கண்ணில் நீர் சுரந்தது. சிவனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கிருஷ்ண பட்டின் 40 வருட பணி நிச்சயம் சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கும் என்ற நம்பிக்கை ஊட்டியது.

 • நந்தினி கிருஷ்ணன், திருநகர்

கடைசிப் பக்கத்தில் சுஜாதா தேசிகன் ஒவ்வொரு வாரமும் மிக அருமை யான செய்திகளைச் சொல்வது மிகவும் அருமை அதிலும் இந்த வாரம் அவருடைய ஸ்ரீரங்கம் ஓவியத்தைப் பார்த்ததும் அது கண்ணுக்கு நிறைவாக இருந்தது. தமிழில் வரும் ஐவகை நிலங்களைப் பற்றிப் படித்ததும் ஒரு தமிழாசிரியர் வகுப்பில் உட்கார்ந்திருந்தது போல இருந்தது.

 • உஷா முத்துராமன்

ஔவையாரின் விநாயகர் மீதான பக்தியும், தமிழ்ப் புலமையையும் பற்றி அருள்வாக்கில் படித்ததும், அந்தப் பக்திப் புலவரின் விநாயகர் அகவலை எல்லாரும் பாராயாணம் செய்ய வேண்டும் என்று தோன்றியது.

 • ஆர். பத்மப்ரியா, திருச்சி

விநாயகர் வழிபாடு தலைப்பில், ஜகத்குரு அருளிய கருத்துக்கள் மனதில் பிரணவ  வெளிச்சத்தையும் ஆன்மிகப் பரவசத்தையும் ஒருசேர அள்ளியது என்றுதான் சொல்லவேண்டும். ‘யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கிய தான ஒளவையாரின்  விநாயகர் அகவலைப் பாடி பாராயணம் செய்தால், பரம ஞானம் உண்டாகும்’ என்பதையும், ‘தோப்புக்கரணத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்ததே மகாவிஷ்ணு தான்… தோர்வி கர்ணம் என்பதே தோப்புக்கரணம்’ என்பதையும் மகாசுவாமிகள் விளக்கி இருந்த இடமும் விதமும் இன்னும் இதயப் பரப்பில் சிலிர்ப்பலைகளை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கின்றன.

 • ஜி.ஆனந்தமுருகன், சென்னை

நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்து  விரக்தி பிளஸ் வேதனையின் உச்சத்தில் மக்கள் நொந்து போய் இருக்கும்  தருணத்தில், ‘மரபுகளைக் காப்போம்’ என்ற கல்கியின் தலையங்கம் அருமை… அருமை. ஆளும் கட்சிக்கும்  எதிர்க்கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில்  சரியான அட்வைஸ் வழங்கி,  தேசநலனே பிரதானம் என்பதை  நிலைநிறுத்தி, கல்கி என்றென்றும் நடுநிலையான இதழ் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது!

 • நெல்லை குரலோன்

நகைச்சுவை என்பது காட்சியைப் பார்த்தவுடன் மனம்விட்டுச் சிரிப்ப தோடு, பாத்திரத்தின் உடல்மொழி, வசனம் பேசும் டைமிங் முக்கியம் என்று  தராசார் விளக்கம் தந்ததோடு ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில்  பாலையா, நகேஷ் நடித்ததை உதாரணம் காட்டியது மிகச் சரியே. (நமது ‘கல்கி’யில் ஜோக்குகளைப் படிப்பதற்கு முன்பே ஜோக்குகளுக்கான படத்தைப் பார்த்த துமே சிரிப்பு வந்து விடுகிறதே!)

 • மணிகண்டன், மேல்மருவத்தூர்

எது மிகவும்  அவசியமானது என்கிற புரிதல் இல்லாமல்,  உழைக்காமல் கிடைக்கும் எதையும் வாரிச் சுருட்டிக்கொள்ளும் அறியாமையை நகைச்சுவை யுடன் தத்ரூபமாக உணர்த்தியது ‘பாலாபிஷேகம்’ சிறுகதை. ‘என் வீட்டுக்குப் பால் குடிக்க முதல்ல வந்திருக்கலாமில்ல’ என்று பூனையைப் பார்த்துக் கேட்டதை கதை முடிவில் கோர்த்திருப்பது, கதையின் நோக்கத்திற்குத்  தூக்கலாக இருந்தது.

 • ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

எஸ்.சந்திரமெளலி எழுதிய, ‘முகம் மாறுகிறதா தமிழ் சினிமா?’ கட்டுரை  இன்றைய எதார்த்த நிலைமையை, ஆகச் சிறந்த முறையில் விளக்கியிருந்தது. ஏற்கெனவே தட்டுத் தடுமாறி பயணித்த திரை உலகம், கொரோனா பாதிப்புக்குப் பிறகு தடம்மாறத் தொடங்கி இருக்கிறது என்ற ரீதி யில் பதிவு செய்திருந்த விதம் பாராட்டுக்குரியது.

 • ஜெயசங்கர், சென்னை

‘முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?’ என்ற கேள்விக்கு, தராசார் அளித்த பதில் நேர்மையாகவும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருந்தது. எந்த நிலையிலும் உண்மைத்தன்மையில் இருந்து இம்மியளவும் விலகாத பதிலில் பளிச்சிட்டதை உணரமுடிந்தது!

 • கண்ணன், நெல்லை

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....