உதயநிதியுடன் இறகு பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

உதயநிதியுடன் இறகு பந்து விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவல்லிகேணி, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தன் மகனுமான உதயநிதி ஸ்டாலினுடன் புதிதாக திறந்துவைக்கப்பட்ட இறகு பந்து கூடத்தில் இறகுப்பந்து விளையாடினர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் வளாகத்தில், ரூ.4 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு இறகுப்பந்து விளையாட்டு கூடம், பூங்காக்கள், மழைநீர் கால்வாயுடன் ஓடிய நடைப்பாதை மற்றும் உட்புற சாலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இறகு பந்து கூடத்தில் முதல்வர் ஸடாலினும், உதயநிதி ஸ்டாலினும் இறகுப்பந்து விளையாடினர்.

logo
Kalki Online
kalkionline.com