0,00 INR

No products in the cart.

உயர மருட்சி

கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்

சமீபத்தில் ‘Turning Point: 9/11 and the War on Terror’ (திருப்புமுனை: 9/11 மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்) என்ற ஆவணப் படத்தைப் பார்த்தேன். இருபது வருடங்களுக்கு முன் விமானம் மோதி இரட்டை கோபுரம் தாக்குதலில் 110 மாடிகளும் சீட்டுக்கட்டு கோபுரம் போலச் சரிந்த அந்த நிகழ்வும் அதன் பின் உள்ள அரசியலும் விவரித்தவர்கள், போகிற போக்கில் அந்தக் கட்டடத்தை வடிவமைத்த அமெரிக்கக் கட்டடக் கலைஞர் மினோரு யமசாகி (Minoru Yamasaki) உயரங்களைக் கண்டு பயந்தவர். மக்கள் உயரத்திலிருந்து கீழே பார்க்கும்போது அவர்கள் பயப்படாமல் இருப்பதற்காக உலக வர்த்தக மையத்திற்குக் குறுகிய ஜன்னல்களை அமைத்தார் என்ற தகவலை அளித்தார்கள்.

பெங்களூருவில் நான் வசிப்பது பதினைந்தாவது மாடி. குடியேறிய புதிதில் பால்கனியிலிருந்து கீழே பார்த்தபோது சமநிலை உணர்வை இழந்து வயிற்றில் புளியைக் கரைத்தது. இதே போன்ற உணர்வு பெண் பார்த்த அன்றும் ஏற்பட்டுள்ளது. குலு மணலி குளிரில் மலையின் விளிம்பில் குதிரைப் பயணத்தின்போது அதன் கால் ஒன்று அந்தரத்தில் தொங்கியபோது உள்ளுறுப்புகள் ஊசலாடியது. பிறகு அலுவலகத்தில் ஏதோ `டீம் பில்டிங்` என்று அழைத்துச் சென்று ’பட்டர் நான் குருமாவுடன்’ ‘Rappelling’ என்று இரண்டு கயிறுகள் கொண்டு செங்குத்தான மலையிலிருந்து கீழே இறங்க வைத்தார்கள். (தள்ளிவிட்டார்கள் என்றும் சொல்லலாம்). இறங்கிய பின் உயில் எழுதி வைக்க வேண்டும் என்று தோன்றியது.

நம் மூளை, கண், காது, தோல், தசை, மூட்டுகள் மூலம் உணரப்படும் உணர்வுகளைக் கொண்டு நிலைத்தன்மையை அறிந்துகொள்கிறது. மிக அதிக உயரத்திலிருந்து கீழே பார்க்கும்போது உடலின் மற்ற பாகங்களிலிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் அசாதாரணக் காட்சி அறிகுறிகளைச் சமநிலை யைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிக்கு அனுப்பி நாம் மூளை குழப்பு கிறோம். மூளையின் அந்தப் பகுதிக்குப் பக்கத்து வீட்டில் வாந்தி எடுக்கும் பகுதி இருக்கிறது. அதனால் வயிற்றைக் கலக்கி (சிலருக்கு) வாந்தி வருகிறது. இதை உயர மருட்சி (Acrophobia) என்பார்கள். எங்கே கீழே விழுந்துவிடு வோமோ என்ற எண்ணத்தால் ஏற்படும் அதீத பயம்.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் கோபுரங்கள் அதிகக் காற்று அடித்தால் அப்படியும் இப்படியுமாக ஓர் அடி ஆடுமாம். இப்படி ஆடும் இந்தக் கோபுரங்களுக்கு இடையில் 1974ஆம் ஆண்டு ஓர் ஆகஸ்ட் மாதம் காலை பிலிப் பெட்டிட் (Philippe Petit) என்பவர் இரட்டை கோபுரங்களுக்கு இடையே எந்த அனுமதியும் பெறாமல், திருட்டுத்தனமாக இறுக்கமான கயிற்றில் நடந்து சென்றார். நடுவில் நடனமாடிக் காண்பித்து, உட்கார்ந்து, பிறகு அதில் படுத்துக்கொண்டு சாகசங்களை நிகழ்த்தினார். இதைக் கீழே இருந்து பார்த்த வர்களுக்கு வயிற்றைக் கலக்கியது. இந்த நிகழ்வைத் தழுவி `மேன் ஆன் தி வயர்` (Man on the wire) என்ற ஆவணப் படமும், தி வாக் (The Walk) என்ற திரைப்படமும் வந்திருக்கிறது (பார்க்கவில்லை என்றால் தேடிப் பார்த்து விடுங்கள்).

பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை என்னால் மறக்கமுடியாது. அன்று அலுவலகத்தில் ஏழாவது மாடியில் தேநீர் அருந்திக் கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். ஜன்ன லுக்கு வெளியே திடீர் என்று ‘ஸ்பைடர் மேன்’ போன்ற ஒருவர் தெரிந்தார். இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு, ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மறு கையில் பிரஷைக்கொண்டு கண்ணாடி ஜன்னல்களைத் துடைத்தார்.

முதலில் அவரை பார்த்துப் படபடத்தாலும், அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். “உங்க பேர் என்ன?” “வெங்கடேஷ் சார்” “எவ்வளவு வருஷமா இதைச் செய்துகிட்டிருக்கீங்க?” கயிற்றில் ஆடிக்கொண்டு “அது ஆச்சு சார் நாலு வருஷம்.” “எவ்வளவு கிடைக்கும்?” “ஒரு ஸ்கொயர் ஃபீட்டுக்கு ஐம்பது பைசா. இப்ப மார்கெட் டவுன் அதனால யாரும் கூப்பிட மாட்டேங்கிறாங்க.” “இப்ப தொங்கிக்கிட்டிருக்கற கயிறு ஸ்டிராங்கா?” “சார் இது 350 கிலோவைத் தாங்கும். நான் அறுவது கிலோதான்.” “கீழே பார்த்தா பயமா இருக்காதா?” “முன்னால இருந்தது இப்ப இல்லை. ஆனா யஷ்வந்த்பூர்ல ஒரு 34 மாடிக் கட்டடம் இருக்கு. அதுல மட்டும் கொஞ்சம் பயமா இருக்கும்.” “இந்த வேலை ரிஸ்க் இல்லையா?” “வீட்டில வயதான அப்பா, அம்மா. ஒரு தங்கை. அவளுக்கு நான்தான் கல் யாணம் செய்யணும். இதை எல்லாம் நினைச்சு கீழே பார்த்தா பயம் தெரிவதில்லை சார்.”

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...

உள்ளாட்சித் தேர்தல்களும் உடையும் கூட்டணிகளும்

0
கவர் ஸ்டோரி ஆதித்யா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...

மென்பேனாவில் எழுதுங்கள்…

0
புதிய படைப்புகளைப் படைக்கலாம். கல்கி, ‘மென்பேனா’ மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம். www.kalkionline.com இணையதளத்தில் மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற : 1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in...

இனியொரு விதி செய்வோம்

0
தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து...

அருள்வாக்கு

0
பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்....