உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம்!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளி பதக்கம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடந்த மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் (வயது 19) வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையான அன்ஷூ மாலிக், அதில் வெள்ளிப்பதக்கமும் வென்று வரலாறு படைத்துள்ளார்.

57 கிலோவுக்கான இந்த இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹெலன் லூசி மொரோலியை வீழ்த்தி அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே போட்டியில் 59 கிலோவுக்கான பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா மோர் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய வீரர் சுஷில் குமார் மட்டுமே இந்தியா சார்பில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சுற்றில் அன்ஷு மாலிக்கும் அதற்கடுத்த சுற்இல் அமெரிக்க வீராங்கனையும் முன்னிலை வகித்தனர். அதையடுத்து அமெரிக்க வீரங்கனை ஹெலனின் வலிமையான பிடியில் சிக்கி வலியில் அன்ஷூ துடிக்க, உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றது ம்க சிறப்பானதாகும்.

இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு இந்திய வீரர் சுஷில் குமார் மட்டும் இந்தியா சார்பில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com