0,00 INR

No products in the cart.

 எதிர் வீட்டு மருமகள்

தாரமங்கலம் வளவன்

ஓவிம் : தமிழ்

நிறைய பரிசுப் பொருட்களுடன் கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் குமணன். கிராமத்திற்கு வரும்போது ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டுதான் வந்தான்.  பணியில் சேர்ந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. கிராஜுட்டி, மற்ற சில சலுகைகள் கிடைக்கும் என்றார்கள். மேலும் எக்ஸ் சர்வீஸ் மேன் என்பதை உபயோகப்படுத்தி வேறு வேலை வாங்கிவிடலாம் என்றார்கள். அவனுக்கு நம்பிக்கை இருந்தது. வேறு வேலை கிடைத்துவிடும் என்று.  ஆனால் அம்மாவிடமும், மற்ற வர்களிடமும் வேலையை விட்டுவிட்டதை சொல்லாமல், நீண்ட விடுப்பில் வந்திருப்பதாகச் சொல்லி வைத்தான். வேறு வேலை வாங்கிய பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டான்.

ஆனால் பிரச்சினை அவன் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து ஆரம்பித்தது. அவனைப் பொறுத்தவரை வேறு வேலை வாங்கிய பிறகு தான் கல்யாணப் பேச்சு என்று நினைத்திருந்தான். ஆனால், ஏற்கெனவே ஒவ்வொரு முறை விடுப்பில் அவன் ஊருக்கு வரும்போதும்  அவனுடைய கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மா. இந்த முறை அவனுடைய விடுப்பு முடிவதற்குள் கண்டிப்பாகக் கல்யாணம் நடத்திவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாள்.

பெண் யார் என்றால், அம்மாவின் அண்ணன் மகள் அம்பிகா தான். அம்மாவைப் கேட்டால், அம்பிகா எனது மருமகள் என்பது அம்பிகா பிறந்தவுடன் நிச்சயம் ஆகிவிட்ட விஷயம் என்பாள். இப்படி அம்மா மும்முரமாய் அவனுடைய கல்யாண வேலையை ஆரம்பிப்பாள் என்பதை குமணன் எதிர்ப்பார்க்கவில்லை.

குமணனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. வேலையை விட்டுவிட்டதை வேறு யாருக்கும் சொல்லவில்லை என்றாலும்கூட, மாமாவுக்குத் தெரியப்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் வேலையை விட்டுவிட்டதை மறைத்து  தன் பெண்ணைக் கல்யாணம் செய்து ஏமாற்றிவிட்டதாக அவர் ஆத்திரம் அடைவார். முதலில் அம்மாவிடம் சொல்லிவிடலாமா… இல்லை, நேரிடையாக மாமாவிடமே சொல்லி விடலாம்.

மாமா வீடு உள்ளூர்தான். அம்மாவுக்குத் தெரியாமல் போய் எல்லா விஷயத்தையும் மாமாவிடம் சொல்லிவிட்டு வந்துவிடலாம்.  வேலையில் இல்லை என்பது தெரிந்த பிறகும் அவர் தன் பெண்ணைத் தருகிறேன் என்று சொல்கிறாரா என்று பார்க்கலாம். சட்டையைப் போட்டுக் கொண்டு கிளம்பினான். அப்போது, “அம்மா இருக்காங்களா…” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் எதிர் வீட்டில் இருக்கும் தெய்வானை. அவளுடைய வீட்டை, வீடு என்று சொல்ல முடியாது. ஓலைக்குடிசைதான் அது. அவளுடைய அம்மா சின்ன வயதிலேயே போய்விட தன் குடிகார அப்பாவுடன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறாள். களை பிடுங்க, நாற்று நட என்று வயல் வேலைக்குக் கூலிக்குப் போவாள் அவள்.

தான் சீக்காகப் படுக்கும்பொதெல்லாம் தெய்வானையை வீட்டு வேலைக்கு வைத்துக் கொள்வாள் அம்மா. அவன் ஜம்முவில் இருக்கும் போது, அம்மாவுக்குக் கடுமையான காய்ச்சல் என்று போன் வந்தது. நான் வர வேண்டுமா என்று அவன் கேட்டபோது, தேவை இல்லை. எதிர் வீட்டு தெய்வானை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். வயல் வேலைக்குக்கூட போகாமல் இருபத்து நான்கு மணி நேரமும் கூடவே இருந்து பார்த்துக்கொள்கிறாள் என்று அம்மா சொன்னாள்.

அப்படிக் கவனித்து அம்மாவைக் குணமாக்கினாள் தெய்வானை. உடம்பு சரியானவுடன், அவளுக்குக் கொடுக்கும் கூலிப் பணத்தை மிச்சம் பிடிக்க வேண்டும் என்று  அவளை வேலைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அம்மா. அதையெல்லாம் தெய்வானை பொருட்படுத்த மாட்டாள். அம்மாவுக்கு அடிக்கடி வந்து ஏதாவது உதவி செய்வாள். கூலி என்று எதையும் எதிர்பார்க்க மாட்டாள். அம்மா பழைய சாதம் கொடுத்தால்கூட அதில் திருப்தி அடைவாள்.

“அம்மா.. உள்ளேதான் இருக்காங்க.. நீ உள்ளே போ..  நான் வெளியே போய்விட்டு வர்றதா அம்மாகிட்டே சொல்லிடு என்ன?” தெய்வானையிடம் சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தான் குமணன். மாமாவின் வீடு ஊரின் வடக்கு எல்லையில் உள்ளது. மாமா வீட்டை நெருங்கும்போது, அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. மாமா வீட்டிற்குப் போய் மாமாவிடம் நேரிடையாக ஏன் விஷயத்தைச் சொல்லவேண்டும்.  மேலும்  வீட்டில் அம்பிகா இருப்பாள். இந்தச் சமயத்தில் அங்கே போவது சரியா? எல்லோருக்கும் ஏன் தர்ம சங்கடத்தைக் கொடுக்க வேண்டும். சின்ன மாமா பக்கத்தில்தான் இருக்கிறார். அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்துவிடலாமே.. சின்ன மாமா, பெரிய மாமாவிடம் சொல்லிக் கொள்ளட்டும். சின்ன மாமா விடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வீடு திரும்பினான் குமணன்.

அன்று இரவு பூகம்பம் வெடித்தது. மாமா வீட்டிலிருக்கும் வேலைக்காரன் ஓடிவந்து அம்மாவிடம், “உங்க அண்ணன் கையோட உங்களைக் கூட்டிக்கிட்டு வரச் சொன் னாங்க..” என்றான். அம்மா கிளம்பினாள். விஷயம் என்னவாக இருக்கும் என்று அவனால் ஊகிக்க முடிந்தது. அம்மா வீட்டிற்குத் திரும்பும்போது மணி பத்து இருக்கும். அழுது கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள். அவனுடைய முகத்தைப் பார்க்கா மல் உள்ளே சென்றாள். விடிந்தது. எழுந்தவுடன், “அந்தத் தெய்வானை தாண்டா என் மருமகள்..” என்றாள் அம்மா.

“கொஞ்சம் பொறும்மா.. வேற வேலை கெடைக்கட்டும். நம்ம ஊரு பேங்க்ல செக்யூரிட்டி வேலைக்கு மனு போட்டு இருக்கேன். வரட்டும். அப்புறம் கல்யாணத்தை வைச்சுக்கலாம்” என்றான்.  “சரிடா…” என்றாள் அம்மா. அடுத்த வாரமே அந்த பேங்க் வேலை கிடைத்தது அவனுக்கு. ”இப்ப என்னம்மா சொல்றே..” என்றான் குமணன்.. “என்னோட மருமகள் தெய்வானைதான். அதுல எந்த மாற்றமும் இல்லை” என்றாள் அம்மா. குமணனுக்கும் அது மகிழ்ச்சி தான்.

 

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....