என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !

என்னை ஒரு பெண் கவிஞர் என அழைக்காதீர்கள் !
Published on

முகநூல் பக்கம்

இந்த ஆண்டு கலைஞர் பொற்கிழி விருதுபெருபவர்களில் ஒருவர் கவிஞர் நிகத் சாஹிபா.  யார் இவர்?

"என்னை ஒரு பெண் கவிஞர் என்று அழைக்காதீர்கள்.என்னைப் பொதுவாக ஒரு கவிஞர் என்று அழையுங்கள்" – என்று சொல்லும் நிகத் சாஹிபா – Nighat Sahiba – எனும் காஷ்மீரி கவிஞர்

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்றவர். காஷ்மீரின் கிராமத்தில் பிறந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணான இவரது தாய் படிக்காதவர். தந்தை எட்டாம் வகுப்பு வரைதான் படித்தவர். காஷ்மீரியில் முதலில் புத்தகங்கல் கிடைப்பது கடினம். பல தடைகளை மீறித்தான் இவர் இலக்கியத்துக்குள் வந்திருக்கிறார்.

இவர் நிறைய புத்தகங்கள் படிப்பதால் இவரை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று இவரது தாயார் பயப்பட்டார்.

இலக்கிய உலகில் இவரது கவிதைகளின் கருத்துக்களைப் பார்த்த ஆண் இலக்கியவாதிகள் நேரில் புகழ்ந்தாலும் முதுகுக்குப்பின் இவருக்கு வேறு யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள என்று பேசிக் கொண்டார்கள். இஎவிருதுகள் பெற்றபோது இவர் ஒரு பெண் என்பதால் விருதுகள் பெறுகிறார் என்று பேசினார்கள். இவற்றால் இவர் ஒரு காலகட்டத்தில் எழுதுவதையே நிறுத்தி விட்டார். 2013இல் ஒரு பெண் இசைக்குழு காஷ்மீரில் பயங்கரக் கொலை மிரட்டல்களைச் சந்தித்தது. இதனால் அந்த இசைக்குழுவே கலைக்கப்பட்டது. இதனால் தன் எதிரிகளை வெற்றியடைய விடக்கூடாது எனும் சிந்தனையால் மீண்டும் எழுத வந்தார். பெண் பாடகி, பெண் நடனக்காரி என்று அழைக்கப்படாத போது ஏன் பெண் கவிஞர் என்று அழைக்கப்பட வேண்டும்? என்று இவர் கேட்கிறார்.

இந்திரனின் முக நூல் பக்கத்திலிருந்து

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com