online@kalkiweekly.com

spot_img

எம்பெருமான் காப்பார்!

சரணாகதி

ரெங்கநாதன்

திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு மகான் சேங்கனூரில் இருந்தார். அவ்வூர் அருகிலிருந்த திருக்கண்ணமங்கை கோயிலில் அருளும் பக்தவத்சலப் பெருமாளிடம் இவருக்கு இருந்த பக்தியின் காரணமாக, ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ என்ற பெயர் இவருக்கு வந்தது. கோயிலுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்வது, கோயிலை சுத்தப்படுத்துவது என பகவானிடம் சரணாகதி செய்து வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயம், ‘சரணாகதி செய்பவரை பகவான் காப்பாற்றுவார் என்று எப்படி நம்புவது’ என்று  சந்தேகம் கொண்ட ஒருவர், இவரை அணுகி அந்தக் கேள்வியைக் கேட்டார். ‘இவர் சாஸ்திரத்தை நம்பாதவர்’ என கண்ணமங்கலம் ஆண்டான் புரிந்து கொண்டார்.

சிறிது நேரம் மௌனம் சாதித்தார் திருக்கண்ண மங்கை ஆண்டான். அப்போது  எதிர்  வீட்டிலிருப்பவர் தான் வளர்க்கும் நாயை பிடித்துக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அதே தெருவில் வசிக்கும் மற்றொரு நாய் வேகமாக ஓடி வந்து, எதிர்வீட்டு நாயைப் பார்த்துக் குரைத்து ஹிம்சை செய்தது. யாருடனோ பேசிக்கொண்டிருந்த அந்த நாயின் எஜமானர், தனது நாய் படும் ஹிம்சையை காணப் பொறுக்காமல்,  குபீர் எனப் பாய்ந்து தனது நாயை தாக்க வந்த நாயை கல்லால் அடித்து விரட்டி, தனது நாயை அழைத்துச் சென்றார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணமங்கை ஆண்டான், தன்னிடம் விதண்டாவாத சந்தேகம் எழுப்பியவரிடம், “இந்த எஜமானனுக்கு ஏன் இந்த நாயின் மேல் இவ்வளவு அபிமானம்? இவர் அந்த நாயின் உறவினரா? ரத்த சம்பந்தமா?” என்று  கேட்டார்.

“இது அவரது சொந்த நாய். அதனால் அவருக்கு அபிமானம்” என்றார் அந்த நபர்.

“சொந்த நாயாக இது ஆவதற்குக் காரணமென்ன?” என்று கண்ணமங்கை ஆண்டான் கேட்க, “இந்த நாய் அவரது வீட்டில் இருக்கிறது. அவர் தரும் உணவை உண்டு அவர் காலையே சுற்றிச் சுற்றி வருகிறது. இந்த அன்பே, அது தனது சொந்தம் என நினைக்க வைக்கிறது. அதைக் காப்பது தனது பொறுப்பு என அவர் நினைக்கிறார்” என்றார் அந்த விதண்டாவாத ஆசாமி.

“தனக்குப் பிரியமான நாயை, மற்றொரு நாய் ஹிம்சை செய்தால் அதைக் காப்பாற்றுவது ஒரு அல்ப மனிதனுக்கு சுபாவமாக இருந்தால், பக்தவத்சலன் திருக்கண்ணமங்கை எம்பெருமான் அப்படிச் செய்ய மாட்டாரா? ‘நீயே கதி’ என்று அவர் அடியிலேயே கிடக்கும் அடியவர்களை அணைத்துக்கொள்ளாமல் இருந்து விடுவாரா எம்பெருமான்? சரணாகதி சத்தியமாக, ‘எஜமானன் காப்பாற்றுவார்’ என்று  உலக வாழ்க்கையிலே தெரியும்போது, கருணையே வடிவான எம்பெருமான் சரணாகதி செய்தவர்களை காப்பாற்றுவார் என்ற சந்தேகம் ஒருவருக்கு  வரலாமா? சரணாகதி செய்பவர்களுக்கு எம்பெருமானுக்கு செய்யும் கைங்கர்யம் ஒன்றே லட்சியம். அது ஒன்றே சரணாகதி செய்பவர், தனது எஜமானன் எம்பெருமானுக்குச் செய்ய வேண்டியது” என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் விளக்கிச் சொல்ல, சந்தேகம் தெளிந்து விடை பெற்றார் அந்த நபர்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....
spot_img

To Advertise Contact :