online@kalkiweekly.com

ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் விண்ணப்பம்!

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங்கும் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய சர்வதேச விமான நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அதை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் தொகைகளை குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் சிங் தனது நிறுவனம் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் ஏர் இந்தியாவை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்க மேலும் சில நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா நிறுவனம் 1932-ல் ஏர் இந்தியா நிறுவனத்தை தொடங்கியது. பின்னர் 1953-ல் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு மத்திய அரசு வசம் சென்றது. தற்போது 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் சொந்தமாக வாங்க டாடா நிறூவனம் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

(ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங், டாடா சன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா)

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கனடா பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி: தமிழரான அனிதா ஆனந்த் நியமனம்!

0
கனடா நாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி 3-ம் முறையாக வெற்றிபெற்று அந்நாட்டில் ஆட்சியமைக்கிறது. இதற்கான புதிய அமைச்சரவையில் அதிபர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், கனடாவின் புதிய பாதுகாப்பு...

3 பேர் கொண்ட விசாரணைக் குழு: பெகாசஸ் விவகாரம் பற்றி ஆராய சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

0
நாட்டில் ராணுவம் உடபட பலரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.  இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ்...

என்னிடம் உள்ள சொத்து சில ஆடுகள் மட்டும்தான்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

0
பாஜக மாநில தலைவர் அண்ணமலை தங்கள் நிறூவனம் மீது அவதூறு பரப்பியதாக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் பாஜக மாநிலைத் தலைவர்...

கர்நாடகாவில் பரவும் புதிய உருமாறிய கொரோனா: அரசு எச்சரிக்கை!

0
கர்நாடகாவில் புதிய 'ஏ.ஒய்., - 4.2' என்ற உருமாறிய கொரோனா, இருவருக்கு பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா 2-வது அலை பரவலுக்குப் பின் இப்போது 'ஏ.ஒய்., -...

ரூ 10 லட்சம் அபராதம்: சென்னையில் முகக்கவசம் அணியாதோரிடம் ஒரே நாளில் வசூல்!

0
சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக செனை மாந்கர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை வருகிற 4-ம்...
spot_img

To Advertise Contact :