ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!
துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில், நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லீவிஸ், 36 ரன்களும், ஜெய்ஸ் வால், 49 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்து தந்தனர். இதையடுத்து ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கியது. யின் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர். முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.