ஐபிஎல் 2021 போட்டி: பெங்களூரு vs கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் 2021 போட்டி: பெங்களூரு vs கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியான ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.

ஐபிஎல் 14-வது கிரிக்கெட் தொடரின் சில போட்டிகள், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அப்படி அத்தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறதுஇன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில், பெங்களூருவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இதற்கு முன்னதாக, ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 15 முறையும், பெங்களூரு ஆர்சிபி அணி 13 முறையையும் வெற்றி பெற்றுள்ளன.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 4 புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com