0,00 INR

No products in the cart.

ஒரு பாடல் செட்டுக்கு 2 கோடி செலவு செய்யப்பட்டது

ஸ்டார்ட்…கேமரா…ஆனந்த்…!12
எஸ்.சந்திரமௌலி

ஐஸ்வர்யா ராயின் முதல் படமான ‘அவுர் பியார் ஓகையா’விலிருந்து விலகி, இரண்டு வாரங்கள் இருக்கும், மும்பையிலிருந்து மிகப் பிரபல மான வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ரத்தன் ஜெயின் டெலிபோன் செய்தார். அடுத்து அவர்கள் மன்சூர் கான் இயக்கத்தில் தயாரிக்கும் ‘ஜோஷ்’ என்ற படத்துக்கு நான் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வேண் டும் என்று கேட்டார்.

மன்சூர் கான் என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்ப அதிர்ச்சி! காரணம் அவர் இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் ‘கயாமத் சே கயாமத் தக்’. சென்னையில் கூட ‘ஷோலே’ படத்துக்குப் பிறகு பெரிய அளவில் ஹிட் ஆன அந்தப் படம் சஃபையர் தியேட்டரில் ஒரு வருஷம் ஓடியது.

அமீர் கானும், ஜூகி ஜாவ்லாவும் நடித்த படம். ரத்தன் ஜெயின் மற்றும் மன்சூர் கானைச் சந்திக்க மும்பை சென்றேன். அதற்கு முன்பாக என்னுடைய ‘தேன்மாவில் கொம்பத்து’ படத்தின் டி.வி.டி.யை அவர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

எப்போதுமே என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. நான் யாரையாவது சந்திக்கப் போகிறேன் என்றால், அதற்கு முன்பாக அவர்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்வேன். அப்படித் தான் இப்போது மன்சூர்கான் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

மன்சூர் கான் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற ராஜ்யசபாவின் துணைத் தலைவராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மன்சூர் கானின் அத்தை. தவிர, இந்தி ஸ்டார் அமீர் கானின் ஒன்றுவிட்ட சகோதரர். அமெரிக் காவில் படித்த சாஃப்ட்வேர் இன்ஜினியர்.

சினிமா மீது கொண்ட ஆழமான காதல் காரண மாக டைரக்டர் ஆனவர் மன்சூர்.

‘ஜோஷ்’ படத்துக்கு கேமராமேனாக என்னை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் என்பது கூட சுவாரசியமானதுதான்.

‘காதல் தேசம்’ படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான் என்பதாலும், அந்தப் படத்தின் ஹீரோ யின் தபு என்பதாலும் அதை இந்தியில் வெளியிடுவதற்காக வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வாங்கி இருந்தார்கள்.

‘ஜோஷ்’ படத்தின் கதைப்படி ஷாருக் கானுக்கு, ஐஸ்வர்யா ராய் சகோதரி. எனவே, ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்க அத்தனை பிரபலமில்லாத ஒரு நடிகர் வேண்டி இருந்தது. அந்த ரோலுக்கு ‘காதல் தேசம்’ படத்தில் நடித்திருந்த அப்பாஸ் பொறுத்தமாக இருப்பாரா என்று பார்க்கத்தான், இயக்குநர் மன்சூர் கானுக்கு ‘காதல் தேசம்’ படத்தைப் போட்டுக் காட்டினார் ரத்தன் ஜெயின்.

ஆனால், படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன் இயக்குநர் முதலில் சொன்னது: “இந்தப் படத்தின் கேமராமேன்தான் ஜோஷ் படத்துக்கு வேண்டும்.” அதன் பிறகுதான் ரத்தன் ஜெயினிடமிருந்து எனக்கு போன் வந்தது.

மும்பை சென்று மன்சூர் கானை அவருடைய வீட்டில் சந்தித்தேன். ‘தேன்மாவில் கொம்பத்து’ படத்தின் ஒளிப்பதிவை அவர் பாராட்டினார். ‘எனக்கு இந்திப் படம் என்றாலே ரொம்ப அலர்ஜியாக இருக்கிறது’ என்று ஆரம்பித்து ‘அவுர் பியார் ஓகையா’ படத்திலிருந்து பத்து நாட்களில் வெளியேறின அனுபவத்தைச் சொன்னேன்.

“நான் ஒரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறேன் என்றால், அந்தப் படத்தின் கதையை, காட்சிகளை எப்படி எடுக்க டைரக்டர் திட்ட மிட்டிருக்கிறார் என்று அவர் என்னுடன் விவர மாகப் பகிர்ந்து கொண்டால், அதைப் பூர்த்தி செய்வதற்குத் தக்கபடி என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ளமுடியும்.

மறுநாள் என்னென்ன சீன் எடுக்கவேண்டும் என முதல் நாள் சாயங்காலமே என்னிடம் சொன்னால், மறுநாளுக்கான வேலையைத் திட்டமிட்டுக்கொள்வது சுலபம்” என என் எதிர்பார்ப்புகளைச் சொல்லி, “இப்படி எல்லாம் நான் காதல் தேசம் படத்துல நடந்தது. அதனால்தான் என்னுடைய திறமையை முழுமையாகக் காட்ட முடிஞ்சது; அதைப் பார்த்து, பிடிச்சதனாலத்தான் என்னை உங்க படத்துக்குக் கூப்பிட்டிருக்கீங்க; ஆனால், அதெல்லாம் இந்தியில் சாத்தியமான்னு எனக்குத் தெரியலை” என்றேன்.

நான் பேசியதையெல்லாம் ரொம்பவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்து விட்டு, மன்சூர் கான் சொன்னார், “உங்களை மாதிரி ஒரு கேமராமேன்தான் எனக்குத் தேவை; ஆனா இங்கே அதுமாதிரி யாரும் கிடைக்கலை; கதை டிஸ்கஷனுக்கும், லொகேஷன் பார்க்கவும் கேமராமேனைக் கூப்பிட்டால், நழுவிடறாங்க; உங்களோட அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு; நீங்க சொன்ன எல்லாம் எனக்கு ஓகே. நாம ரெண்டுபேரும் சேர்ந்து இந்தப் படத்துல ஒர்க் பண்ணறோம்” என்றார்.

மன்சூர் கான் பற்றிச் சொல்லும்போது, அவருடைய அம்மா என் நினைவுக்கு வருகிறார். தன் மகன் மன்சூருக்கு 34 வயது என்று கூடப் பார்க்காமல் மகன் மீது பாசத்தைக் கொட்டவும், கண்டிப்புக் காட்டவும் செய்த அவர் ஒரு மறக்கமுடியாத கேரக்டர்.

ஜோஷ் படப்பிடிப்பின்போது, அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு ஓட்டலில்தான் நான் தங்கி இருந்தேன். தினமும் காலையில் ஓட்டலில் இருந்து என்னை அழைத்துக் கொண்டு அடுத்து மன்சூர் கான் வீட்டிலிருந்து அவரையும் அழைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்ல கார் வரும். மன்சூரின் அம்மா, “கே.வீ! நீ கேமராவை மட்டும் கவனிச்சால் போதாது! இவன் ரெண்டு சாக்லேட்டுக்கு மேல் தின்னாமல் இருக்கிறானான்னும் கவனிச்சிக்கோ!” என்று சொல்வார். காரணம் மன்சூர் ஒரு மெகா சாலேட் பிரியர். மதிய நேரங்களில்

சாப்பாட்டுக்குப் பதிலாக ‘பைவ் ஸ்டார்’ சாலேட்டை ஒரு கை பார்த்து விடுவார். பிரேக் நேரம் என்றால், பைவ் ஸ்டாரும் கையு மாகத்தான் இருப்பார்.

ஜோஷ் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என விரும்பினார் மன்சூர்கான். சென்னைக்கு வந்து ரஹ்மானைச் சந்தித்துப் பேசினார். ஏற்கெனவே கையில் ஐந்தாறு படங்கள் இருந்தாலும், மன்சூர் மீது கொண்ட மதிப்பால் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக் கொண்டார். படத்தின் பூஜை யன்று மன்சூர் கான், ஏ.ஆர். ரஹ்மான் பெயரோடு என் பெயரையும் சேர்த்து வைத்திருந்த பேனரைப் பார்த்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.

கடலை ஒட்டிய பீச்சில் பிரம்மாண்டமான ஒரு தேவாலயத்தில் படத்தின் பாடல்கள் படமாக்குவதாகத் திட்டம். அதற்காக மும்பையில், கோவாவில் இருக்கும் ஒரு மிகப் பெரிய சர்ச்சை மாடலாக வைத்து ஒரு செட் உருவாக்கப்பட்டது. தொண்ணூறுகளிலேயே இரண்டு கோடி ரூபாய் அந்த செட்டுக்காகச் செலவு செய்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஏப்ரல் மாதத்திலாவது ரஹ்மானிடமிருந்து பாடல்களுக்கான டியூன் வந்து சேர்ந்துவிடும் என எதிர்பார்த்து மொத்த யூனிட்டே காத்திருந்தது. ஏப்ரல் மாதத்துக்குள் அந்தப் பாடல்களை எப்படியும் படம்பிடித்து முடித்துத் தீரவேண்டும். இல்லை என்றால், மே மாதத்தில் மும்பை யில் பருவ மழை ஆரம்பித்துவிடும்.

மழை காலத்தில் ஷூட்டிங் நடத்தமுடியாது என்பது மட்டுமில்லை. இரண்டு கோடி ரூபாய் செலவு செய்து போடப்பட்ட செட் மொத்தமும் பாழாகிவிடும். டைரக்டர் டென்ஷனின் உச்சகட்டத்தில் இருந்தார்.

மன்சூர் கான் ரஹ்மானுடன் பேசி நிலைமையை விளக்கினார். ரஹ்மான் “உங்கள் அவசரம் எனக்குப் புரிகிறது. ஆனால்,சுதந்திரமாக கால அவகாசம் எடுத்துக்கொண்டு இசை அமைத் தால்தான் ரிசல்ட் நன்றாக இருக்கும். இப்போதுள்ள வேலை பளுவில் அது ரொம்பவும் கஷ்டம்” என்று தன் நிலைமையை எடுத்துச் சொன்னார். டைரக்டரது அவசரத்துக்கு டியூன் போட்டுத் தருகிற சூழ்நிலையில் ரஹ்மான் இல்லை என்பது தெளிவானது.

வேறு வழி இல்லாமல், ஏப்ரல் மாதத்துக்குள் பாடல் காட்சிகளை எடுத்தே தீர வேண்டும் என்கிற கட்டாயமான சூழ்நிலையில் மன்சூர் கான், இசையமைப்பாளர் அனு மாலிக்கை அணுகி, உடனடியாக டியூன் களைப் போட்டு வாங்கி, திட்டமிட்டபடி பாடல் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார்.

(தொடரும்)

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

0
நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள் அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார். தொகுப்பில்...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

பாலாபிஷேகம்

0
தமிழ் ஹெச்.என்.ஹரிஹரன் “மெய்யாலுமா சொல்றே..?” காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா. “ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா... எப்பவும்...

நியாயமா அய்யா?

0
விஜய்டாலி ஜெகநாதன் வெங்கட் “வாடா... வா...” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான். “என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன். “ஒரு...