
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் விருந்தளித்தார். இந்த விருந்தில் அவரே உணவுகளைத் தாயாரித்த்உ வீரரக்ளுக்குப் பரிமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில், ஞ்சாப் மாநிலத்திலிருந்து சென்று பங்கேற்ற வீரர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், தனது பண்ணை வீட்டில் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்தின் சிறப்பம்சங்களான மட்டன், சிக்கன் குழம்பு போன்ற உணவுகளை முதல்வர் அமரிந்தர் சிங் தன் கைப்பட சமைத்து அசத்தியது மட்டுமின்றி, இரவு நடைபெற்ற விருந்தில் வீரர்களுக்கு தானே உணவு பரிமாறினார். பஞ்சாப் வீரர்களுடன், ஹரியானைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் விருந்தில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.