0,00 INR

No products in the cart.

கண்ணான கண்ணே !

முனைவர் அ.போ. இருங்கோவேள்

 

அக்டோபர் 14, உலக கண் பார்வை தினம்

1960 மற்றும் 1970களில் பள்ளிக்கூடங்களில் ஒரு வகுப்பில் அதிகபட்சம் 1 அல்லது 2 குழந்தைகள் மட்டுமே கண்ணாடி அணிந்திருப்பார்கள். ஆனால், இன்று அந்த எண்ணிக்கை 5 முதல் 10 வரை அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் என்ன? அதற்குத் தீர்வு என்ன? பாரதத்தின் கண் மருத்துவத் துறையின் அடையாளமாகத் திகழும் சென்னை, சங்கர நேத்ராலயாவில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடானது. சங்கர நேத்ராலயாவின் துணைத் தலைவர் மற்றும் குழந்தைகள் கண் மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், ஆப்டோமெட்ரி துறைத் தலைவர் டாக்டர் எஸ். விஸ்வநாதன், கான்டாக்ட் லென்ஸ் வல்லுநர்  ஆசிஃப் இக்பால், ஆப்டோமெட்ரிஸ்ட் சி.பி.அக் ஷயா,  நால்வருடன் சந்தித்து உரையாடியதன் தொகுப்பு இங்கே…
டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன்: ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த சுகாதார நல்வாழ்வில் இணையவழிக் கல்வி  ஏற்படுத்தும் நீண்ட கால விளைவுகளை (Long Term Effect)யும் இப்போது நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், இளைய தலைமுறையினருக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே கிட்டப்பார்வை எனப்படும் மயோபியா அதிகரித்தே வந்துள்ளதும் கவனிக்க வேண்டிய ஒரு பிரச்சினை ஆகும்.  அந்த வகையில் கிட்டப்பார்வை என்பது ஒரு உலகளாவிய பொது சமூக சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இந்தக் கிட்டப்பார்வை என்பது  நமது கண்ணின் அச்சு நீளம்,  கண்ணின் குவிய நீளத்துடன் பொருந்தாதபோது ஏற்படுகிறது. அதாவது ’தோராயமாக’ கோள வடிவில் இருக்கும் நமது கண்கள், நீளமான கண்களாக இருந்தால், நாம் பார்க்கும் பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள், நமது கண்கள் நீளமான கண்களாக இருக்கும்பட்சத்தில் இந்த அதிகப்படியான கண் வளர்ச்சி யின் காரணமாக, மையப்புள்ளி விழித்திரைக்கு முன்னால் குவிந்துவிடும். எனவே பார்க்கும் பொருள் தெளிவாகத் தெரிவதில்லை. இந்த  மயோபியா என்பது உலகின் பொதுவான ஒளிவிலகல் பிழையாகும். இது 30% குழந்தை கள் மற்றும் 18 வயதிற்கும் குறைவான இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை பாதிக்கிறது. இது தற்போதைய நிலைப்படி, 2050 வருடங்களில் உலக மக்கள் தொகையில் சுமார் 50% மயோபிக் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே கிட்டப்பார்வையைக் குறித்து முறையான விழிப் புணர்வு மேம்பட வேண்டிய காலகட்டத்தில் இப்போது நாம் இருக்கிறோம் என்பதே உண்மை.

டாக்டர் எஸ்.விஸ்வநாதன் : உலக அளவில் கிழக்கு ஆசிய மக்களில் மயோபியா அதிக அளவில் காணப்படுகிறது. மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் இரண்டும் தற்போதைய காலகட்டத்தில், மயோபியா வளர்ச்சி மற்றும் அதிகரிப்பில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைப் பருவத்தில் மயோபியாவின் தாக்கம் அருகிருந்து செய்யக்கூடிய வேலைகளான பார்த்தல், படித்தல், எழுதுதல் போன்ற வேலைகளுக்கான நேரம் சமீப காலங்களில், குறிப்பாக, கொரோனாவின் தாக்கத்திற்குப் பிறகு அதிகரித்திருப்பதால், உடலுக்கு அதிக வேலை இல்லாமல் இருப்பதும், மேலும் குறைந்த நேரமே வெட்டவெளி இடங்களில் இருப்பதும் மட்டுமல்லாமல், உயர் கல்வி, உணவு, நகரமயமாக்கல் மற்றும் இது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களாலும் ஏற்பட்டுள்ளது.

தீவிர மயோபியா எனப்படும் தீவிர கிட்டப்பார்வை காரணமாக கண்புரை, மயோபிக் மாகுலர் சிதைவுகள், கிளகோமா மற்றும் பல்வேறு விழித்திரை சிக்கல்கள் போன்ற பார்வையை அச்சுறுத்தும் பிரச்சினைகளும் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்பும் அதிகம் என்பதும் வேதனையான உண்மை. எனவே, மயோபியாவைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது குறைப் பதற்கான பல்வேறு நடவடிக்கைகள்  “ஆப்டிகல் (கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ்) மற்றும் மருந்தியல் மயோபியா கட்டுப்பாட்டு தேவை கள்” என்ற கருதுகோள்படி கண்ணின் வளர்ச்சியைக் குறைக்கப் பயன்படு கின்றன.

இவை பொதுவாக, 1. கண்ணாடிகள், 2. சிறப்பாக  வடிவமைக்கப்பட்ட மென்மையான காண்டாக்ட் லென்ஸ்கள், ஒரே முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு அப்புறப்படுத்தக்கூடிய ஆர்த்தோகெராடாலஜி கான்டாக்ட் லென்ஸ்கள் 3. குறைந்த அளவு அட்ரோபின் கண் சொட்டு மருந்துகள் பற்றிய விழிப் புணர்வே  இப்போதைய அவசியம் மற்றும் அவசரத் தேவை ஆகும்.

நாம் பார்க்கும் பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரை யில், குவியவேண்டிய இடத்தில் குவியாமல், விழித்திரைக்கு, முன்பாகவே குவிந்ததால், பொருட்கள் தெளிவாகத் தெரிவதில்லை.

கிட்டப்பார்வை என்பது, ஒருவருக்கு அருகில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியும். ஆனால் தூரத்தில் உள்ள பொருட்கள் தெளிவாகத் தெரியாது. உதாரணமாக, பள்ளிக்கூட வகுப்பு அறையில் தனது நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருப்பதைப் படிக்கமுடியும். ஆனால், ஆசிரியர் கரும் பலகையில் எழுதியிருப்பது தெளிவாகத் தெரியாது.

இந்தக் குறையைப் போக்குவதற்காக, கண்ணுக்கு முன்பு ஒரு கண்ணாடி வில்லையை வைத்து, அந்த ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சரியான இலக்கில் குவியும்படி செய்வதுதான் மூக்குக்கண்ணாடி. அதன் மூலம் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைச் சரி செய்வது சாத்திய மாகிறது.

குறிப்பாக, குழந்தைகளின் கற்றல் செயல்பாட்டில் கண்களின் பங்கு மட்டும் 80% சதவிகிதம் என்கிறார்கள். கிட்டப்பார்வையைத் திருத்துவதற்காக கண்ணாடி அணிவதன் மூலம், குழந்தைகள் தங்கள் கற்றல் திறனில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதை எங்கள் அனுபவங்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.  இது மயோபியா என்னும் கிட்டப்பார்வையை – ஆங்கிலத்தில் ரெஃப்ராக்டிவ் எரர் எனப்படும் ஒளி விலகல் பிழையைத் திருத்துவது. ஆனால், திருத்துவதைக் காட்டிலும் கட்டுப்படுத்துவது என்பது இப்போதைய காலத்தின் கட்டாயம். அதற்கான வரப்பிரசாதமாக மயோபியாவைக் கட்டுப்படுத்தும் மூக்குக்கண்ணாடிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் வந்துவிட்டன. இது அமெரிக்காவின் எஃப்.டி.ஏ. உள்ளிட்ட அமைப்புகளால் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட கண்டுபிடிப்பும்கூட. பலருக்கும் வழங்கப்பட்டு மயோபியாவைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருக் கிறார்கள்.

2010 வரை, ஒற்றைப்பார்வை கண்ணாடிகள் லென்ஸ்கள் மட்டுமே பயன் படுத்தப்பட்டன (அவை மயோபியாவை ஆப்டிகலாகச் சரி செய்யப் பயன் படுத்தப்படுகின்றன). அப்போதிருந்தே கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்துவதற் காக மயோபியா கட்டுப்பாடு சிறப்பு கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த ஸ்பெஷல் மயோபியா கட்டுப்பாடு கண்ணாடியின் லென்ஸின் மையப் பகுதி வழியாகத் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க அனுமதிக்கின்றன. அதே வேளையில் இந்த லென்ஸின் சுற்றுப் பகுதியில் உள்ள பகுதிகள் அதாவது தீவிர உயர் பிளஸ் லென்ஸ்கள் கொண்ட சுற்றியுள்ள மண்டலங்கள் விழித்திரை முழுவதும் ஒரு மாறுபட்ட மயோபிக் டிஃபோகஸை உருவாக்கி கண்ணின் வளர்ச்சியை மெதுவாக்கும் இதன் மூலம் மயோபியா கட்டுப்படுகிறது என்பது சமீபத்திய கண் மருத்துவ சாதனை மற்றும் கண்டுபிடிப்பாகும்.

ஆசிஃப் இக்பால் : கண்ணாடி அணிவதைத் தவிர்க்க விரும்புகிறவர்கள் காலம் காலமாகவே கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபத்திய சாதனைகளின்படி கான்டாக்ட் லென்ஸ் மூலமும் கிட்டப்பார்வை யைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு அதிகமாகி இருக்கிறது.

கிட்டப்பார்வை உள்ளவர்கள், கண்களின் அமைப்பியல் மற்றும் சுகாதார அமைப்பினைப் பொறுத்து மென்மையான ’மல்டிஃபோகல் கான்டாக்ட் லென்ஸ்’களைப் பயன்படுத்தலாம்.

மென்மையான மல்டிஃபோகல் கான்டாக்ட் லென்ஸ்கள் மயோபியா கட்டுப்பாட்டுக்கு மைய தூர வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன. மற்றும் வழக்கமான மென்மையான கான்டாக்ட் லென்ஸைப் போலவே துல்லியமாக பார்வை அனுபவத்தை வழங்குகின்றன.

மையோபியா முன்னேற்றத்தைத் தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதால், குழந்தைகளுக்கு மல்டிஃபோகல் கான்டாக்ட் லென்ஸை பரிந்துரைப்பது தூரப் பார்வைகளிலிருந்து வேறுபட்டது. குறைந்த மற்றும் நடுத்தர ப்ளஸ் பவரைவிட அதிகமான ப்ளஸ் பவர் மல்டிஃபோகல் கான்டாக்ட் லென்ஸ்கள் மயோபியா வளர்ச்சியைப்  பயனுள்ள வகையில் குறைப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மென்மையான மல்டிஃபோகல் கான்டாக்ட் லென்ஸ்கள் மயோபியா முன்னேற்றத்தை 20% முதல் 70% வரை குறைக்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஒருநாள் மட்டுமே அணிந்துவிட்டு, அப்புறப்படுத்தக்கூடிய மென்மை யான கான்டாக்ட் லென்ஸ்களுக்கு எஃப்.டி.ஏ. அனுமதி வழங்கியுள்ளது. இவை குழந்தைகளுக்கு இணக்கமான வாய்ப்பான லென்ஸ்கள் ஆகும்.

அவை 8-12 வயது குழந்தைகளில் மயோபியாவின் வளர்ச்சியை மெதுவாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த லென்ஸ்கள் மயோபியா வைக் கட்டுப்படுத்த செயலில் உள்ள கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. கான்டாக்ட் லென்ஸின் ஒரு பகுதி ஒளி விலகல் பிழையைச் சரி செய்வதன் மூலம் தொலைதூரப் பார்வையை மேம்படுத்துகிறது. மேலும் பார்க்கும் பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிரின் சில பகுதிகள் விழித் திரைக்கு முன்னால் குவிந்துள்ளது. இது மயோபியாவின் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் தூண்டுதலைக் குறைக்க இந்தச் செயல்முறை ஏற்றுக் கொள் ளப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, தினசரி அணியும் மென்மையான மல்டிஃபோகல் லென்ஸ்கள் வழக்கமான மென்மையான காண்டாக்ட் லென்ஸுடன் ஒப்பிடும் போது மயோபியா முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அல்லது குறைப்ப தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கணிசமான செயல்திறன் கொண்ட எளிய பொருத்தமான மென்மையான மல்டிஃபோகல் காண்டாக்ட் லென்ஸ்கள் மயோபியா கட்டுப்பாட்டுக்கான முதன்மை விருப்பமாக கருதப் படலாம்.

அக்யா பாலகிருஷ்ணன் :  கார்னியா என்பது நமது கண்ணின் முன்புறம் கண்ணுக்கு ஒரு கண்ணாடி ஜன்னலைப் போலச் செயல்படும் மெல்லிய இரத்தக் குழாய்கள் ஏதுமில்லாத நிறமற்ற திசு. பொதுவாக இதன்மீதுதான் கான்டாக்ட் லென்ஸ்கள் அமர்கின்றன.

ஆர்த்தோகெராடாலஜி லென்ஸ்கள் மயோபியாவைக் கட்டுப்படுத்து வதற்கு எஃப்.டி.ஏ.வின் ஒப்புதலை சமீபத்தில்தான் பெற்றிருந்தாலும், இது மயோபியா கட்டுப்பாட்டிற்கான முதல் பயனுள்ள ஆப்டிகல் தலையீடு ஆகும். இந்த லென்ஸ்கள் அடிப்படையில் இரவில் தூங்கும் முன்பு அணிந்து கொண்டு, பின்னர் காலையில் அகற்றப்படும்.

ஆர்த்தோகெராடாலஜி லென்ஸ்கள் கண்களின் திருத்தத்துடன் ஒப்பிடும் போது கண்ணின் 30 முதல் 80% வளர்ச்சியை (மயோபியா வளர்ச்சி) கட்டுப் படுத்தும் திறன் கொண்டது. இந்த சிகிச்சை மயோபியா கட்டுப்பாட்டிற்குப் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள விருப்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் அணியும்போது முன்புற கார்னியாவைத் தற்காலிகமாக மறுவடி வமைக்கும் செயல்முறையைப் பயன்படுத்துகிறது. மற்றும் லென்ஸ் அகற்றப் பட்ட பிறகு ஒளி விலகல் பிழையைக் குறைக்கிறது. இது ஒரு நபர் எந்தத் திருத்தமும் இல்லாமல் தூரத்தில் தெளிவாகப் பார்க்க அனுமதிக்கிறது. மயோபியா மேலும் அதிகரிப்பதைத்  தடுக்க இது கண்ணின் பின்புறத்தில் ஒரு இடை-புற டிஃபோகஸையும் உருவாக்குகிறது. மற்ற கான்டாக்ட் லென்ஸ் விருப்பத்தைவிட ஒரே இரவில் ஆர்த்தோகெராடாலஜி லென்ஸின் ஒரு நன்மை என்னவென்றால், இந்த லென்ஸ்கள் வீட்டில் அணியவேண்டும். மற்றும் லென்ஸைக் கையாளும்போது பெற்றோர்கள் அவர்களுக்கு வழிகாட்டலாம். அல்லது கண்காணிக்கலாம். இந்த லென்ஸ்கள் விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. ஏனெனில் அவர்கள் விளையாடும் கண்ணாடியோ கான்டாக் லென்ஸோ அணிய தேவையில்லை.

டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன் :  கண்ணாடி மற்றும்  கான்டாக்ட் லென்ஸ் கள் ஒரு பக்கம்  மயோபியா எனப்படும் கிட்டப்பார்வையைக் கட்டுப்படுத்து வதற்கு காலம் காலமாகப் பயன்படுத்தப்படும் முறை என்றாலும், பல்வேறு நோயாளிகளின் கேள்விகள், தேவைகள் புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டு கிறது. அந்த வகையில் மயோபியாவை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு விடையாக இப்போது ஒரு கண் சொட்டு மருந்து செயல்படுகிறது. மயோபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக/ குறைப்ப தற்காக குழந்தைகளுக்கு கிட்ரோ கண் சொட்டுகளை (அட்ரோபின் 0.1%) பரிந்துரைத்து வருகிறோம்.

இந்தக் கண் சொட்டு மருந்து பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் எல்லா வகையிலும் பின்விளைவுகள்  ஏதும் அதிகமாக இல்லாத, அதே நேரத்தில் ஒரு கணிசமான அளவில் கிட்டப்பார்வைக் கட்டுப்பட்டினை வெளிப்படுத்தி யுள்ளன.

சங்கர நேத்ராலயாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவு அட்ரோபின் கண் சொட்டுகள் (0.01%) 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மயோபியா முன்னேற்றத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டது. சிகிச்சையின்போது பொதுவாக குழந்தைக்கு பெற்றோர் / பராமரிப்பாளர் தினசரி குழந்தை இரவு படுக்கப் போகும் முன்பு ஒரு முறை அட்ரோபின் கண் சொட்டு மருந்து பயன்படுத்தப்பட்டது. சிகிச்சையின் தொடர் கண்காணிப்பின் மூலம், படிப்படியாக அட்ரோபின் டோஸ் நன்மை தரும் வகையில் குறைக்கப்பட்டது. மீளக்கூடிய விளைவு களைக் குறைக்க சிகிச்சையின் முடிவில் டோஸ் அல்லது டோஸ் அதிர் வெண்ணை படிப்படியாகக் குறைப்பது நன்மை தரும். அந்த வகையில் சிகிச்சையின் நிறைவில் கிட்டப்பார்வை கணிசமான அளவில் கட்டுப்படுத் தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குழந்தைகளின் கண் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கான  மைல் கல்லாகும்.

மயோப்பியா பவர் தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் தினசரி சற்று நேரம் செயல்படுதல், கண்களுக்கு அருகிலிருந்து செய்யும் நெருக்கமான வேலை மற்றும் மொபைல் போன், லேப்டாப், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்றவற்றில் செலவழிக்கும் நேரம் குறித்து சுற்றுச்சூழல் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

2 வயது வரையிலான குழந்தைகள் கண்டிப்பாக மேற்குறிப்பிட்ட சாதனங்களைப் பயன்படுத்தக்கூடாது. மேற்குறிப்பிட்ட சாதனங்களை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மற்றும் 5-12 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சம் 2 மணிநேரம் தான் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
ஒவ்வொரு 20 நிமிடம் கண்ணுக்கு அருகிலிருந்து செய்யும் வேலைக்குப் பிறகு, குழந்தைகள் 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை 20 விநாடிகளுக்கு தொலைவில் பார்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட சாதனங் களைக் குறைந்தது கண்ணிலிருந்து 30 செ.மீ. தொலைவில் வைத்து செய்ய வேண்டும். மேலும், சிறு குழந்தைகளின் அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை வெளியில் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அல்லது கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

 

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...