கபடி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் எம்.பி!

கபடி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் எம்.பி!

மகாராஷ்டிராவின் மாலேகான் என்ற இடத்தில், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகி, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்இந்த வழக்கில் பாஜக பெண் பிரமுகர் பிரக்யா தாக்குர் (51) கைதுசெய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் தன் உடல் நலக்குறைவை காரணம் காட்டியதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பிஜேபி சார்பாக பிரக்யா தாக்குர் மத்திய பிரதேசம், போபால் தொகுதியில் போட்டியிட்டு லோக்சபா எம்பியாக தேர்வானார்.
இந்நிலையில் அவர் போபால் மைதானத்தில் கூடைப்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், திருமணம் ஒன்றில் நடனமாடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில், நவராத்திரி விழாவுக்குச் சென்ற பிரக்யா, குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனமாடினார்.
நேற்று முன்தினம் போபாலில் உள்ள காளி கோயிலுக்குச் சென்றார். அருகே உள்ள மைதானத்தில் பெண்கள் கபடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரக்யாவும் உற்சாகமாக கபடி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உடல் நலம் சரியில்லை என காரணம் காட்டி ஜாமீனும், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கும் பெற்ற பிரக்யா, இப்படி கபடி ஆடும்போதும் நடனம் ஆடும்போதும் உடல்நலம் சரியாகி விடுகிறதா? அவரின் இரட்டை வேடம் பாஜக தலைமையின் கண்களுக்கு தெரியவில்லையா என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com