0,00 INR

No products in the cart.

கலாசார முக்கியத்துவம் வாய்ந்த தாம்பூலம்!

வாழ்வியல்

ராஜி ரகுநாதன்

தாம்பூலம் என்பது நமது கலாசாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கிறது. சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை வெற்றிலைப் பாக்குக்கு அளிக்கப்படுகிறது. தாம்பூலம் அளிப்பதும், தாம்பூலம் உட்கொள்வதும் பண்டைக்காலம் முதல் இந்திய கலாசாரத்தின் ஒரு பாகமாக உள்ளது. திருமணம் நிச்சயம் செய்யும் சடங்கினை, ‘தாம்பூலம் மாற்றிக்கொள்வது’ என்றே அழைக்கிறோம்.

ஆரோக்கியத் தாம்பூலம் :

உணவு உண்டபின் உட்கொள்ளும் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சேர்ந்து இருக்கும். இதைத் தவிர, அவரவர் ருசிக்கேற்ப தேங்காய்த் துருவல், குங்குமப்பூ, ஏலம், குல்கந்து சேர்த்து உட்கொள்வதும் உண்டு. ஆயுர்வேத மருத்துவ நூல்களில் வெற்றிலைக்கும் தாம்பூலத்திற்கும் சிறப்பான இடம் உண்டு. வெற்றிலையோடு ஜாதிக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம், பாக்கு, சுண்ணாம்பு போன்றவற்றை சேர்த்து செரிமானத்திற்கு மருந்தாக அளிப்பார்கள். தாம்பூலத்தில் சேர்க்கப்படும் பொருட்கள் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். உண்ட உணவு சரியாக செரிக்காவிட்டால் வயிற்றில் வாயு உற்பத்தியாகி வலி ஏற்படும். அதற்கு தாம்பூலம் போடுவது சிறந்த நிவாரணி.

ஆன்மிகத் தாம்பூலம் :

கோயிலில் செய்யும் அர்ச்சனைகளிலும் வீட்டுப் பண்டிகைகளில் இறைவனுக்குச் செய்யும் ஷோடச உபசார பூஜைகளிலும் நைவேத்தியத்துக்குப் பிறகு அளிக்கும் தாம்பூலத்திற்கு முக்கியத்துவம் உண்டு. நவராத்திரி போன்ற பண்டிகைகளில் பெண்மணிகளை வீட்டிற்கு அழைத்து தாம்பூலம் கொடுத்து வணங்குவது நம் சிறப்பான கலாச்சாரம்.

தாம்பூலத்தில் முக்கியமானது வெற்றிலை. இதனை சம்ஸ்கிருதத்தில், ‘நாகவல்லி’ என்று அழைப்பர். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய வெற்றிலை, ஸ்வர்கம் சேர்ந்து அங்கிருந்து பூமிக்கு வந்ததாக வரலாறு.

‘பூகிபல சமாயுக்தம் நாகவல்லி தளைர்யுதம்

கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் பிரதிகுஹ்யதாம்’

என்று கூறி இறைவனுக்கு தாம்பூலம் சமர்ப்பிக்கிறோம்.

விருந்தினரை, ‘அதிதி தேவோ பவ!’ என்று இறைவன் வடிவில் நோக்கும் கலாசாரம் உள்ள நாம், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உணவுக்குப் பின் ஒரு தட்டில் வெற்றிலை சீவல் சுண்ணாம்பு வைத்து உபசரிப்பது வழக்கம். நம் வீட்டிற்கு பெண்கள் யார் வந்தாலும் அம்பிகையாக எண்ணி வெற்றிலை பாக்கு, பழம், ரவிக்கைத் துணி கொடுத்து மகிழ்வது நமது பண்பாடு. பண்டைய நாட்களில் ஒப்பந்தம் செய்து கொண்ட பின் ஒருவருக்கொருவர் தாம்பூலம் மாற்றிக்கொள்வர். போருக்குச் செல்லுமுன் படைத் தலைவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்புவர். தகுதி வாய்ந்தவருக்கு தட்சணை கொடுக்கும்போது தொகையைக் கட்டாயம் தாம்பூலத்தில் வைத்துத்தான் கொடுக்க வேண்டும். துணிமணிகள் கொடுக்கும் போதும் வெறுமனே கொடுக்காமல் அதில் வெற்றிலை பாக்கு வைத்து கொடுப்பது கௌரவம் அளிக்கும்.

ஊமையாக இருந்த மூக கவிக்கு காமாட்சி அம்மன் சிறுமியாக தரிசனம் அளித்து தன் வாயிலிருந்து தாம்பூலத்தை எடுத்து கொடுத்தாள். அதனை உண்டதால் ஐந்நூறு பாடல்களைப் பாடினார் அந்த பக்தர். அவை, ‘மூக பஞ்சசதி’ என்று போற்றப்படுகிறது.

இனி, தாம்பூலம் பற்றி சில ஐயங்களைப் பார்ப்போம்.

கேள்வி : உணவு உண்ட பின் எல்லோரும் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொள்ளலாமா?

பதில் : கூடாது. சிறு வயதினர், மாணவப் பருவத்தினர் தாம்பூலம் போட்டுக் கொள்ளக் கூடாது. திருமணத்திற்குப் பின்னர்தான் தாம்பூலம் போடுவது அனுமதிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நோயாளிகளும் தாம்பூலம் சாப்பிடக்கூடாது.

கேள்வி : தாம்பூலம் உட்கொள்வதால் பல்லில் கறை படியமா?

பதில் : தினமும் உணவின் பின் மட்டும் ஒரே ஒரு முறை தாம்பூலம் போட்டால் கரை படியாது. வெற்றிலையோடு புகையிலை சேர்த்தால் கரை படியும்.

கேள்வி : வெற்றிலை பாக்கு போடுவதால் வாயில் கேன்சர் வருமா?

பதில் : வெற்றிலையோடு பாக்கு, சுண்ணாம்பு மட்டும் சேர்த்து உணவுக்குப் பின் தாம்பூலம் போடுபவர்களுக்கு கேன்சர் நோய் வராது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அதேபோல், எப்போதும் வெறும் பாக்கு மட்டுமே வாயில் போட்டு மெல்லுவதும் நல்லதல்ல.

உலகின் மிகப் பழைமையான இந்திய சமுதாயத்தில் ஏதோ ஒரு வடிவில் இயற்கையை வழிபடுவது காணப்படுகிறது. எந்த பண்டிகையை எடுத்துக்கொண்டாலும் அதில் இயற்கை வழிபாடும் இணைந்தே காணப்படும். சித்திரை புத்தாண்டில் வேப்பம்பூ, பொங்கலன்று நெல் தானியம் மற்றும் கால்நடைகள், பிள்ளையார் சதுர்த்தியன்று பழங்கள், இலைகள், பூக்கள் ஆகியவற்றுக்கு முக்கியம் அளித்து, அவற்றில் இறைவனை வழிபடுகிறோம். அதேபோல் ஒவ்வொரு சுப காரியத்திலும் வெற்றிலைப் பாக்கு வைத்துக் கொடுக்கும் தாம்பூலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....