0,00 INR

No products in the cart.

கவிஞர் புலமைப் பித்தன் காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அதிமுக முன்னாள் அவைத்தலைவரும் பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

85 வயதான புலவர் புலமைப் பித்தன் மூச்சு திணறல் காரணமாக சென்னனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து அவரது உடல் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புலவர் புலமைப் பித்தன் இதுவரை 4 முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றுள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆருக்கு நெருக்கமான புலமைப்பித்ததன், அவரது பல்வேறு திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ‘’ஆயிரம் நிலவே வா’’ மற்றும் ‘’, நான் யார்.. நான் யார்’’ ஆகியவை உட்பட பல பிரபல திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தங்கம் விலை அதிரடி சரிவு: மக்கள் மகிழ்ச்சி! 

0
தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்துள்ளது.   –இதுகுறித்து சென்னை தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்ததாவது:   கடந்த ஆண்டு ஏற்பட்ட...

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

0
சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில...

இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் ரத்து! 

0
இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.  இந்திய கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் இந்த கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம்! 

0
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்று நாளை காலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.   –இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...

இன்று 75-வது சுதந்திர தினம்:  நாடெங்கும் கோலாகலம்!

0
நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடியை முதலில்  வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்ந்த...