0,00 INR

No products in the cart.

காத்தருள்வாய் கலைவாணியே!

வாசகர் ஜமாய்க்கிறாங்க

– ஆர்.ஜெயலட்சுமி

லைமகளின் மறுபெயர் சரஸ்வதி. ‘சரஸ்’ என்றால் ‘பொய்கை’ என்று பொருள். ‘வதி’ என்றால், வாழ்பவள்.’ சரஸ்வதி என்றால் ‘மனம்’ என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பது பொருள்.

* வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி, யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றைத் தருபவள். மதுரமான வாக்கைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், ஸ்வாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும்.

* கல்விக் கடவுள் சரஸ்வதிக்கென்று இந்தியாவிலேயே தனிக்கோயில் உள்ள இடம் தஞ்சை மாவட்டம், திருவாரூர் பூந்தோட்டம் என்ற ஊருக்கருகிலுள்ள கூத்தனூர் என்ற இடமும், திருநெல்வேலி டவுன் கீழரத வீதியிலுள்ள கோயிலும்தான். விஜயதசமி அன்று பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வித்யாவியாசம் செய்து செல்கின்றனர்.

* சரஸ்வதிக்கு பவள மல்லிகை தவிர, மற்ற எல்லா மலர்களாலும் அர்ச்சனை செய்யலாம்.

* சரஸ்வதியின் மூச்சிலிருந்து வேதங்கள் தோன்றின. அவளது தொண்டையிலிருந்து ‘மீமாம்சை’ தோன்றியது. நாக்கிலிருந்து அறுபத்தி நான்கு கலைகளும் பிறந்தன. தோளிலிருந்து காமக்கலை உருவாயிற்று என்று, பிரமாண்ட புராணம்’ கூறுகிறது.

* வேலூர், தாராகேசுவரர் ஆலயக் கோட்டத்திலுள்ள பிரம்மாவிற்கு எதிரில் சரஸ்வதி தேவி காட்சி தருகிறாள்.

* சரஸ்வதி, காயத்ரி, சாவித்திரி ஆகிய மூன்று வடிவங்களைக் கொண்டு வாணி, சிவ பூஜை செய்த திருத்தலம் திருவீழிமிழலை. சரஸ்வதி தேவி வழிபட்ட மூன்று லிங்கங்கள் காயத்ரீஸ்வரர், சரஸ்வதீஸ்வரர், சாவித்திரீஸ்வரர்.

* ஆந்திர மாநிலம், பாசாரா’ என்ற தலத்தில் வாக்தேவிக்கு ஒரு கோயில் உள்ளது. இது வியாசரால் வழிபடப்பட்டது. இங்கு சரஸ்வதி தேவியின் கையில் வீணை இல்லை.

* காசியிலுள்ள தில்பாண்டேஸ்வரர் மகாதேவி மந்திர் கோயிலில் பளிங்கினால் ஆன சரஸ்வதி தேவி விக்ரஹம் உள்ளது.

* கர்நாடக மாநிலம், பேலூர் கோயிலில் சரஸ்வதி தேவியின் நடனக் கோலத்தை தரிசிக்கலாம். கால் சிலம்பு வேதம் ஒலிக்க, வீணையின் நாதம் வேதகீதமாக இசைக்க, ஆனந்த இசை வெள்ளத்தில் மூழ்கியவளாக துடிப்புடன் நடனமாடும் ஈடு இணை இல்லாத கலைவாணியின் கலைப்படைப்பைப் பார்த்து வியக்கலாம்.

* கூத்தனூரில் அம்பாளின் திருப்பாதங்களை விஜயதசமியன்று வெளிப்புறம் நீண்டிருக்குமாறு மலரால் நீட்டி விடுவார்கள். அன்று மட்டும் பக்தர்கள் அனைவரும் இந்தப் பாதங்களுக்கு மலராலும் குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யும் பாக்கியத்தைப் பெற முடியும். இது, எந்தக் கோயிலிலும் இல்லாத புதுமையாகும். ஒட்டக்கூத்தர் இத்தல அம்பிகையிடம் அருள் பெற்றதால், கூத்தன் ஊர்’ என்றே இது வழங்கப்படலாயிற்று. பிறந்த குழந்தையின் நாக்கில் தேனால் எழுதும் வழக்கம் இங்குள்ளது. மேலும், அர்ச்சனை செய்யும்போது பேனா அல்லது பென்சில் போன்ற கல்விக்கு உதவும் பொருட்களை வைத்து வழிபட்டு, பின் அதைப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.

* தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள கண்டியூரில் பிரம்மாவும் சரஸ்வதி தேவியும் தம்பதி சமேதராக தனிச் சன்னிதியில் காட்சி தருகின்றனர்.

* தஞ்சை மாவட்டம், திருப்பூந்துருத்தி புஷ்பவனேசுவரர் கோயிலின் ஆலயக் கருவறைக் கோட்ட தேவதையாக சரஸ்வதி உள்ளாள். மேலிரு கரங்களில் ஜப மாலை, சுவடியையும், முன்னிரு கரங்களில் அபய, ஊரு முத்திரையையும் கொண்டுள்ளாள்.

* கம்ப ராமாயணம் எழுதிய கவி கம்பர், சரஸ்வதி தேவியின் பக்தர். இவர் தனது இறுதி காலத்தில் தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் விக்ரஹத்தை சேர மன்னரிடம் ஒப்படைத்து, நவராத்திரி ஒன்பது நாளும் அந்தச் சிலைக்கு பூஜை செய்ய வேண்டும் என வேண்டினார். அதன்படி, இன்றைக்கும் அந்த சரஸ்வதி சிலை பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து ஒன்பது நாளும் ஒரு யானை மூலம் கொண்டுவரப்பட்டு, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பூஜை செய்யப்படுகிறது. அங்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் விஜயதசமி அன்று மீண்டும் பத்மநாபபுரம் திரும்புவாள்.

* ‘தாரா பூஜை என்ற வழிபாட்டில் அஷ்ட சரஸ்வதிகளின் (எட்டு வித சரஸ்வதிகள்) வடிவங்கள் கூறப்பட்டுள்ளன. வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துனஜா (சியாமளா), கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீலசரஸ்வதி, கிளி சரஸ்வதி ஆகிய வடிவங்களே அவை.

* வேதங்கள் பற்றிய ஆய்வு செய்வதற்காக பிரம்மன்தான் முதலில் சரஸ்வதியை வழிபட்டார் என்று கூறுகிறது சரஸ்வதி மகாத்மியம்.

* சரஸ்வதி தேவிதான் உலகின் ‘முதல் பெண் தெய்வம்’ என வேதங்கள், புராணங்கள் கூறுகின்றன. இதனால் சரஸ்வதி தேவிக்கு, ஆதிகாரணி’ என்று ஒரு பெயர் வழங்கப்படுகிறது.

* சரஸ்வதியின் கையில் உள்ள வீணைக்கு,கச்சபி என்று பெயர். ஒரு வீணையில் முழுதும் வாசிக்கத் தெரியாவிட்டாலும், சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களை மீட்டினால் கூட போதும். ஒரு யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.

* காஞ்சி, ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் சரஸ்வதி தேவிக்கு தனிச் சன்னிதி உண்டு. இவளை ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் படைத் தலைவிகளில் ஒருவளான சியாமளா தேவியின் சொரூபமாக வணங்குகிறார்கள். இந்த சரஸ்வதி தேவி தனது எட்டுக் கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், மலரம்பு, கரும்பு, வில் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள்.

* கோட்டயம் சங்கனாச்சேரி சாலையிலுள்ள பளிச்சிக்காடு சரஸ்வதி கோயிலில் நவராத்திரியின்போது சரஸ்வதி தேவியை குழந்தை வடிவில் அலங்காரம் செய்வர்.

* சரஸ்வதி தேவிக்கு, அட்சர சுந்தரி’ என்ற பெயரும் உண்டு. எழுத்துக்கள் 51. இவற்றுள் முதல் எழுத்து ‘அ.’ இந்த 51 எழுத்துக்களும் அம்பாளின் உடம்பாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன. எனவேதான், சரஸ்வதி தேவியின் கையில் உள்ள ஸ்படிக மாலையில் 51 மணிகள் கோர்க்கப்பட்டுள்ளன.

* வாக்குக்கு அதிபதி சரஸ்வதி தேவி. தலையில் வாக்தேவதையாகவும், நெற்றியில் காமேச்வரியாகவும், புருவ மத்தியில் மேதினியாகவும், கழுத்தில் விமலாவாகவும், இருதயத்தில் அருணா வாக்தேவதையாகவும், நாவியில் ஜயினியாகவும், மர்ம ஸ்தானத்தில் சர்வேச்வரியாகவும், மூலாதாரத்தில் கவுளினியாகவும் வியாபித்திருக்கிறாள் என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

விடுபடுவோம்!

0
ஒரு கப் Zen - 13 எழுத்து : லேzy இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் மனிதனுக்கு survival ஒரு பொருட்டே அல்ல. உணவுக்கும் நீருக்கும் பஞ்சம் இருந்த காலமெல்லாம் மலையேறியாகி விட்டது. புயலோ, பெருமழையோ, வெள்ளமோ, எதுவாயினும்...

மங்கையர் மலர் முகநூல் பதிவுகள்!

0
மிதக்கத்தான் ஆசை! இதுவரை மிதக்கவில்லை. அதனால், கப்பல் பயணம் செய்யத்தான் ஆசை. விமானத்தில் நின்றுகொண்டு பயணம் செய்ய முடியாது. வெளியே எதையும் பார்க்க முடியாது. கப்பலின் மேல் தளத்தில் நின்று, நடந்து எல்லாவற்றையும் பார்த்து...

நிழலும் நிஜமும்!

0
கதை : மாதவி ஓவியம் : பிரபுராம் ஏற்கெனவே சினிமாவுக்கு லேட்! ரசிகர் ஷோ! ஆயிரம் ரூபாய் டிக்கெட். சிவா, ரவி, மணி ஓடும் பஸ்ஸில் ஏறினர். “ஏய்யா தம்பிகளா... ஃபுட்போர்டில் நிக்காதீங்க. உள்ளே வாங்க.” கண்டக்டரின்...

ஜோக்ஸ்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க படங்கள் : பிரபுராம்  “உங்க வீட்டுக்காரர் சமையல் டிப்ஸ் தந்தார்னு ஏன் கோபப்படறே?” “பின்ன... சீடை கெட்டியானா, ஊற வைச்சு சப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம்னு சொல்றாரே!” - ஆர்.பத்மப்ரியா, திருச்சி  “தலைவரே! உங்களுக்கு லோகமான்ய...

புத்தகப் பதிப்பில் தடம் பதிக்கும் இளம்புயல்!

0
நேர்காணல் : சேலம் சுபா அந்தப் பெண்மணி இடது கை பழக்கம் உள்ளவர். துரதிர்ஷ்டவசமாக வலது கையினால் வற்புறுத்தி எழுத வைத்த காரணத்தினால் எழுத ஆசையிருந்தும் முடியாமல் வருந்தியவர். இவரிடம் இருந்த எழுத்துத் திறமையும்...