கார் விபத்தில் வானதி சீனிவாசன் மகன்: நூலிழையில் உயிர் தப்பினார்!

கார் விபத்தில் வானதி சீனிவாசன் மகன்: நூலிழையில் உயிர் தப்பினார்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜக வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் இன்று காரில் சேலம் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

சேலம் மாவட்டம் பட்டர்பிளை மேம்பாலத்தில் ஆதர்ஷ் சென்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக கடந்த மாதம் 31-ம் தேதி ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மகன் கருணாசாகர் பெங்களூரில் காரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி அவர் உட்பட ஏழு பேர் பலியாகினர். காரை அதிவேகமாக ஓட்டி வந்தததால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com