கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை பிரிந்தார் மனைவி ஆயிஷா!

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானை பிரிந்தார் மனைவி ஆயிஷா!

Published on

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா, அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், இப்போது டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தயாராகி வருகிறார். இவருடைய மனைவி, ஆயிஷா முகர்ஜி. கடந்த 8 வருடங்களுக்கு முன் இவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ஆயிஷா (வயது 46), ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்தார். கிக்பாக்ஸிங் வீராங்கனையான ஆயிஷா, ஏற்கனவே ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவரை மணமுடித்து 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்திருந்தார். பின்னர் ஷிகர் தவானை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. இந்நிலையில், ஷிகர் தவானை பிரிந்துவிட்டதாக ஆயிஷா முகர்ஜி தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அதில் ஆயிஷா தெரிவித்திருப்பதாவது:

வாழ்க்கையில் 2-வது முறையாக விவாகரத்து செய்வேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அப்ப்டி செய்யும்படி ஆகிவிட்டது.

-இவ்வாறு குறிப்பிட்டுள்ள ஆயிஷா இந்த விவாகரத்து பற்றி நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஷிகர் தவான் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

logo
Kalki Online
kalkionline.com