online@kalkiweekly.com

கிரிப்டோ கரன்சிக்கு சீனாவில் தடை: அதன் மதிப்பு உலகளவில் சரிவு!

உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் அதன் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு ஆதரவு இருந்தது. ஆயினும் இந்த கரன்சிகளின் மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சீனாவில் இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கு சீனாவின் மத்திய வங்கி தடை விதித்தது. அதன்படி சீனாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி மூலம் நடைபெறும் பணப் பரிவர்த்தனை, வர்த்தகம் ஆகியவை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சீனாவில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை முழுவதுமாக முடங்கியது.

இந்நிலையில் கிரிப்டோ கரன்சி மதிப்பு உலக சந்தையில் இறங்கத் தொடங்கி உள்ளது.

தற்போது பிட் காயின் மதிப்பு 43 ஆயிரம் டாலருக்குக் கீழே சரிந்துள்ளது. பிட் காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1% மேல் சரிந்துள்ளது. மற்ற முன்னணி கரன்சிகளின் மதிப்புக்களும் தாறுமாறாகச் சரிந்துள்ளன. குறிப்பாக எதிரியம் 2% மற்றும் கர்டோனோ 2% மேலும் சொலானா 7% வரை சரிந்துள்ளன.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

வெங்காயத்தால் வந்த விபரீதம்:அமெரிக்காவில் பரவும் விநோத நோய்!

0
அமெரிக்காவில்  37 மாகாணங்களில் சுமார் 650 மக்கள் புதிய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு 'சால்மோனெல்லா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள சிவாவாலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட...

வடகிழக்கு பருவமழை தொடக்கம்: தென்மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

0
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. அதன் காரணமாக இன்று திருநெல்வேலி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதுகுறித்து...

67வது தேசிய திரைப்பட விருதுகள் விழா:ரஜினிக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது!

0
நாட்டின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று காலை  டெல்லியில் நடந்தது. இந்த விழாவில் இந்திய திரைத்துறையின் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது....

திருவாரூர் தியாகராஜர் கோவில் குளக்கரை: கனமழையால் இடிந்து விழுந்தது!

0
திருவாரூரில், கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் தென்கரை 100 மீட்டர் இடிந்து விழுந்தது. இதனால், அதுமட்டுமன்றி தென்கரையில் சாலைகள் முழுவதுமாக விரிசல் விடப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி, இந்த பகுதியில்...

351 பக்க குற்றப் பத்திரிக்கை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தாக்கல்!

0
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி கடந்த ஜூன் மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மீது கொலைமிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட...
spot_img

To Advertise Contact :