கிச்சன் சாமன்கள் அதோகதி!

கிச்சன் சாமன்கள் அதோகதி!

என் பேத்தி தக்சு குட்டிக்கு கிச்சனில் உள்ள பாட்டில் மற்றும் டப்பாக்கள்தான் அவளுடைய விளையாட்டுப் பொருள் அவள் அம்மா பார்த்து பார்த்து வாங்கித்தரும் விளையாட்டுப் பொருட்கள் எல்லாமே   சிறிது நேரம் தான்! மற்றபடி  கிச்சனில் உள்ள டப்பாக்களை எடுத்து திறந்து தரச் சொல்லி, உள்ளே உள்ள சாமான்கள் அதோ கதி தான்!

இதற்காக நாங்கள் ஒரு ஐடியா செய்வோம். பாட்டிலை மூடியை திறப்பது மாதிரி பாசாங்கு செய்து '' அச்சோ.. திறக்க முடியலையே" என சொல்லிவிடுவோம் நாளடைவில் குழந்தை என்ன செய்தாள் தெரியுமா? ஒரு பாட்டிலை கொண்டு வந்து அவளே  " அச்சோ.. திறக்க முடியலையே"" என சொல்லியபடி எங்களை திறந்து கொடுக்க சொன்னதை இன்றளவிலும் சொல்லி சிரிப்போம்

-அன்புக்கரசி பாலசுப்ரமணியன், திருவாரூர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com