0,00 INR

No products in the cart.

கொஞ்சம் சிரிங்க பாஸ்

வாசகர் ஜோக்ஸ்
ஓவியம் ரஜினி

1. “கமலம், நீ சிவப்புப் புடைவை கட்டிக்கிட்டு தலைநிறைய மல்லிகைப் பூவோடு ஜல் ஜல்னு கொலுசு சத்தத்தோடு நடந்து வரும்போது எப்படி இருக்கே தெரியுமா?”

“சென்னாத்தானே தெரியும்?”

“வேண்டாம் சொன்னா நீ ரொம்ப பயப்படுவே…”
– வி. ரேவதி, தஞ்சை

 

2.“புலவருக்கு ஏன் சவுக்கடி விழுகிறது?”

“மன்னரைப் பார்த்துப் புகழ்ந்து பாடுவதற்குப் பதில் ஒப்பாரி பாடல் பாடி விட்டாராம்.”

– சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்

 

 

 

3. “படத்தின் க்ளைமேக்ஸ் நம்பும்படியாக இல்லையே…”

“அப்படியா?”

“ஆமாம். கடைசியில் பேய் விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குதுன்னு காட்றாங்க.”

– ஆர்.யோகமித்ரா, சென்னை

 

4. “தலைவர் கட்சி மாறப்போறார்னு எப்படிச் சொல்றே?”

“இப்பல்லாம் பேசும்போது கட்சியின் நலன் கருதி, கட்சியின் நலன் கருதின்னு அடிக்கடி பேசுறாரே…”

– ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

 

 

5. “மதியம் ஒரு மணிக்கு டி.வி. சீரியல் பார்த்தியா சரசா?”

“ஆமா ஏன் கேக்கறே?”

“இல்ல நீ கேவிக் கேவி அழுத மாதிரி சத்தம் கேட்டிச்சே…”

– வி. ரேவதி, தஞ்சை

 

 

6.“மடைதிறந்த வெள்ளம்போல் பேசுகிறாரே தலைவர் ஏன்?”

“கடை மூடுவதற்குள் பேச்சை முடிக்கணும்னு கூட்டத்துக்கு கூட்டிக் கிட்டு வந்தவங்க சொல்லிட்டாங்களாம்.”

– சி. ஸ்ரீரங்கம் திருவெறும்பூர்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வானில் ஒலித்த பாரதியின் பாடல்கள்

0
பாரதி நினைவு நாள் நூற்றாண்டு சாந்தி ஜெகத்ரட்சகன் செப்டெம்பர் 18, காலை 5 மணி. பரபரப்பாக இயங்கத் தொடங்கிய சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மையம் திடும் மென்று குழந்தைகளின் குரலில் பாரதியார் பாடல்கள் ஒலித்தன....

400 ஆண்டுகால வியாபாரம்

0
வாசகர் கேள்வியும் வல்லுநர் பதிலும் சோம.வள்ளியப்பன் பங்குச்சந்தை ஒரு வகை சூதாட்டம் தானே! பத்திரிகைகள் பணம் பெற்றுக்கொண்டு பரிந்துரைகள் எழுதுவதாகவும் அறிகிறேன். பங்கு சந்தை கள் ஏன், எப்படி, எங்கு. என்று தோன்றின?   - திருவரங்க வெங்கடேசன்,...

ஷங்கரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது

0
ஸ்டார்ட்...கேமரா...ஆனந்த்-15 எஸ்.சந்திரமௌலி "டைரக்டர் ஷங்கர் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி. அவருக்கு மக்களைக் கவரும் வகையில் பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் எடுக்கத் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்டி அவர் மக்களை மிரட்டிவிடுகிறார். அதனால் அவரது படங்கள்...

அஞ்சலி

0
ஓவியம் : ராஜன்

கொலுவில் ‘அப்பூச்சி’

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் கல்கி கடைசிப் பக்கம் படிப்பவரா? நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் இந்த வாரம் உங்கள் ராசி பலனைக் கணிப்பது சுலபம். இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள்...