சம்பாதி; செலவழி!

சம்பாதி; செலவழி!
Published on
எழுத்து : லேzy

ஒரு கப் Zen – 11

இன்றைய மனிதனுக்கு நிஜத்திற்கும், அந்த நிஜத்தை குறிக்கும் சின்னத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது.

He is unable to differentiate between reality

And the symbol which denotes that reality.

உதாரணத்திற்கு, செல்வத்திற்கும் பணத்திற்கும் வித்தியாசம் புரியாமல் வாழ்கிறான் மனிதன். செல்வம்தான் நிஜம், பணம் அச்செல்வத்தின் சின்னம். It's a mere symbol of wealth, and not wealth itself. இந்த ஒரு அறியாமையில் உலகம் சிக்கித் தவிக்கின்றது. நூறு கோடிக்கு சொந்தக்காரியாக இருப்பாள். தெருவில் பூ விற்பவளிடம் பத்து ரூபாய்க்கு பேரம் பேசிக்கொண்டு நிற்பாள்.

சில பிரபலமான கோடீஸ்வரர்களைப் பற்றிச் சொல்லுவார்கள். ''அப்பா… எவ்வளவு சிம்பிளா இருக்கிறார்? அவ்வளவு பணம் இருந்தும் ரொம்ப சாதாரணமாக வாழ்கிறார்'' என்று. இதில் என்ன பெருமை? கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துவிட்டு, நீ சிம்பிளா, ஆரவாரம் இல்லாமல் வாழ்வதற்கு சம்பாதிக்காமலேயே ஏழையாக இருந்திருக்கலாமே!

'பணம் சம்பாதித்துவிட்டு, அதை செலவு செய்ய துணிவு இல்லாதவனுக்கு பணம் எதற்கு?' என்று கேட்கிறேன். பணம் சம்பாதித்து, பெரிய செல்வந்தனாய் இருக்கிறாயா? நன்றாக அனுபவி. உலகத்தைச் சுற்றி வா. எந்தெந்த நாட்டில் எந்தெந்த விஷயம் சட்டப்படி குற்றமில்லையே அந்தந்த நாட்டிற்குச் சென்று ஆட்டம் போடு. அதுக்குத்தானே பணம். அதை விட்டுவிட்டு, நீயும் அனுபவிக்காமல் பணத்தைப் பெட்டியில் போட்டு பூட்டி, அதை காவல் காத்து, Stressஐ வளர்த்துக்கொண்டு, நோய் நொடியில் அவதிப்பட்டு, உனது பிள்ளைகளையும், ''கஷ்டம் தெரிஞ்சு வாழுங்கப்பா" என்று அவர்களையும் கஞ்சனாக்கி விடுவதற்கு, எதுக்கு சம்பாதித்தாய்? பேசாமல் நீ ஏழையாகவே இருந்துவிட்டு போயிருக்கலாம்!

பணம், நாம் சுவாசிக்கும் காற்று போன்றது. இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கக் கூடாது. வெளியேற்ற வேண்டும். உள்ளே சென்று, வெளியே வந்தால்தான் அது சுவாசம் ஆகும். அதுதான் நல்ல உடல் நலம் தரும். பணமும் அப்படித்தான். சமுதாயத்தில் பணப் புழுக்கம் இருந்த வண்ணம் இருக்க வேண்டும். அதுதான் நல்ல பொருளாதாரத்துக்கு சிறந்த வழி.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com