சிவகுமாரின் சபதம்: பட்டர்பிளை முட்யில் ஹிப்ஹாப் ஆதி!

சிவகுமாரின் சபதம்: பட்டர்பிளை முட்யில் ஹிப்ஹாப் ஆதி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ராகவ் குமார்

தமிழ் சினிமாவில் கொங்கு மண்ணில் இருந்து வந்து மீசையை முறுக்கி கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்தவர் ஹிப் பாப் தமிழா ஆதி! .தற்சமயம் ''சிவகுமாரின் சபதம்'' என்ற பெயரில் படம் தயாரித்து இயக்கி வருகிறார்.

இவருடன் புகழ் பெற்ற சத்ய ஜோதி பிலிம் நிறுவனமும் கை கோர்த்து உள்ளது. ஹீரோயின் உட்பட அனைவரும் புது முகங்கள். அந்த வகையில் மேடை நாடக கலைஞர்களுக்கு கூட இந்த படத்தில் வாய்ப்பு தந்திருகிறார். சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் பட்டு சேலை எடுக்க  காஞ்சிபுரம் சென்ற ஆதி, அங்கே பட்டு நெசவு செய்யும் சிலரை சந் தித்து பேசிருக்கிறார். அந்த நெசவாளர்கள் சொன்ன விஷயத்தில் இம்ப்ரெஸ் ஆன ஆதி இதை நெசவு வாழ்வியல் சார்ந்த கதையாக மாற்றி இருக்கிறார்.பட்டர்பிளை முடி கொண்ட வாலிபனாக நடித்து இருக்கிறார் .

தமிழ் சினிமாவில் விவசாயிகள் பிரச்சனை பற்றி பேசும் சினிமாகள் அதிகம்.நெசவாளர்கள் பற்றி பேசும் படங்கள் குறைவு. அநத வகியில் ''சிவகுமாரின் சபதம்'' இக்குறையை போக்கும் என்கிறார்கள்.கல்கியின் சிவகாமியின் சபதம் தலைப்பில் உந்தபட்டு கூட ஆதி சிவகுமாரின் சபதம் தலைப்பை வைத்து இருக்கலாம். சிவகாமியின் சபதம் மக்களிடையே பெரிய வெற்றி பெற்றது போல ஹிப் பாப் தமிழா ஆதியின் சிவகுமாரின் சபதமும் வெற்றி பெறும் என நம்ப்படுகிறது.-ராகவ் குமார்

logo
Kalki Online
kalkionline.com