சீருடைய பொம்மைகள்!

சீருடைய பொம்மைகள்!
Published on
வாசகர் ஜமாய்க்கிறாங்க
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்

நவராத்திரி என்றாலே, நம் நினைவிற்கு வருவது கொலு பொம்மைகள்தான். நவராத்திரி பண்டிகை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுவது போல, கொலு பொம்மைகளும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.

* மத்தியப் பிரதேச மாநிலம், தசராவில் அதிகம் இடம்பிடிப்பவை ஜபவா பொம்மைகள். களி மண், காகிதம், கூழ், பஞ்சு கொண்டு உருவாக்கப்பட்டு, நிஜ ஆடைகளால் அலங்காரம் செய்து காது, கழுத்தணிகளோடு இந்த பொம்மைகளை தத்ரூபமாக கொலுவில் வைப்பர்.

* மேற்கு வங்கம், கிருஷ்ணா நகரில் உருவாக்கப்படுவது குர்னி பொம்மைகள். இவற்றின் தத்ரூபமான வடிவமே இதன் சிறப்பு. கல்கத்தா காளி சுவர் அலங்காரங்களும் இங்கு பிரசித்தம். தவிர, நதுங்கிராம் என்ற கிராமத்தில் உருவாக்கப்படும் மர பொம்மைகளும் இங்கு ஃபேமஸ். முக்கியமாக, நதுங்கிராம் ஜோடி ஆந்தைகள் இடம்பெறாத கொலுவே மேற்கு வங்கத்தில் இல்லை எனலாம்.

*குஜராத்தில் மரத்தால் செய்யப்படும் கார்பா பொம்மைகள் பிரசித்தம். மரத்தில் செய்யப்படும் நடனமாடும் ஆண் – பெண் ஜோடிகள். இது இடம்பெறாத கொலுவே இல்லை.

* நம் தமிழகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் சிறப்பானவை. களி மண்ணுக்கு பதிலாக, இவை பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் உபயோகித்து செய்யப்படுபவை. தாத்தா, பாட்டி, பொய்க்கால் குதிரை ஜோடி, பாவாடை நாட்டியப் பெண் பொம்மைகள் பிரசித்தம்.

* கர்நாடக மாநிலம், ராம்நகரா மாவட்டத்தில் உள்ள கொம்பேகலா நகரா (பொம்மைகளின் ஊர்) என வழங்கப்படுகிற சென்னப் பட்டணத்தில் உருவாக்கப்படும் மர பொம்மைகள் இடம் பெறாத தசரா பண்டிகையே கிடையாது.

* சென்னையில் கொசப்பேட்டையில் களி மண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு தயாரிக்கப்படும் பொம்மைகள் மிகவும் பிரசித்தம்.

* விசாகப்பட்டினத்தில் ஒட்டிக்கோபகா கிராமத்தில் உருவாக்கப்படும், 'ஒட்டிக்கோபகா பொம்மலு' என்கிற மர பொம்மைகள் கொலுவில் இடம் பெறுகின்றன.

* ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் கொண்டப்பள்ளி கிராமத்தில் உருவாக்கப்படும் கொண்டப்பள்ளி பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

* சித்தூர் பகுதியில், முக்கியமாக திருப்பதி மற்றும் திருச்சானூரில் அதிக அளவு மரப்பாச்சி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. 'தம்பதி பொம்மலு' எனப்படும் ஜோடி மரப்பாச்சி பொம்மைகளை விதவிதமான அலங்காரங்களுடன் கொலுவில் வைக்கிறார்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com