சூப்பர் ஸ்டாருடன் சூப்பர் டைரக்டரின் மகள்

சூப்பர் ஸ்டாருடன் சூப்பர் டைரக்டரின் மகள்
Published on
சினிமா
வினோத்

இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான். அவர் திரைப் படங்கள் தமிழ் ரசிகர்களுக்கு, உலகத் தரத்தில் பிரம்மாண்டமான காட்சி வடிவமைப்புகளுடன் ரஜினிகாந்தை வைத்து 2.0 என்னும் படம் எடுத்து இந்தியாவையே தமிழ்த் திரையுலகம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் குடும்பத்தினரைப் பற்றி அவர் அதிகம் பொதுவெளியில் பேசுவதில்லை.

இயக்குநர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சில மாதங்களுக்கு முன் தொழில் அதிபரும், கிரிக்கெட் அணியின் உரிமை யாளருமான கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுடன் திருமணம் நடைபெற்றது. லாக்டவுன், கூட்டம் சேர்ப்பதில் தடை என இருப்பதால் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் சங்கரின் பிரம்மாண்ட ஸ்டைலில் இல்லாமல் மிக எளிதாக நடந்தது. இதில் நெருங்கிய உறவுகளையும், முக்கிய திரைப் பிரபலங் களையும் மட்டும் அழைத்திருந்தார் ஷங்கர்.

அண்மையில் ஷங்கரின் இளைய மகள் அதிதி தன் டிவிட்டர் பக்கத்தில் கொடுத்த சரப்ரைஸ். நான் நடிகையாகிறேன் என்பது. அப்பா வின் ஆசியுடன் நடிகையாகக் களமிறங்கியிருக்கிறார், இந்தப் பெண்.

சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து தங்களின் 2டி என்டர்டெயின் மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்கள். அவர்களின் அடுத்த படம் 'விருமன்'. கதாநாயகன் கார்த்தி. டைரக்டர் 'கொம்பன்' படத்தை இயக்கிய முத்தையா. படப்பிடிபு இந்த மாதம் பொள்ளாச்சியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் படத்தின் பூஜை நடந்தது. அன்றே தன் மகளை அறிமுகம் செய்து வைக்கும் சூர்யா, ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார் ஷங்கர்.

தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரில் பாவாடை தாவணியில் கிராமப் பெண் தோற்றத்துடன் வெளியான போஸ்டரில் கார்த்தி மிஸ்ஸிங். கிராமத்துப் பெண்ணாக நடிப்பவர் கிளாமர் ரோலில் நடிப்பாரோ, மாட்டரோ என்ற சந்தேகத்தை ராஜமெவுளி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்ட தன் தந்தை படக் கம்பெனியின் புது லோகோ அறிமுக விழாவில் அல்ட்ரா மார்டன் உடையில் வந்து தீர்த்துவிட்டார்.

கடந்த விநாயகர் சதுர்த்தியன்று சூப்பர் ஸ்டாரைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் அதிதி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com