0,00 INR

No products in the cart.

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

கோபாலகிருஷ்ணன்

பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம். எந்தவித அரசியல் / நிறுவனப் பாகுபாடுகளும் இன்றி அனைத்து செய்தி வாசிப்பாளர்களையும் ஒன்று திரட்டி அவர்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக்கொண்டு சேவையாற்றிக்கொண்டிருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி முடிக்க செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணிகள் நேர்மையான முறையில் செய்யப்பட்டன.  தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் கடந்த செப்டெம்பர் 5ஆம் தேதி சென்னையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஜனநாயக முறைப்படி நேர்மையாகத் தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே முடிவு களும் அறிவிக்கப்பட்டன.

சங்கத் தலைவராக பிரபுதாஸன், பொதுச்செயலாளராக சண்முகவேல், பொருளாளராக தமிழரசி சிவக்குமார் மற்றும் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டன. சென்னை அடையாறு போர்ட்கிளப்பில் உள்ள அண்ணா பல்கலைகழக அலும்னி கிளப்பின், வோல்டெக் உமாபதி ஹாலில் கடந்த வாரம் நடை பெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட நீதிபதி. டாக்டர் ஐ. ஜெயந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்குச்  சான்றிதழ்களை வழங்கினார். தேர்தல் அலுவலர் செந்தமிழ் அரசு பதவிப்பிரமானம்  செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள்  உறுதிமொழி கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டர்.

“தமிழ்நாட்டில் செய்தியாளர்களுக்கென்று பல அமைப்புகளும் சங்கங்களும் இருக்கின்றன. ஆனால். அதில் இருக்கும் பெரும்பாலான சங்கங்களில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாகத் தேர்தல் நடத்தப்படாத சூழலில், முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி, சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து மற்ற சங்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது எங்கள் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். சங்க உறுப்பினர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை முன்னெடுத்துவந்த தமிழ்செய்தி வாசிப்பாளர்கள் சங்கம், தொடர்ந்து தமிழக ஊடகங்களில் பணியாற்றும் செய்தி வாசிப் பாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதோடு, சங்க உறுப்பினர்களின் நலனுக்காக என்றைக்கும் பாடுபடும் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் செயலாளர் சண்முகவேல்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 தலைவி விமர்சனம்

1
- ராகவ்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் பயணத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகத் தந்திருக்கிறார் டைரக்டர் விஜய். படத்தில் எந்த ஒரு ரியல் கேரக்டர் பெயரையும் மாற்றாமல், அப்படியே தந்திருப்பதும், ஒரு...