0,00 INR

No products in the cart.

சொர்க்க வாசல் திறக்குமா?

ஒரு கப் ZEN – 12
எழுத்து : லேzy

உயிரற்ற நிலைதான் மரணம். தனியாக மரணம் என்று ஒன்று கிடையாது. Lack of Life force is called Death.

‘உயிர்’ என்பது ஒரு அபூர்வ சக்தி. அது பல பரிமாணங்களில் செயல்படுகிறது. இரு உடல்களைச் சேர்க்கச் செய்கிறது. அந்தச் சேர்க்கையின் விளைவாக புது உடல் ஒன்றை உருவாக்கி, அதனை ஆட்கொள்கிறது. வயது முதிர்வினாலோ, நோய் நொடியினாலோ அல்லது விபத்தினாலோ உடல் பழுதடைந்துபோனால், அந்த ‘உயிர் சக்தி’யானது, அந்த உடலைப் பிரிகிறது. அப்படிப் பிரியும் தருணத்தைத் தன் அறியாமையினால், மனிதன் ‘மரணம்’ என்று அழைக்கின்றான்.

“What you call death is actually an exchange of Atoms” என்கிறார் U.G. Krishnamurti. இயற்கையில் நடக்கின்ற அணுக்களின் இடமாற்றம். சராசரி மனிதன் அந்த உயிர் பிரியும் நேரத்தில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி வருந்துகிறான். ஓலமிட்டு அழுகின்றான்.

ஆனால், மகான்கள் அப்படியல்ல. மகான்கள் மனதிற்கும் உடலிற்கும் அப்பாற்பட்டவர்கள். ZEN பக்குவத்தை நமக்கு அளிக்கின்றது. ‘உயிர் சக்தி’யே நிரந்தரம். உடலும் மனமும் காலத்தால் அழியும் தன்மை கொண்டது.

உயிர் பிரிந்ததற்குப் பின் என்ன நடக்கும்? எங்கே செல்வோம்? மீண்டும் வருவோமா? சொர்க்கம் தன் வாசலைத் திறக்குமா? என்றெல்லாம் மனிதன் தன் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறான்.

ஆனால், ‘‘பிறப்பதற்கு முன் எங்கு இருந்தோம்?’’ என்று எவருமே யோசிப்பதும், பயப்படுவதும் கிடையாது. ஏனென்றால் காலம் ஒரு திசையில்தான் பயனிக்கின்றது. ஆதலால் வந்ததைப் பற்றியோ, வருவதற்கு முன் என்ன நிலையில் எங்கிருந்தோம் என்றோ யாருமே கவலைப்படுவது கிடையாது. ‘‘எங்கிருந்து வந்தாயோ, அங்கேயேதான் போகப் போகிறாய். எங்கிருந்து வந்தாய் என்பதைக் கண்டுபிடி. நீ போவதைப் பற்றி கவலைப்படவே மாட்டாய்’’ என்கிறது ZEN.

தியானிக்கத் தியானிக்க, மனதை இழந்து வெறும் உடலாய் மட்டும் கிடந்து, பிறகு உடலையும் மறந்து, அந்த உயிர் சக்தியாய் கிடப்போம். அந்த நிலையில் மனம் இருக்காது. உடல் இருப்பதே தெரியாது. மிஞ்சிக் கிடப்பது மௌனமான அமைதிதான்.

அந்த ஆனந்தமயமான அமைதி நிலைக்கு நம்மை வழிநடத்தும் ஒரே சாதனம் ZENதான்.

`Lao Tzu` சொல்கிறார், ‘‘உடல் ஆரோக்கியமே சிறந்த சொத்து, போதும் என்ற மனமே தங்கப் புதையல், தன்னம்பிக்கையே சிறந்த நண்பன், தன்னையே மறந்து கிடப்பது பேரானந்தம், அறிவு வளர வேண்டுமா? கல்வி கற்று வா, ஞானம் வேண்டுமா? நீ கற்றது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மறந்திடு…’’

ZEN உன்னை ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ வழி காட்டுகிறது. ‘வாழ்வில் அவசரம் எதற்கு?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.

‘‘பேராசைப் பிடித்து ஓடிக் கொண்டிருப்பதல்ல வாழ்க்கை; ஆடிப் பாடி, அனுபவித்து கொண்டாடப்பட வேண்டியது அது” என்கிறார் Osho.

Life should not be wasted chasing desires, it is to be celebrated in dance and singing & in enjoyment.

‘நாளை… நாளை’ என்றல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது இந்த உலகம். குழந்தை உள்ளம் கொண்டு ஒவ்வொரு நொடியையும், யார் மனதையும் புண்படுத்தாமல், சிரித்து அன்பாக வாழும் மனிதர்கள் எத்தனை பேர்? போட்டியும் பொறாமையும் தலைவிரித்து ஆடுகிறது.

(தொடரும்)

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பறக்கும்  பாவைகள்!

0
‘எங்களாலும் பறக்க முடியும்’ -ஜி.எஸ்.எஸ். பகுதி - 7 ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ‘டஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3,700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லக்...

பாட்டொன்று கேட்டேன்!

இது மங்கையர்மலரின் விவிதபாரதி... பகுதி -10 மங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க விரும்பும் பாடல்... 1964 ஆம் ஆண்டு வந்த தேவர் பிலிம்ஸின் "வேட்டைக்காரன் "படத்தில் கேவி மகாதேவன் இசையில் கவியரசு...

திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!

 பாகம் - 4   -சுசீலா மாணிக்கம்   திருக்குறளின் நான்காம் அதிகாரம் 'அறன் வலியுறுத்தல்' "அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது  பொன்றுங்கால் பொன்றாத் துணை" பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப்...

இனியில்லை கடன்!

2
சென்ற வார தொடர்ச்சி... சிறுகதை: நாமக்கல் எம்.வேலு ஓவியம்: தமிழ் அதற்கப்புறம் ராமசாமியிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை.  எப்போது பணம் கொடுப்பாய் என்று எப்போவும் போல சோமசுந்தரமும் போன் போட்டு கேட்கவுமில்லை.  ஆபரேசன் நல்லபடியாய் நடந்ததா,...

குரு அருள் திரு அருள்!

பகுதி -2 -நளினி சம்பத்குமார் ஓவியம்; வேதா அனைத்தையும் அருளிடும் குருவின் பார்வை சமஸ்க்ருதத்தில் சுபாஷிதம் அதாவது நல்ல அர்த்தங்கள் பொருந்திய வாக்கியம் ஒன்று உண்டு. குருவின் பார்வை என்பது 1011 பார்வைக்குக் கூட ஈடாகாது, அதற்கும்...