ஜீ மற்றும் சோனி தொலைக்காட்சி சேனல்கள் இணைப்பு!

ஜீ மற்றும் சோனி தொலைக்காட்சி சேனல்கள் இணைப்பு!

இந்திய மீடியா துறையின் ஜாம்பவான்களான ஜீ சேனலும் சோனி தொலைக்காட்சியும் இன்று ஒன்றாக இணைந்துள்ளன.

இந்த இரு பிரபல சேனல் குழுமங்கள் இணைப்புக்கு அவற்றின் நிர்வாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததையடுத்து அவை ஒருங்கிணைக்கப் பட்டன. இந்த புதிய இணைப்புக்குப் பிறகு, ஜீ

குழுமத்தின் நிர்வாக இயக்குநரான புனீத் கோயங்கா நிர்வாக இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) தொடருவார் என கூறப்பட்டுள்ளது.

இந்த இரு சேனல்கள் சார்பாக இரு தரப்பினரும் பிணைப்பு இல்லாத விதிமுறை ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இரு தரப்பினரும், 90 நாள் கால அவகாசத்துக்குள், இந்த ஒப்பந்தத்துக்கு தேவையான தணிக்கைகள், மறு ஆய்வுகள் ஆகியவற்றை நிறைவு செய்வார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்ட பிறகு, அந்த புதிய நிறுவனம் இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.

இரு தரப்பினரும் போட்டியற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். என்றும் ஜீ சேனலின் முதலீட்டாளர்கள் இந்த புதிய நிறுவனத்தில் 47.07 சதவீத பங்கை கொண்டிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்சமயம் ஜீ தொலைக்காட்சி 10 மொழிகளில், 100 க்கும் மேற்பட்ட சேனல்களுடன் 190 நாடுகளை சென்றடைகிறது. பார்வையாளர்களிடையே 19 சதவீத சந்தைப் பங்கு கொண்டுள்ளது. சோனிக்கு இந்தியாவில் 31 சேனல்கள் உள்ளன. இவை 167 நாடுகளில் பார்க்கப்படுகின்றன. பார்வையாளர்களில் 9 சதவீத சந்தைப் பங்கு இதற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com