டாக்டரின் புதிய ட்ரீட்மெண்ட்!

டாக்டரின் புதிய ட்ரீட்மெண்ட்!

ராகவ் குமார்.

.

பொதுவாக ஹீரோக்கள் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை, சக சிறிய நடிகர்களை பாராட்டுவார்கள்.ஆனால் எவ்வளவு பெரிய ஹீரோவும் தன் படத்தில் நடிக்கும் வில்லன் நடிகரை பாராட்ட மாட்டார்கள்.சமீபத்தில் வெளியாகும் படத்தில் ஹீரோவை விட வில்லன்களே ரசிகர்களிடம் அதிக பா ராட்டை பெறுவது தான் காரணம்.

ஆனால் முதல் முறையாக சிவ கார்த்திகேயன் எந்த வித ஈகோவும் இல்லாமல் டாக்டர் படத்தில் தன்னுடன் வில்லனாக நடித்த வினைய் யை பாராட்டியுள்ளார் வினையின் உயரம், அழகான முகம், ஸ்டைலிஷ் நடிப்பு இவற்றால் ஈர்க்கப் பட்டேன் என்று டாக்டர் பட இசை வெளியிட்டு விழாவில் மீடியா முன் வாய்விட்டு பாராட்டினார்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் பல நல்ல விஷங்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். டிவிமூலம் சினிமாவுக்கு வந்து பெரிய ஹீரோ ஆனது. ரசிகர்களிடம் எளிமை யாக பழகுவது.இப்படி பல. வில்லனாக நடித்த வினைய்யை பாராட்டி நடிகர்களுக்குள் பரஸ்பர ஒற்றுமைக்கு வழி வகுத்து இருக்கிறார். டாக்டரின் ட்ரீட்மென்ட் சரியாக இருக்கும் என நம்புவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com