
டோக்கியோவில் நடைபெற்று வந்த பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இந்தியா மொத்தம் 19 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளது.
.இன்றுடன் நிறைவடையும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீர்ர்கள் 5 தங்கப் பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று சாதனை படித்துள்ளனர். இதையடுத்து இந்தியா பதக்க வரிசையில் 24ஆவது இடத்தில் உள்ளது. போட்டியின் கடைசி நாளான இன்று பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண நாகர் தங்கப் பதக்கமும், சுஹாஸ் யத்திராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
நேற்று இந்தியாவின் பிரமோத் பகத் பேட்மிண்டனில் தங்கம் வென்று சாதனை படைத்தார். பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் பிரமோத்.
இந்தியாவின் மனோஜ் சர்கார் பேட்மிண்டன் போட்டியில் வென்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்த பாரலிம்பிக் போட்டிகயில் 93 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 199 பதக்கங்களை பெற்று சீனா முதலிடம் பிடித்தது. பிரிட்டன் 41 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 122 பதக்கங்களை பெற்று 2-ம் இடமும் அமெரிக்கா 37 தங்கம் உள்பட 104 பதக்கங்களை வென்ரு 3-ம் இடமும் பிடித்தது.
இந்தியா வென்ற ஐந்து தங்கப் பதக்கங்களில் இரண்டு துப்பாக்கிச் சுடுதலிலும், இரண்டு பேட்மிண்டனிலும் ஒன்று ஈட்டி எறிதலிலும் கிடைத்தவை. இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகரா வென்றார்.அவரை தவிர ஈட்டி எறிதலில் சுமித் ஆன்டில் 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் மனிஷ் நேவால், பேட்மிண்டனில் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ண நாகர் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இப்போடிகளில் பதக்கங்களை வென்ற வீர்ர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியாவின் விளையாட்டு வரலாற்றில் இந்த டோக்யோ பாராம்லிம்பிக் போட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த போட்டி ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் நீங்காமல் நிற்கும். இந்தியாவின் சார்பாக பங்கேற்ற அனைத்து வீரர்களும் சாம்பியன்தான்.
-இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி.