தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்: அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி ஆளுநர் அதிரடி!

தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்: அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி ஆளுநர் அதிரடி!
Published on

தடுப்பூசி போட்டால் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அதிரடியாக அறீவித்துள்ளார்.

நாடு முழுவதும், கொரோனாவை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல இடங்களில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது வரை நாடு முழுவதும் 75 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் கட்டாயம் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது என்பதால், அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியது அவசியம். உடல்நல பிரச்சனை காரணமாக தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியாதவர்கள், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தால் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

-இவ்வாறு புதுச்சேரி ஆளுநர் உத்தவு பிறப்பித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com