online@kalkiweekly.com

தடைகளைத்  தாண்டி…. இலக்கை நோக்கி….

சிறப்புக் கட்டுரை

 ஹர்ஷா

உலகமே கொரோன தொற்றால் முடக்கப்பட்டிருந்த நிலையில் நீண்ட விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்குமிடையே  ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் அண்மையில் நடந்தது மாற்றுத் திறனாளிகளுக்கான  பாராலிம்பிக்  போட்டிகள். பல நாடுகளில் மூடப்பட்ட விளையாட்டு மைதானங்களால் முறையான பயிற்சிகளை விளையாட்டு வீரர்கள் மேற்கொள்ள முடியாத நிலையில், வீரர்கள் மனம் சோர்ந்து, தளர்ந்து போயிருந்த நிலையிலும் ஜப்பான் இந்த ஒலிம்பிக் போட்டிகளை நிறைய பாதுகாப்பு வசதிகளுடனும்  நடத்த முன்வந்ததே ஒரு பெரும் சாதனை.

அதைவிட பெருமைமிக்க சாதனை இந்தியா இதுவரை கலந்துகொண்ட  பாராலிம்பிக் போட்டிகளிலேயே அதிகப் பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் போட்டி இதுதான். குறிப்பாக, ஆகஸ்ட் 30 அன்று ஒரே நாளில் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.   தேசமே மகிழ்ச்சியில் திளைத்தது. இந்திய வீரர்களின் இந்தச் சாதனை புதிய நம்பிக்கைகளை அளிக்கிறது.

இந்தியா 5 தங்கப் பதக்கங்களையும் 8 வெள்ளிப் பதக்கங்களையும் 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. மொத்தம் 19 பதக்கங்கள். பேட்மின்ட்டன், துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் தலா 2 தங்கப் பதக்கங்களை யும் ஈட்டி எறிதலில் ஒரு தங்கப் பதக்கத்தையும் இந்தியா வென்றுள்ளது. உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகியவை பதக்கங்கள் வென்ற மற்ற போட்டிகள். இப்படி பங்கு கொண்ட போட்டிகளில் எல்லாம் ஏதாவது ஒரு பதக்கம் என்று வெற்றி வாகை  சூடினர்  நம் வீரர்கள்.

பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கும் துப்பாக்கிச் சுடும் வீரர் அவனி லேகாரா, இரு வேறு பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

அவரைப் போலவே துப்பாக்கிச் சுடும் வீரர் சிங்ராஜ் அதானாவும் இரு வேறு பிரிவுகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவினா படேல், அப்போட்டியில் முதல் பதக்கம் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். அது போலவே, வில் வித்தைப் போட்டியில், தனது வெண்கலப் பதக்கத்தின் மூலமாகப் பதக்கக் கணக்கைத் தொடங்கி வைத்திருக்கிறார் ஹர்வீந்தர் சிங்.

வாழ்க்கையையே சவாலாக வாழ்ந்துகொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி களிடையே அதன் விளையாட்டு வீரர்கள் இந்தக் கொடுந்தொற்று காலத்திலும் கடும் பயிற்சிகளுக்குப் பின்னர் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பங்கேற்றுப் பதக்கங்களைக் குவித்திருப்பதன் மூலம் உலகுக்கு இந்தியாவின் மற்றொரு துணிச்சலான முகத்தைக் காட்டி யிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டு வீரர்களின் வெற்றிகள் அளித்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது நமது பிரதமரின் உடனடி வாழ்த்துச் செய்திகள். ஒலிம்பிக் போலவே பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களையும் பாராட்டி இந்தியப் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் உடனுக்குடன் வாழ்த்துச் செய்திகளைப் பதிவிட்டார். வெற்றி பெற்ற வீரர்களைக் கைகுலுக்கி வாழ்த்தும் புகைப்படங்களுடன் வெளிவந்த அந்தச் செய்திகள்,  மக்களின் பெரும் கவனத்தை ஈர்த்தன. நாடு திரும்பிய அவர்களைச் சந்தித்த போது ஒவ்வொரு வீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேச வேண்டும் என்று பணித்திருக்கிறார். இது அந்த வீரர்களுக்கு கெளரவம் மட்டுமல்ல, நம் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் செயல். இந்த எண்ணத்தை வீரர்களுக்கு விதைத்த பிரதமர் பாராட்டுக்குரியவர்,

உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு  சில புள்ளிகளில்  தங்கத்தைத் தவறவிட்டாலும் அவரது தன்னம்பிக்கையும் துணிவும் சிலிர்க்க வைக்க்கிறது.

தங்கம் வென்றிருக்கலாம். பரவாயில்லை.  இன்றிலிருந்து அடுத்த பாரீஸ் ஒலிம்பிக்குக்கு தயார் செய்து கொள்வேன் என்ற அவரது வார்த்தைகள்  இன்றைய இந்திய இளைஞர்களின் நம்பிக்கைக் குரலின் எதிரொலி. தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  இம்முறை ஆட்சியாளர்களும் ஊடகங்களும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு அளித்த அதே கவனத்தை  பாராலிம்பிக்  போட்டிகளுக்கும் அளித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து விளையாட்டு அமைப்புகளும், தனியார் பெரு நிறுவனங்களும் இந்த வீரர்களுக்குப் பொருளாதார ரீதியாகவும், பயிற்சிகளில் அதி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும். இந்திய பாராஒலிம்பிக் கமிட்டி இந்த விஷயத்தில் மிகத் தீவிர கவன செலுத்தி வாய்ப்புக்காகக் காத்திருக்கும் எண்ணற்ற இளைய மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அடுத்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்னும் அதிக பதக்கங்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க  நம்பிக்கை ஊட்டவேண்டும்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....

 தலைவி விமர்சனம்

1
- ராகவ்குமார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சினிமா, அரசியல் பயணத்தை வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாகத் தந்திருக்கிறார் டைரக்டர் விஜய். படத்தில் எந்த ஒரு ரியல் கேரக்டர் பெயரையும் மாற்றாமல், அப்படியே தந்திருப்பதும், ஒரு...
spot_img

To Advertise Contact :