தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம்!

தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம்!
Published on
(டோக்கியோ 2020 பாராலிம்பிக்ஸ்)
-ஆர்.மினலதா,மும்பை

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020 கோலாகலமாக நடந்து முடிந்து, 15 நாட்கள் இடைவெளிவிட்டு ஆகஸ்ட் 24, 'டோக் கியோ பாராலிம்பிக்ஸ் 2020' ஆரம்பமாகி, செப்டெம்பர் 5 வரை நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகள் உற்சாகத்துடன் விளையாடினர்.

* 162 நாடுகளிலிருந்து 4,500 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். 540 நிகழ்வுகளும், 22 வகை விளையாட்டுகளும் இதில் இடம் பெற்றன.

* இந்திய பாராலிம்பிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட மாரியப்பன் தங்கவேலு தலைமை யில் 40 வீரர்கள்; 14 வீராங் கனைகள் என மொத்தம் 54 பேர்கள் அநேகப் போட்டிகளில் பங்கேற்றனர்.

* தொடக்கவிழா அணிவகுப்பு சமயம், மாரியப்பனுக்கு இயலாத காரணத்தால், டெக்சந்த் இவருக்குப் பதிலாக இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்தார்.

* ஆர்ச்சரி, பாரா கனோயிங், அதெலெடிக்ஸ், ஷீட்டிங், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், டைக்கு வாண்டோ போன்ற விளையாட்டுகளின் வெவ்வேறு பிரிவுகளில் இவர்கள் பங்கேற்றனர். வெற்றிவாகை சூட, தீவிர பயிற்சியினை மேற்கொண்டனர்.

* பாராலிம்பிக்ஸ் போட்டியை 1964ல் நடத்திய டோக்கியோ, தற்சமயம் இரண்டாவது தடவையாக நடத்திய முதல் நகரமாகும். இது 16ஆவது பாராலிம்பிக்ஸ் போட்டி ஆகும்.

* பாராலிம்பிக்ஸ் என்றாலே,உத்வேகம்; குறிக்கோள்; தைரியம் என்பது நமக்குத் தெரியும்.

* சிறகு பந்து மற்றும் டைக்குவாண்டோ விளையாட்டுகள் இந்த பாராலிம்பிக்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டன.

* பூடான், கயானா நாடுகளின் முதல் பங்கேற்றம் நடைபெற்றது.

* கோல்பால் (goal ball)விளையாட்டில் இரு குழுக்கள். ஒவ்வொன்றிலும் 6 – 6 பேர்கள் இருந்தாலும் களத்தில் 3 – 3 பேர்கள் மட்டுமே விளையாட முடியும். ஒரு தடவைக்கு 12 நிமிடங்களான இரண்டு தடவைகள் விளையாடப்படும் இவ்விளையாட்டில், தரையில் அமர்ந்தவா@ற உருண்டு, புரண்டு, பந்தை லாவகமாக உருட்டி விளையாடி கோல்போட வேண்டும்.

* டோக்கியோ பாராலிம்பிக்ஸின் மஸ்காட் `Someity`ஆகும். உடலும் தலையும், Ping கலர் இச்சி மத்ஸீ Pattern.இது `Someiyoshino`(ஒரு வகை செர்ரி ப்ளாஸம்) லிருந்து வந்தது. மூளை மற்றும் உடல் வலிமையைக் குறிக்கும் வகையில் Spirit of Paralympics`ஐ விளக்குகிறது.

* மஸ்காட்டில் இருக்கும் நிறம், வெற்றிப் பூச்செண்டுகளில் (Victory Bouguet)சேர்க்கப்பட்டு இருக் கின்றன. ஒரு வீரனுக்கு பலர் உதவியாக இருப்பதை குறிக்கும் வண்ணம் நிப்பான் பூக்களால் அமைக்கப்பட்ட இவை, அனைவரது நல்வாழ்த்துக்களையும் குறிக்கும் வண்ணம் வெற்றிப் பூச்செண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

* பேட்மிண்டனில் தங்கம் வாங்கிய இந்திய வீரர் பிரமோத் போகட் (Pramod Pogat) ஐ.ஐ.டி.யில் எலக்டிரிக்கல் இஞ்சீனியர் பட்டம் பெற்றவர். ஐந்து வயதிலிருந்து இடது கால் பாதிக்கப்பட்டவர்.

* பேட்மிண்டனில் ஜெயித்து தங்கம் வென்ற கிருஷ்ணாநாகர் மற்றும் வெள்ளி வென்ற சுகாஸ் யத்திராஜ் இருவரும் தங்களது பரிசை, கோச் கௌரவ் கன்னாவிற்கு அர்ப்பணித்தனர்.

* கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு ஆசிரியர் தினத்தன்று மரியாதை அளித்தது பெருமைக்குரிய விஷய மாகும். சுகாஸ் ஐ.ஏ.எஸ். படித்தவர். நொய்டா District Collector.

* டைக்குவாண்டோ வீராங்கனை அருணாவிற்கு கால் எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக வெண்கலம் பெறும் வாய்ப்பு நழுவியது. பேட்மிண்டன் மிக்ஸ்ட் டபுளும் கிடைக்கவில்லை. இருந்தாலும் இறுதிவரை முயற்சி செய்து 4ஆவது இடத்தை பெற்றது பாராட்டுக்குரிய செயல்.

விதியின் விளையாட்டு

*வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமாருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மற்ற வீரர்கள் ஆட்சேபணை செய்ததின் பேரில், தொழில்நுட்பக் குழு வினோத்குமாரை பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் இவர் இந்தப்பிரிவில் பங்கேற்கத் தகுதியற்றவர் என அறிவித்து, பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. 19.91 மீட்டர் தொலைவு வீசியவரிடம் விதி சதி செய்துவிட்டது.

* 19 வயதான குமாரி அவனி லேகரா ஜெய்ப்பூர்வாசி. கார் விபத்து மூலம் வாழ்க்கைமாறிப் போனாலும், தளராமல், உறுதியுடன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். முந்திய உலக சாதனையை 249.6 புள்ளிகள் எடுத்து சமன் செய்தார். மற்றொரு பிரிவிலும் வெண்கலம் வென்றார்.

* உட்கார்ந்து விளையாடும் கோல் பந்து போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை லோரா வெப்ஸ்டர் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் விளையாடினார்.

* ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடிய எகிப்து வீரர் இப்ராஹிம் ஹமாட்டோ, பத்தாவது வயதில் டிரெயின் விபத்தில் இரு கைகளையும் இழந்தவர். ஆனாலும், விடாமுயற்சி செய்து காலால் பந்தைத் தூக்கிப்போட்டு, வாயில் கவ்விக் கொண்டிருந்த மட்டையால், பந்தை அநாயசமாக அடித்து விளையாடினார். பாராலிம்பிக்ஸில் இவர் இரண்டாவது முறையாகப் பங்கேற்கிறார்.

* இந்தியாவிற்கு ஐந்து தங்கம்; எட்டு வெள்ளி; ஆறு வெண்கல மென மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்தது அபார சாதனையாகும்.

* நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா தலைமையில் இந்தியக் குழுவினர் அணி வகுத்தனர்.

* அடுத்த பாரா ஒலிம்பிக்தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8 வரை நடைபெற இருக்கிறது. வெற்றி வாகை சூடியவர்களையும் மற்றவர்களையும் வணங்கி வாழ்த்துவோம்.

மாற்றுத் திறனாளியென எண்ணி மண்ணோடு மக்கிப் போகாமல் மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு மக்களெதிரே திறமைகளை ஒளிவீசச் செய்து மற்றவரும், உற்றவரும் மெச்ச மகிழ்ச்சியையும், பரிசினையும் பெற்றவர்கள் வாழ்க! வளர்க!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com