தமிழகத்தில் போயிங் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பு: முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்!

தமிழகத்தில் போயிங் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பு: முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்!

தமிழகத்தில் போயிங் விமான நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் நிறூவனம் தொடங்குவதற்கான ஒப்பந்தம், முதல்வர் மு..ஸ்டாலின் முன்னிலையில் இன்று வழங்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் போயிங் விமான நிறுவனத்துக்கு முக்கிய உதிரி பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்த உத்தரவை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் போயிங் நிறுவனம், சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனத்துக்கு அளித்தது. உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்டகால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து சேலம் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். மேலும் இந்த ஒப்பந்தம் மூலமாக 1,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்த சாதனை முதல்வரின் தொலைநோக்குப் பார்வையான 'தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது' (Made in Tamil Nadu) திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.

இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறீப்பில் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com