0,00 INR

No products in the cart.

தராசு / நீங்கள் கேட்டவை

முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி?

ஆர்.நாகராஜன், செம்பனார்கோவில்

நம்பிக்கையளிக்கிறது அம்மா உணவகம், அதே பெயரில் செயல்பட அனுமதி. சட்டமன்றத்தில் கட்சி உறுப்பினர்களின் புகழாரத்தைக் கண்டித்திருப்பது, இரவு ஒரு மணிக்குக் கூட அமைச்சர்களுக்கு போன் செய்து துறை நிலவரம் கேட்பது போன்றவை நம்பிக்கை அளிக்கிறது.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

? வருங்காலத்தில் தி.மு.க.வை வழிநடத்தப்போவது உதயநிதி ஸ்டாலின்தான்’ என் கிறாரே அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி?

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட் டும் வாரிசு அரசியல் உண்மை தான் என்பதன் ஒப்புதல் வாக்கு மூலம்.

திருவரங்க வெங்கடேசன்,பெங்களூரு

? தாலிபான்‌ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நமது தூதரகங்களை அவசரமாக மூடியது சரியான நடவடிக்கையா?

தூதரகத்தை மூடுவது என்பது பாதுகாப்புக்காக மட்டு மில்லை. தீவிரவாதிகள் வன்முறையில் கைப்பற்றிய அரசுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்பதைக் காட்டும் முதல் அடையாளம். அந்த வகையில் நடவடிக்கை சரியே.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

? பா.ம.க.வைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே?

உங்களால் மட்டுமில்லை கார்த்திகேயன்,எங்களாலும்தான் என்கிறார்கள் அந்தக் கட்சியின் தொண்டர்கள்.

நெல்லை குரலோன், பொட்டல்புதூர்

? மகிழ்ச்சியை இலக்காக வைத்து வாழ்வதில் தப்பில்லையே?

தவறில்லை. எது மகிழ்ச்சி என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கும்வரை.

கே. இந்து குமரப்பன், விழுப்புரம்

? அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளாரே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?

இன்று வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே, அந்த நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தான். இந்தியாவில் உள்கட்டமைப்பு வளர்ச்சியினை மேம்படுத்தினால், நிச்சயம் பொருளாதாரம் மேம்படும் என்ற அரசின் திட்டத்திற்குத் தேவையான நிதியினை தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் மூலம் திரட்ட முயல்கிறது.

குறிப்பாக, மத்திய அரசின் வசம் இருக்கும் மின்சாரம், நெடுஞ்சாலைத் துறைகள், விமானத் துறை, சுரங்கம், ரயில்வே உள்ளிட்ட 13 துறைகளில் இருக்கும் சில நிறுவனங்களின் பங்குகள், சொத்துக்களைப் பணமாக்குதல், தனியாருக்குக் குத்தகைக்கு விடுதல், இணைப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றின் மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் நீண்ட காலக் குத்தகை என்பது கிட்டத்தட்ட விற்பனைக்குச் சமம். அதனால் இந்தத் திட்டத்தின் மூலம் வரிப் பணத்தில் உருவான திட்டங்கள் பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தை எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள். மேலும் தனியார் பங்கீட்டால் அரசின் நலத் திட்டங்களான இலவச மின்சாரம், குறைந்த பஸ் கட்டணம் போன்றவை காணாமல் போய்விடும் சூழலும் இருக்கிறது என்கின்றன எதிர்க்கட்சிகள். இந்த விஷயங்களைத் தெளிவுபடுத்தாமல் அரசு திட்டத்தை நிறைவேற்று மானால் அது தோல்வி அடையும்.

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

? ‘மக்கள் செல்வாக்கு உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் வாழ்ந்த காலத்திலேயே துணிச்சலாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கி வெற்றிநடை போட்டவர் விஜயகாந்த்’ என்று விஜயகாந்தை, தமிழக காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு புகழ்ந்துள்ளாரே?

தன்னைக் கண்டுபிடித்து அரசியலில் வாழ்வு அளித்த, துணை சபாநாயகராகவும், அமைச்சராகவுமாக்கி அழகு பார்த்த எம்.ஜி. ஆரை மறந்துவிட்டார்.

மணிகண்டன், சேலம்

? இன்னும் கிளி ஜோசியம் நடை முறையில் இருப்பது எதைக் காட்டுகிறது?

எதன் மூலமாவது தன் எதிர்காலத்தை அறிந்து கொள்ள முடியுமா என்ற மனித மனத்தின் பல வீனத்தை. இந்தப் பல வீனம் இருக்கும் வரை கிளி என்ன, எலி ஜோஸ்யம் கூட நடைமுறையில் இருக்கும்.

கண்ணன், நெல்லை

? மாயை, நிழல் என்ன வித்தியாசம் தராசாரே?

நிழலுக்கு ஒரு நிஜம் இருக்க வேண்டும். மாயைக்கு அதை நம்பும் மனம் வேண்டும்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

? பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் புத்தகப் பையில் அ.தி.மு.க. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி புகைப்படம் அப்படியே இருக்கட்டும் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் பற்றி?

13 கோடி ரூபாயில் இதனை அழித்து விடலாம் என்று யோசனை கூறியபோதும், ‘அதனை மாணவர்களின் நலன்களுக்காகப் பயன்படுத்துவேன். அவர்கள் படமே இருந்து விட்டுப் போகட்டும்’ என்று ஸ்டாலின் கூறியது தமிழக அரசியலில் புதிய திருப்பம்.

ஆனால் கேள்வி, ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்தும் பள்ளி மாணவர்களுக்கான 65 லட்சம் புத்தக பைகளில் ஜெயலலிதா, ஈ.பி.எஸ். படங்களை முந்தைய அ.தி.மு.க. அரசு அச்சடித்து விட்டது குறித்து எவராலும் கேள்வி எழுப்பப் படாததுதான் ஆச்சர்யம்.

ஜி.ஆனந்தமுருகன், சென்னை

? தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர் யார்?

இப்போது தமிழ் சினிமாவில் பெரிய நகைச்சுவை வறட்சி ஏற்பட்டுள்ளது. கவுண்டமணி, செந்தில் காமெடி பல சமயங்களில் அருவருப் பின் எல்லையைத்தொடும். விவேக், சந்தானம், சதீஷ், சூரி போன்றவர்களின் நகைச்சுவை வசனத்தை நம்பியிருப்பவை. உண்மையான நகைச்சுவை என்பது காட்சியைப் பார்த்தவுடன் மனம்விட்டுச் சிரிப்பதாகயிருக்க வேண்டும். இதற்கு, நடிகருக்குப் பாத்திரத்தின் இயல்பைப் பிரதிபலிக்கும் உடல்மொழியும் வசனங்களைப் பேசும் டைமிங்கும் அவசியம்.

இவற்றை டி.எஸ்.பாலையா, நாகேஷுக்குப் பின் எந்த நடிகரும் செய்யவில்லை. ‘காதலிக்க நேரமில்லை’ படம் பாருங்கள். சிறிது பிசகினாலும் அசட்டு நாடகமாக மாறியிருக்க வேண்டிய படம். பாலையா, நாகேஷின் நடிப்பால்தான் வெற்றிகரமானது என்பது வரலாறு. வடிவேலு மீண்டும் வருகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

குமரப்பன், விழுப்புரம்

? தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் படத்திலிருந்து தமிழக எழுத்தாளர்கள் சுகிர்தராணி, பாமா ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டதைப் பற்றி?

நீக்கப்பட்டதன் காரணம் தனிமனிதர். ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது எனவும், பாடத்திட்டம் ஒருதலைபட்சமாக வும் இருக்கக் கூடாது எனவும் தில்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்திருக் கிறது. அப்படியானால் 15 பேர் கொண்ட குழு எப்படி இவற்றைத் தேர்ந்தெடுத்தனர் என்ற கேள்வி எழுகிறது.

ரேவதி பாஸ்கரன், பெங்களூரு

? ‘அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்’ என்று சொல்லு கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று எளிமையாகப் புரியும்படி சொல்லுங்களேன்?

எந்த ஒரு விஷயத்தையும் வழக்கமான முறையில் இல்லாமல் மாறுபட்டுச் சிந்திப்பது எனப் புரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக, தன்னையே அறிந்துகொள்வது என்ற தலைப்புக்கு ஒரு போட்டியில் பரிசு பெற்ற இந்தப் படம்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அருள்வாக்கு

0
விநாயகர் வழிபாடு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ‘தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப் பதேயாகும். ‘கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்பவேண்டும் என்பதுகூட இல்லாமல்,...

உங்கள் நூலகத்துக்குப் பெருமை சேர்க்கும்!

0
நூல் அறிமுகம்,நறுக்குத் தெறிப்புகள் அனுராதா கிருஷ்ணசாமி,திருமூலன் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி, அவர் எழுதிய சிறுகதைகளில், சிறந்த இருபது கதைகளடங்கிய தொகுப்பு ஒன்றை சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளின் தேர்வையும் தொகுப்பையும் மாலன் செய்திருக்கிறார். தொகுப்பில்...

நீர் சூழ்ந்த சிவலிங்கமும் நிகரில்லா அர்ச்சகரும்…

0
முகநூல் பக்கம் எழுத்தும் ஓவியமும் ராஜன் ஒரு ஓவியனின் டைரியிலிருந்து... பல நாட்களாக அழகிய சிவலிங்கம் ஒன்றை ஓவியமாக வரைய வேண்டும் என்று ஆசை. இதற்காக ஒரு நல்ல மாடல் படம் ஒன்றை எணிணிஞ்டூஞு Google imagesல் தேடும்போது,...

பாலாபிஷேகம்

0
தமிழ் ஹெச்.என்.ஹரிஹரன் “மெய்யாலுமா சொல்றே..?” காலி பிளாஸ்டிக் குடங்களின் கழுத்திற்குள் கையை நுழைத்து பிடித்தபடி ஓட்டமும் நடையுமாக திரேசாவைப் பின் தொடர்ந்தாள் கண்ணம்மா. “ஆமாக்கா.. விடிகார்த்தால டமார்னு ஏதோ சத்தம் கேட்டுச்சு. அப்பத்தான் நானும் புரண்டு படுத்தேனா... எப்பவும்...

நியாயமா அய்யா?

0
விஜய்டாலி ஜெகநாதன் வெங்கட் “வாடா... வா...” என்று அவனை வரவேற் றேன். அவனுடைய மகனைப் பார்த்து, “மதன், நல்லாப் படிக்கிறியா?” என்று வினவினேன். அவன், “ஆமாம்” என்று தலையாட்டினான். “என்ன சுப்பு, திடீர் வருகை?” என்று வினவினேன். “ஒரு...