0,00 INR

No products in the cart.

தராசு பதில்கள் / நீங்கள் கேட்டவை

? நீங்க என்ன தான் GO BACK MODI சொன்னாலும், தமிழ்நாட்டுக்கு 2000 கோடி கொடுத்துயிருக்கார் மோடி ” என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளாரே? மத்திய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் வருவாய் ஈட்டிக்கொடுத்தால், அதில் 35, 40 பைசாவைத்தான் நமக்கு தருகிறார்கள். எனவே, கருணை அடிப்படையில் நிதியை பிரதமர் தரவில்லை. இது மக்கள் பணம். வர வேண்டியதை தான் தந்திருக்கிறார்கள் என்று நிதி அமைச்சர் பதிலளித்திருக்கிறாரே பார்த்தீர்களா? அமெரிக்கா, சீனாவை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் தான் உள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளாரே? இது சரியா?

கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.

கனவுகளுக்கூட எல்லையுண்டு. ஒன்றிய அரசு உருவாக்கும் புள்ளிவிபரங்களுக்கு கிடையாது

? தி.மு.க. அரசு செயல்பாடுகள் குறித்து ஆறு மாத காலத்திற்கு பிறகு தான் கூறமுடியும்` என்று ஹே திமுக தலைவர் விஜய பிரபாகரன் கூறியிருக்கிறாரே?

மஹாலட்சுமி , திருநகர்

அதற்குள் அவர் தமிழக அரசியலை கற்று புரிந்து கொண்டுவிடுவார் என நம்புவோம்.

? கடந்த 7 ஆண்டுகளில் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு மூலம் மத்திய அரசு ரூபாய் 23 லட்சம் கோடி சம்பாதித்துள்ளதே இந்த பணம் எங்கே போகிறது, என்று ராகுல் கேட்டுள்ளாரே?

ஆ. மாடக்கண்ணு , பாப்பான்குளம்

வளர்ச்சிக்குத்தான். என்பது அரசின் பதில். ஆனால் 2014-ம் ஆண்டு மே மாதத்தில் நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜனவரி 2021 வரை இதுவரை ஒட்டுமொத்தமாக ரூபாய் 5,749 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளது இந்திய அரசு. என்கிறது தகவல் பெறும் உரிமை மூலம் பெற்ற பதிலில் இருந்து புரிகிறது .

? பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியை சமூக நீதி நாளாக அறிவித்ததை பா.ஜ. வரவேற்றிருக்கிறதே. காரணம் , சமூக நீதி காவலரான மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17 என்பதால் தான் என்று பா.ஜ.வினர் கூறுவது பற்றி?

நெல்லை குரலோன் ,பொட்டல்புதூர்.

அன்று மோடியின் பிறந்த நாள் என்பதாலும் அவர் தான் சமூக நீதி காவலர் என்று பிற மாநிலங்களில் சொல்லிக்கொள்ள ஒரு நல் வாய்ப்பு என்பதாலும் .

? திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் ரஜினியின்` அண்ணாத்தே` பட போஸ்ட ருக்கு அவரது ரசிகர்கள் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம்

செய்துள்ளார்களே?

மு. மதிவாணன், அரூர்

ரசிகர்களின் முட்டாள்தனத்தின் உச்சகட்டம். ரஜினி இது மாதிரி விஷயங்களைத் தவிர்க்க அவரது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் .

? தமிழகபுதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர். என். ரவி குறித்து…

ஜோதி ,தீருப்பூர்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் அவர் வந்து பதவி ஏற்பதற்கு முன்னரே அரசியல் க்ட்சிகளின் சர்ச்சைகளின் ஒசை எழந்திருக்கிறது. நாகாலாந்தில் போராட்ட குழுவினருடன் நடந்த சமரச பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் அதை முன்னெடுத்த ஆளுநரை மாற்ற பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்ளின கோரின. அவ்ர்களைத் திருப்திபடுத்தம் அதே நேரத்தில் பிரதமரின் ஆலோசகர் அஜித் தோவலின் செல்லப் பிள்ளைக்கு ஒரு பெரிய மாநிலத்தின் கவர்னர் பதவி அளிக்க்பட்டிருக்கிறது.

? ஒரு தமிழ் படத்துக்குப் பெயர் இடியட்டாமே?

தமிழ் நேசன், சேலம்

சில தமிழ் படங்கள் ரசிகர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கும் நேரத்தில் அதை நேரடியாக் தலைப்பிலேயே சொல்லும் மிர்ச்சி சிவாவின் துணிவைப் பாராட்டத்தான் வேண்டும் .

? எனது ஆசிரியர் வழி காட்டி கருணாநிதி என்கிறாரே குஷ்பு? அன்புடன்

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

கலைஞர் பாஜகவிற்கு செல்ல வழி காட்டுவார் என்ற உண்மை இவர் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது.

? விநாயகா் சதுா்த்தி ஊா்வலம் தடை நியாயமா?

ஆா்.நாகராஜன், செம்பனாா்கோவில்

அரசியலிலிருந்து விநாயகரை முன் னெச்சரிக்கையுடன் காப்பாற்றி யிருக்கிறார்கள் .

? கோவில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதே?

கே. இந்து குமரப்பன் ,விழுப்புரம்.

மொட்டை போடுவதாக வேண்டுதல் செய்து அதை காணிக்கையாக நிறைவேற்றுவது மரபு. காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கருத்தில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு வரவேற்க தக்கது. அதை விட பாராட்டதக்கது . அப்படி வசூலிக்கும் கட்டணத்தில் ஒரு சிறு பகுதி அந்தப் பணியைசெய்யும் பணியாளார்களுக்கு கோவில் நிர்வாகங்களால் வழங்கப்பட்டுவந்ததைச். சமன் செய்ய அரசே அவர்களுக்கு மாதந்திர ஊதியம் வழங்க ஆணையிட்டிருப்பது தான்

? மோடி பிரதமரான பிறகு நாட்டில் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமைப்படுகிறாரே?

மு. மதிவாணன், அரூர்

அமைச்சருக்கு செலக்டிவ் அம்னிஷயா என்று தோன்றுகிறது, 2019 பிப்ரவரி 14 அன்று ஜம்மு காஷமீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் அநியாமாக, உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது. அப்போது யார் பிர்தமர் என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு மறந்துவிட்டது.

? தமிழகம் முழுவதும் வீடுகள் முன்பு ஒரு லட்சம் விநாயகர் வைத்து வழிபாடு செய்யச் சொல்லியிருந்தாரே?

ராஜாக்கனி, தூத்துக்குடி

முதலில் வேலைக் கையில் எடுத்தார்கள் மாநில தேர்தலில் அது வேலைக்காகவில்லை. இப்போது கணேசரை உள்ளாட்சித் தேர்தலுக்காக கையில் எடுத்திருக்கிறார்கள். காப்பாற்றுவரா எனப் பார்க்கவேண்டும், காப்பாற்றாவில்லையென்றால் அடுத்து இராமர் வழிபாடு அறிவிக்கப்படும்

? தராசாரின் பதில்களிலிருந்து அவரது அரசியல் நிலைப்பாடு என்னவென்று புரியவில்லையே?

சண்முகன் ,நெல்லை

தராசாருக்கு யாரிடமும் பேதமில்லை; சார்பும் இல்லை. விமரிசிக்க வேண்டிவந்தால் விமரிசிப்பதயும், பாராட்ட ஒரு தருணம் கிடைத்தால் பாராட்டுவதையும் தராசு பதில் சொல்லத்தொடங்கிய காலத்திலிருந்து செய்துகொண்டிருக்கிறார். . தாரசு ஒரு நேர்மையான பத்திரிகையாளார், ஒரு பத்திரிகையாளன் எந்த அரசியல் கட்சி மீதும் சாய்ந்திருக்கமுடியாது. அப்படி சாய்ந்திருப்பவன் நேர்மையான பத்திரிகையாளாரக இருக்க முடியாது.

? குடியுரிமை சட்டத்து எதிராக தமிழக அரசு நிறைவேற்றியதால் என்ன பலன்…

ராகவன், திருச்சி

தமிழ்நாடு மட்டுமில்லை. 8 மாநிலங்கள் இதுவரை இந்தச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன, ஒன்றிய அரசுக்கு இம்மாதிரி சட்டங்களைத் திருத்த அதிகாரம் இருந்தாலும் மக்களின் எதிர்ப்பை காட்டும் அடையாளங்கள் இந்தவகை தீர்மானங்கள் . உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகளின் தீர்ப்புக்கு இந்த தீர்மானங்கள் உதவக்கூடும்

? கறுப்பு பணம் ஒழிந்துவிட்டதா?

கண்ணகி , திண்டுக்கல்

2014 தேர்தல் அறிக்கையில் ஆர்பாட்டமாக அறிவித்து பாஜக மறந்த விஷயங்களில் இது முதன்மையானது. கறுப்பு பல வண்ணங்களாக வடிவெடுத்து அதிகரித்து கொண்டிருப்பது தான் உண்மை.

? கஜானா காலி கடன்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று வெள்ளை அறிக்கை சமர்பித்துவிட்டு,வரசு செலவு திட்டத்தில் ஏப்ரல் என்று அறிவித்தஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை ஜனவரியில் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்களே?

முத்துகுமரன், சேலம்

இதன் மூலம் பல லட்ச அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என்பது மகிழ்ச்சியை அளித்தாலும் மூன்று மாத காலத்துக்கு அரசுக்கு கூடுதலாக 1600 கோடிகள் செலவாகும். வருமானம் குறைவாகயிருக்கும் காலகட்டத்தில் திட்டமிட்டபடி இல்லாமல் இப்படி செலவுகளை அதிகரிப்பது நிதி மேலாண்மையை சீர்குலைத்துவிடும் .

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....